முன்னேற உதவுங்கள் தோழிகளே

என் கனவர் வெளினாட்டில் உல்லார்.எங்கலுக்கு குழந்தை இல்லை.மருத்துவர் எங்கலை சேர்ந்து இருக்க சொல்கிரார்.என் கனவர் வெளினாட்டு வaaழ்க்கையை முடித்துவிட்டு வரலாம் என்ற முடிவோடு இருக்கிறார் பி காம் படித்து உல்லார்.
எனது கேள்வி என்னவென்றால்.
என் கனவர் சொந்தமாக தொலிழ் தொடஙினால் தற்பொழுது எந்த தொழிலில் அதிக வருவாய் ஈட்டலாம்.
அல்லது என் கனவரின் படிபிகேற்ற நல்ல வேலை எங்கு எந்த மாதுரியான வேலை கிடைக்கும்.நாங்கல் தஞ்சாவூர் மாவட்டம்

தயவு செய்து தெரிந்த யாராவது எனக்கு பதில் அனுப்புங்க தோழிகளே.
எனக்கு மாமியார் இல்லை என் மாமனார் மற்றும் என் கனவர் வீட்டு உறவினர்களெல்லாம் ஊருக்கு வர வேன்டாம் என்கிறார்கள்
ஆனால் எங்களுக்கு குழந்தை வேன்டும்.அவர்கள் வார்த்தையை மீறி என் கணவர் வந்து கஷ்ட்டப்பட்டு விடுவோமோ என்று பயமாக உள்ளது.பின்பு நாங்கல் வர வேன்டாம் என்று சொன்னோமே கேட்டிங்களா என்று சொன்னால் அதை எங்கலால் தாங்க முடியாது
ஆனால் என் மாமியார் வீட்டில் எல்லோரும் நல்லவங்க தான் பட் எங்க ஃபீலிங் அவங்கலுக்கு புரிய மாட்டேங்குது சோ உதவுங்கல் தோழிகளே

i love my husband

டியர் தோழி,

உங்கள் நிலைமை புரிகிறது, எஞ்ஜினியரிங் படித்தவற்களுக்கே வேலை கிடைப்பது பெரும் பாடாக உள்ள் இக்காலத்தில் B.com மிற்க்கு வேலை கிடைத்தாலும் போதுமான சம்பளம் வருமா என்பது எனக்குத் தெரிய வில்லை.இப்போது உங்கள் கணவர் என்ன வேலை பார்க்கிறாரோ அதே வேலையை தேடச் சொல்லவும்,முன் அனுபவம் இருப்பதால் எளிதாக வேலை கிடைக்கும்.

சுய தொழிலில் ஏற்றமும் இறக்கமும் காணப் படும்.மிகவும் யோசித்து செயல் படவும்.

உங்களால் அவருடன் சென்று வசிக்க முடியுமா என்று யோசியுங்கள். அல்லது visiting visa வில் 3 மாதமாவது சென்று வர முடியுமா என்று பாருங்கள்

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி தோழி
என்னால் அங்கு நிரந்தரமா தங்க முடியாது பா.என் வீட்டில் நா ஒருத்தி தான் சோ enga அம்மா விட மாட்டேங்குராங்க.வேறு ஏதாவது ஐடியா யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள் plzzzzzzzz

i love my husband

//ஆனால் என் மாமியார் வீட்டில் எல்லோரும் நல்லவங்க தான் பட் எங்க ஃபீலிங் அவங்கலுக்கு புரிய மாட்டேங்குது // உங்கள் அம்மாவுக்கு மட்டும் புரிகிறது என்கிறீர்களா!!

//என்னால் அங்கு நிரந்தரமா தங்க முடியாது பா.// அப்போ... எதற்குக் கலியாணம்!!!

//என் வீட்டில் நா ஒருத்தி தான் சோ enga அம்மா விட மாட்டேங்குராங்க.// 'அம்மா' என்றால்.... தான் சிரமப்பட்டால் கூட பரவாயில்லை, தன் குழந்தை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பாங்க. அதுவும் நீங்கள் ஒரே குழந்தை என்கிறீங்க. அம்மாவோடு பேசுங்க, விட மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க. நிச்சயம் விடுவாங்க.

கலியாணம் பண்ணிக் கொடுத்தப்பவே உங்களை 'விட்டுட்டாங்க.' உங்களாலதான் அம்மாவை விட முடியவில்லை என்று தோன்றுகிறது. :-) கலியாணம் ஆனதுக்குப் பிறகும் அம்மா செல்லமாக இருக்க வேணுமா!! உங்க வாழ்க்கை; நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.

//என் கனவர் வெளினாட்டு வaaழ்க்கையை முடித்துவிட்டு வரலாம் என்ற முடிவோடு இருக்கிறார்// முடிவோடு இருந்தால்... நீங்களும் கூடப் போய்ருங்க. அவரோடு கூட இருந்துகொண்டு அம்மாவையும் எப்படிக் கவனிக்கலாம் என்று யோசியுங்க.

வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா.
நான் சென்ற இழையில் ரொம்ப விவரமா சொல்லாதது தான் உங்க இந்த பதிலுக்கு காரனம் என்று நினைக்கிரேன்.
என்னை அங்கு நிரந்தரமாக வைத்துக்கொல்லும் சூழ்னிலை என் கனவருக்கு இல்லை பா.3மாதம் செல்ல எனக்கு பயமாக உல்லது
ஏன் என்றால் என் கணவர் இப்பொ தான் 4மாத நீன்ட விடுப்பில் வந்தார் ஆனால் எங்களுக்கு குழந்தை தங்கலை பா சோ எனக்கு 3மாதம் செல்ல பயமாக உல்லது.டாக்டர் 1வருடம் தொடர்ந்து ஊரில் இருக்க சொல்லுராங்க.
எனக்கு அப்பா இல்லை.எங்கல் ஊர் வழக்கபடி அம்மா வீட்டில் தான் இருப்போம்.நாங்கல் முஸ்லீம் என்பதால் வீட்டில் ஒரு பெண் மட்டும் தனியாக இருப்பது ரொம்ப சிரமம் பா.அது மட்டும் இல்லை என் அம்மா படிப்பரிவு இல்லாதவங்க ஊர் உலகம் தெரியாது
ஏன் பா வெளினாட்டு வாழ்க்கையை முடித்துவிட்டு ஊரில் வாழ்வது அவ்லோ கஷ்டமா?
எனக்கு ரொம்ப பயமாகவும் குழப்பமாகவும் உள்ளது

i love my husband

Hello safeeka i think you confused.so neenga theliva yochichu mudivu edunga b.com lam ipo salary adigama kidaikathu so konjam nal unga husband foreign la irukurathu nallathu

hi am satha my mail sathadgl at yahoo.com

என்னங்க வீட்டில் இருந்து லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்னா பலரும் உறவையும் நாட்டையும் விட்டு ஏன் வெளிநாடுகளில் அல்லாடணும். இன்று இணையத்தை பயன்படுத்து ஓரளவு படித்த அத்தனை பேருக்கும் தெரியும். அப்படியே சம்பாதிக்கலாம்னு உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அது எல்லோருக்கும் பயன்படும் படி வெளிப்படையாக இங்கேயே சொல்லலாமே.

ஷஃபீக்கா எதையும் செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து முடிவெடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் சந்தேகங்கள் நியாயமானவைதான் கவிசிவா! இங்கு நான் குறிப்பிட்டுள்ளது affiliate marketing என்ற மிகப்பெரிய துறையைப் பற்றியது. அதை விளக்குவதற்கு அதிக நேரம் தேவை. எனவேதான் சுருக்கமாக சொல்லி நிறுத்தினேன். நீங்கள் சொன்னது போல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் ஒரு e-book எழுதிக் கொண்டுள்ளேன். அது முடிவு பெற்றவுடன் தோழியருக்கு அனுப்பி வைக்கலாமே என்றுதான் (இலவசமாகத்தான்:) ) ஈமெயில் முகவரி கேட்டேன்.

என் பதிலிலேயே 'கடின உழைப்பு' தேவை என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரே நாளில் உங்களை கோடீஸ்வரனாக்குகிறேன் என்று ஆசை காட்டும் மோசடி வேலைகள் எதுவும் உங்கள் உழைப்பைக் கேட்பதில்லை. உங்கள் பணத்தைத்தான் கேட்கும். எனவே உங்கள் சந்தேகத்தை ஒதுக்கி விட்டு, சேர்ந்து வளரத் தயாராகுங்கள்.

முயற்சி செய்யும் எல்லோருக்குமே வெற்றி கிட்டுவதில்லை. அதற்காக, முயற்சியே தேவையில்லை என்று நினைப்பதில் அர்த்தமே இல்லை.

இணையத்தில் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தோழியே. திடீரென்று மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் விளக்கமாக சொல்கிறேன் என்று சிலர் வருகிறார்கள். தோழிகளும் மின்னஞ்சல் முகவரியை இது பொது தளம் என்பதை உணராமலேயே வெளிப்படையாக கொடுக்கிறார்கள். அதன் பின் முதலில் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் என்று கேட்டவரைப் பார்க்கவே முடிந்ததில்லை. பிரச்சினைகள் ஏற்படாதவரை ஓகே. அதனால்தான் கவனமாக செயல்படுங்கள் என்று சொல்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//இணையத்தில் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தோழியே. திடீரென்று மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் விளக்கமாக சொல்கிறேன் என்று சிலர் வருகிறார்கள். தோழிகளும் மின்னஞ்சல் முகவரியை இது பொது தளம் என்பதை உணராமலேயே வெளிப்படையாக கொடுக்கிறார்கள். அதன் பின் முதலில் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் என்று கேட்டவரைப் பார்க்கவே முடிந்ததில்லை. பிரச்சினைகள் ஏற்படாதவரை ஓகே. அதனால்தான் கவனமாக செயல்படுங்கள் என்று சொல்கிறோம்.//

இது போன்ற பொதுத் தளங்களில் பயன்படுத்துவதற்காகவே, ஒரு தனி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்வது நல்லது. அதை உருவாக்கும்போது, உண்மையான விவரங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும், நம் நண்பர்களின் முகவரிகளை அதில் சேமிப்பதும் கூடாது.நான் மேலே கொடுத்துள்ள முகவரி அப்படிப்பட்டதுதான். இதற்காகத்தான், முகவரியை இங்கே சொல்லுங்கள் என்று கேட்காமல், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று மட்டும் கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்