பைனாப்பிள் சிக்கன்

தேதி: July 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

1. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் [1 இன்ச் அளவில்] - 12
2. பைனாப்பிள் துண்டுகள் [1 இன்ச் அளவில்] - 8

சிக்கன் மேரினேட் செய்ய:

3. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
4. சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
5. சர்க்கரை - 1 தேக்கரண்டி
6. உப்பு
7. மிளகு தூள் - 1/4 தேக்கரண்டிக்கும் குறைவு
8. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
9. பைனாப்பிள் சாறு
10. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

பைனாப்பிள் மேரினேட் செய்ய:

11. உப்பு
12. மிளகாய் தூள்
13. எலுமிச்சை சாறு


 

சிக்கன் மேரினேட் செய்ய கொடுத்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும். பைனாப்பிள் சாறுக்கு பதிலாக 2 துண்டு பைனாப்பிளை நைசாக மசித்து சாறோடு கலந்து கொள்ளவும்.
இதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
பைனாப்பிள் மேரினேட் செய்ய கொடுத்தவற்றை சேர்த்து கலந்து அதில் பைனாப்பிள் துண்டுகளை போட்டு பிரட்டி வைக்கவும்.
இனி ஒரு துண்டு சிக்கன், ஒரு துண்டு பைனாப்பிள் என skewers’ல் அடுக்கவும்.
இதை அவனில் உள்ள க்ரில்லர் / மைக்ரோவேவில் உள்ள க்ரில்லர் / அடுப்பில் தவாவில் சிறிது எண்ணெய் விட்டோ உங்கள் விருப்பம் போல் க்ரில் செய்யலாம்.
எல்லா பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்து சிக்கன் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான பைனாப்பிள் சிக்கன் தயார்.


இதை க்ரில் செய்ய எந்த க்ரில்லர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உங்கள் விருப்பம். எதுவாக இருந்தாலும் அதிக சூடு இல்லாமல் இருப்பது அவசியம். மிதமான சூட்டில் க்ரில் செய்ய வேண்டும். காரம் உங்கள் சுவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளவும். இது குறைவாகவே இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்