தேங்காய் ரொட்டி - 2

தேதி: July 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

இட்லிஅரிசி - அரைக் கிலோ
தேங்காய் - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 15 (காரத்திற்கேற்ப)
உப்பு - தேவைக்கு
துவரம்பருப்பு - 50 கிராம்
கடலைபருப்பு - ஒரு கைப்பிடி
எண்ணெய் - பொரிக்க தேவையானது


 

அரிசி, பருப்பு வகைகளை நன்கு அலசிவிட்டு 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசி பருப்புடன், சோம்பு, வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். கொரகொரப்பாக மசிந்ததும் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிரசம் தட்டுவது போல் தட்டி போட்டு உப்பியதும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான காரமான தேங்காய் ரொட்டி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ஸ்வர்ணா,

தேங்காய் ரொட்டி, நல்லா சாஃப்ட் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது, செய்து பார்க்கிறேன்.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

wow nalla oru snacks item. but naan indha ingredients ellam adadosai ku dhan use pannuven. neenga pudusa onnu sollirukinga. time kidaikum podhu senju parthutu soldren. valthukkal madam.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

சுவையான சிற்றுண்டி. வாழ்த்துக்கள். எனக்கு அப்படியே அந்த பிளேட் ஐ பார்சல் பண்ணிடுங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் சுவா எப்படி இருக்க? உன்னோடு பேசி பல பல நாட்கள் ஆகுது.. ரொம்ப மிஸ் பண்றேன்.. சுவா வித்தியசமான குறிப்பா இருக்கடா. ரொம்பவும் டேஸ்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்றேன்.. சூப்பர்டி செல்லம்.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

hai fd enakku arusuvaila eppadi na en kurippai pathivu pannuradhu plz reply

ANAIVARAYUM NESI

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா முதல் வருகைக்கும் பாராட்டிற்க்கும் மிக்க நன்றிங்கம்மா.
ஆமாங்கம்மா ரொம்ப சாஃப்ட்டா இருக்கும் முடியும்போது செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவதி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு வாழ்த்துக்களுக்கு நன்றி,பார்சல் அனுப்பிட்டேன் வாங்கிக்கோங்க :)
நேரில் வாங்க சுட சுட செய்து தரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே நான் ரொம்ப நல்லாருக்கேன் பா நீ எப்படி இருக்கே ஆமாம் பேசி ரொம்ம்ம்ம்ப நாள் ஆகுது :(

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தோழி அகல்யா உங்க குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படம் பிடித்து அட்மின் அண்ணாவுக்கு மெயில் பன்னுங்க அவங்க வெளியிடுவாங்க

அட்மின் அண்ணா ஐடி arusuvaiadmin@gmail.com

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நல்லா இருக்குங்க. க்ரைண்டரில் போட சொல்லும் ஒன்னு தான் இடிக்குது... ;( சரியான சோம்பேரி நான். ஆனா இப்ப உறவுகள் வராங்களே... அவசியம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றி,மிக்சியிலும் போடலாம் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்கனும் கெட்டியா இருக்கனும் அதான் முக்கியம் செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, தேங்காய் ரொட்டி - முகப்பிலேயே கண்டுகிட்டேன் நம்மாள் சுவாவோடது தான்னு ;) இது நல்ல காரசாரமா இருக்கும்னு நினைக்கறேன் பா. 15 மிளகாய் போட சொல்லியிருக்கீங்க. எனக்கு புழுங்கல் அரிசி கிடைக்காது பா. அதான் இங்கே பெரிய தொல்லை. கிடைக்கும்போது செய்து சாப்ட்டு உங்களுக்கும் கொரியர் அனுப்பி விடுறேன்பா. இதோட கறிவேப்பிலையும் சேர்த்தா இன்னும் கமகமன்னு இருக்கும்ல பா. மழைகாலத்துக்கு ஏற்ற நல்ல காரசார டிபன் தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்வர்ணா,
தேங்காய் ரொட்டி எளிமையா இருக்கு..
செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கல்ப்ஸ் கண்டுகிட்டீங்களா :)

காரம் தெரியாது பா ஏன்னா தேங்காய் நிறைய சேர்க்கிறோம்ல,புலுங்கல் அரிசி கிடைக்கும் போது செய்து பாருங்க மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி மிக்க நன்றி செய்து பார்த்து சொல்லுங்க...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர் குட்டி சூப்பர் பா ரொம்ப எளிமையா இருக்கு நோன்பு திரக்க ஒரு நாள் செய்து பாத்துட வேண்டியதுதா