தோசக்காய் பப்பு

தேதி: July 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3.5 (2 votes)

 

தோசக்காய் - பாதி
வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப்
புளி - நெல்லியளவு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க
கொத்தமல்லி - சிறிது


 

துவரம்பருப்பை பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும். தோசைக்காய் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக்கவும்.
வெங்காயம், தக்காளி, தோசைக்காய், புளி சேர்த்து அதிக நீர் விடாமல் ஒரு விசில் வைத்து இறக்கவும்
ஆவி அடங்கியதும் வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து கலந்து ஒரு கொதி விடவும்.
எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் தாளிப்பு சேர்த்து தாளிக்கவும்.
கொத்தமல்லி, தாளிப்பு சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூசணிக்காயா!!!

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள்! பட் எனக்கும் அதே டவ்ட் தான். தோசைக்காய்னா பூசணிக்காயா? இது சாதத்திற்கா? அல்லது தோசை,சப்பாத்திக்கும் ஏற்றதா?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

கவி தோசக்காய் குறிப்பு பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.
தோசக்காய்ன்னா பரங்கிக்காயா? கலரை பார்த்தால் பரங்கிக்காய் போல இருக்கு இது என்ன காய்ன்னு சொல்லிட்டுபோங்கோ ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பப்பு குறிப்பு சூப்பர்.. நானும் இப்படி தான் செய்வேன்....

தோசக்காய் என்பது உள்ளே மஞ்சளாக இருக்கும் வெள்ளரிக்காய் கிட்டதட்ட வெள்ளரிப்பழம்..... ஆந்திரா ஸ்பெஷல் இந்த பப்பு...

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை எனக்கு சொல்லித்தந்த ஷைக் பேகம் அவர்களுக்கும் நன்றி
//Thank you Shaik Begum !!!//

இமா மேடம்,
சுபாவே பதில் தந்து இருக்காங்க..
இது கிட்டத்தட்ட வெள்ளரி பழம் தான்..வெயிலுக்கு ஏற்றது..yellow cucumber என்று தேடி பாருங்க..

ரேவதி,
உங்களுக்கும் மேலே உள்ள பதில் தான் :)
எல்லாவற்றிற்கும் பொருத்தமானது..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

ஸ்வர்ணா,
இவங்களும் gourd குடும்பம் தான்..ஆனால் இவங்க நல்ல சுவையா இருப்பாங்க..
கண்டிப்பாக நம்மூரில் கிடைக்கும்..இங்கே இந்தியன் கடையில் தான் இம்போர்ட் செய்ததை வாங்கி செய்தேன்..
செய்து பாருங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

சுபா,
பதில் தந்ததற்கு ரொம்ப நன்றிங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

கவி, தோசக்காய் பப்பு கண்ணுக்கும், நாவிற்கும் சுவையான குறிப்பா இருக்கு. ஒரே ஒரு குட்டி டவுட் பா. வெள்ளரிக்காய் பேமிலின்னு சொன்னீங்க. ஆனா உள்ளே வெள்ளையா தானே இருக்கும். இது மஞ்சளா இருக்கே. ஏன்னா, நான் பார்த்த தோசக்காய் அந்த டைப்ல இருந்திருக்கு. அதான் கேட்டேன். வெள்ளரிக்காய்ல செய்தா இந்த டேஸ்ட் கிடைக்குமா பா. இத்தனைக்கும் விளக்கத்தை நீங்க தந்தே ஆகனும் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,

நானும் இந்தியாவில் வெளிர் நிறங்களில் பார்த்ததுண்டு..
வெள்ளை,இளம் மஞ்சள்,அடர் மஞ்சள் நிறங்களிலும் வரும்..
இங்கே அடர்மஞ்சளில் கொஞ்சம் முற்றியது தான் கிடைத்தது..
கண்டிப்பாக சுவையா இருக்கும்..உடலிற்கு குளிர்ச்சி தரும்.
உங்கள் கேள்விக்கு ஓரளவு பதில் சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்..ட்ரை பண்ணுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பார்கவெ நல்லா இருக்கு ,கன்டிப்பா ட்ரை பன்ரென்

தோசக்காய் பப்பு வித்யாசமான குறிப்பா இருக்கே வாழ்த்துக்கள் தோழி.

சரண்யா,
அவசியம் செய்து பாருங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

மஹா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
ரொம்ப நாளாகவே செய்யனும்னு நினைத்த ரெசிபி கடைசியில் இன்று தான் செய்தேன்... செய்வதற்கு மிகவும் சுலபமாக, சுவையும் சூப்பராக இருந்தது :-)

நன்றி!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)