"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

வாழ்த்துக்கள் லலிதா,
ஸ்வீட் எங்கே....:-)இந்த இழைக்கு வாங்க இங்கேயும்,இதன் முதல் இழையிலும் சில தகவல்கள் உள்ளன.உங்களுக்கு உபயோகப்படலாம்.பின் வேறு சந்தேகம் கேள்வின்னா கேளுங்க.

ரொம்ப தாங்ஸ்.... ம்ம்ம் ஸ்வீட் தானே தந்தா போச்சு... எனக்கு ஒரு சந்தேகம்... நான் சலட் மற்றும் பழங்கள் சாப்பிடலாமா?? ஏனெனில் ரொம்ப குளிர் இங்கு...சளி பிடிக்குமோ என்ற பயம்....

சலட் பற்றி தெரியவில்லை.பட் பழ்கங்கள் சாப்பிடலாம். சாத்துக்குடின்னா தண்ணீர் கலக்கும்போது சுடுநீரில் கலந்துக்கலாம்.பொதுவா பழங்களின் குளுமை எஃபக்ட் ஆகாது.உங்கள் உடல் நார்மல்தானே.நான் இங்கே (ஊட்டியில்) அனைத்து பழங்களும் சாப்பிட்டேன் கன்சீவின்போது.உடம்பு சூடாகாமல் பார்த்துக்குங்க.இரண்டுமணிக்கு ஒருதரம் ஏதாவது சாப்பிடுங்கள் சத்தாக. வயிற்றை காயப்போடாதீர்கள்,தண்ணீர் நிறைய குடிங்க.

சாத்துக்குடி என்றால் என்ன??? எனது உடல் ஓக்கே....ஆனால் இன்று தொப்புளில் கொஞ்சம் வலி....ஏனென்று தெரியவில்லை..... வரும் வெள்ளி தான் டாக்டரிடம் செல்லவுள்ளோம்....பார்க்கலாம்.... நான் பாதாம் நட்ஸ் பயறு கடலை போன்றவை ஸ்னாஸ் க்கு சாப்பிடுவேன்..... பக்கத்தில இருந்து சொல்ல யாருமில்லை....அறுசுவை தோழிகளால் தான் எல்லாமே தெரிந்து கொள்கிறேன்.....ரொம்ப தாங்ஸ் பா

லலிதா,
துவரம் பருப்பு வாகவைக்கும்போது ஒரு சிறு துண்டு இஞ்சி சேருங்கள்.பின்பு வேண்டாம்னா எடுத்திடலாம்.இப்படி செய்வதால் வாய்வு தொல்லை இருக்காது.
குளிரில் பழங்கள் சாப்பிடலாம் தவறில்லை. தயிரை தாளித்து சாப்பிட்டால் சளி பிடிக்காது....

http://www.arusuvai.com/tamil/node/19991 இந்த லிங்க் போய் பாருங்க உங்களுக்கு உதவும்.

அடேயப்பா....இவ்வளோஇருக்கா???? ம்ம்ம்ம் (இப்பவே கண்ணைகட்டுதே) .... அருமையிலும் அருமை... டைம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பழைய குறிப்புக்களை பார்ப்பது வழக்கம்.... ஆனால் இது என் கண்களில் சிக்கவில்லை... லிங்கை சேவ் பன்னியாச்சில்ல.... ரொம்ப தாங்ஸ்... இப்பவே வாசிக்க தொடங்குகிறேன்...

akka enaku innaiyoda 65 days ahuthu 3 vathu masam nadaku 2days munnadi hospital ponanen scan pannanga baby nallarukunu sonnanga enaku hormone tabletavae tharanga enaku pona month strone 200 progestrone tablet and folic acid thanthanga intha time uterone200 ithuvum hormone tablet than vomna f intha 2 tableyaum ni8 poda sollirukanga na uterone nu search panni parthaen side effects irukunu potruku enaku payamaruku ungaloda anupavatha sollunga ninga tableta pathi konjam search panni sollunga pls

God's gift everyone

எனக்காக கடவுளை வேண்டிகொள்ளுங்கள் தோழிகளே:குழந்தை பெற தகுதி இல்லாதவள் என்று பல அவமானங்களுக்க பிறகு எனக்கு குழந்தைகக கடவுளை வேண்டி நான் IUI செய்துள்ளேன் எனக்கு இப்போது 2 நாட்கள் தள்ளி போகி இருக்கு . இந்த முறை எனக்கு குழந்தை தங்குவதற்கு எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.
பதிலை எதிர் பார்த்து
நன்றியுடன் :விஜயலட்சுமி

விஜி நிச்சயம் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம். . . .

தோழிகளே,
எனக்கு 7வாரம் முடிந்து விட்டது. இன்னும் வாந்தி, குமட்டல் எதுவும் வரவில்லையே ஏன்? எப்போது முதல் வரும்? இப்போது திடீரென மயக்கம் வருது. அப்படியே விழுந்து விடுவது போல் உள்ளது. அது இயற்க்கையா? இப்படி தான் இருக்குமா? help plz. . . .

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ரேனு அக்கா,
உங்களுடைய பல நல்ல பதிவுகளை பார்த்து சிலிர்த்து போனேன். சூப்பர் அக்கா. ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது. அக்கா எனக்கு வாமிட் எப்பவாவது தான் இருக்கு. ஆனா தலை சுற்றல் அடிக்கடி வருது. நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச நேரத்துல சரியாகல. அப்படியே படுத்துக்குறன். உடம்பே அசைக்க முடியல. ரொம்ப நேரம் கழிச்சு தான் சரியாகுது. கொஞ்சம் கூட காரம் ஆகல. நெஞ்சு கரிக்குது. வெறும் தயிரும், பிரட்டும் சாப்டறன். நா என்ன செய்யட்டும். மருந்து டாக்டர் தந்தாங்க அப்பவும் நெஞ்சு எரியுது. மத்தபடி ஒ.கே. ப்ளீஸ் அக்கா எதாவது சொல்லுங்க. நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்