"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

சகோதரிகளெ என் மகளுக்கு வலி வரல என்ன செய்யலாம்னு கேட்டேன் யாருமே எனக்குப்பதில் சொல்லலை எனக்கு பதில் பன்னுங்க அப்பப்ப அடிவயிறு வழிக்குதுனு சொல்றா உடனே நின்னுடுது அவசரமா டாக்டரிடம் போகவும் பயமாயிருக்கு நான் என்ன செய்ய பதில் ப்ளீஸ்

வடவம் போட்டு கசாயம் கொடுங்க

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு நன்றி வடகம் கசாயம் கொடுத்தேன் டாக்டர் சொன்ன விளக்கென்னெய் பாலில் கலந்துக்கொடுக் கலாமா உங்க ஊருக்கு நான் வந்துர்க்கேன் எங்க ஊர் நன்னிலம் பக்கம் எனக்கு பதில் அனுப்புங்க

அக்கா நலமா,
எனக்கு என் மாமியார் வடக கசாயம் தான் கொடுத்தாங்கள்.விளக்கெண்னை பற்றி தெரியவில்லை...............சாதம் வடிக்கும் கஞ்சில் வெண்ணை , பனங்கற்கண்டு போட்டுகொடுத்தாங்க......................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

தலைவலி சரி ஆகிவிட்டது .மருத்துவர் panadol கொடுத்தார் .இப்பொழுது normal . எனக்கு ஒரு doubt உள்ளது .தினமும் எனக்கு white discharge லேசாக உள்ளது .இது நார்மல?

எனக்கு திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை ,மருத்துவரிடன் 1 வருடமாக காண்பித்து வருகிறேன் இன்னும் ஒரு நல்ல செய்தியும் இல்லை .எனக்கு பீரியட் டேட் 3 மாதங்களுக்கு 1 முறைதான் வரும் டாக்டர் பரிசோதித்து நீர்க்கட்டி இருக்கு என்று சொன்னார் ,பிறகு மாத்திரை எடுத்து கொண்டேன் ,இப்பொழுது மாத மாதம் சரியாக குளிக்கிறேன் ........
இந்த மாதம் தான் சற்று குழப்பமாக உள்ளது
என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் .எனக்கு கடந்த ஜுன் 10 தேதி மாதவிலக்கானேன்,விலக்கான 2to6 நாட்கள் வரை clomid tablet தினசரி 2 மாத்திரையும் ,11 மாதமாக metformin tablet,2 மாதமாக folic acid ம் சாப்பிடுகிறேன்.............
23 ம் தேதி வலது புற வயிறு வலித்தது ,மறுநாளிலிருந்து breast pain அதிகமாக இருக்கு எனக்கு எப்பொழுதும் பீரியட் ஆவதற்கு 10 நாட்கள் முன்பு இருந்துதான் வலி இருக்கும் ஆனால் இந்த முறை பீரியட் ஆன 14 ம் நாளிலிருந்து வலி இருக்கிறது இதற்க்கு காரணம் என்ன வென்று சொல்லுங்கள் ப்ளீஸ்.........

i think its ovulation pain......u contact with ur hubby..its best time to get conceived....all the best....after 1 week be careful..dont eat any heat item...and sugar

வணக்கம் தோழிகளே ,எனக்கு இன்றுடன் 80 நாட்கள் ஆகிறது ,எனக்கு காலையில் ,மாலையில் பாலுடன் கலந்து குடிக்க மருத்துவர் baby&me எழுதி கொடுத்திருந்தார்.நான் 20 நாளாக அதை குடித்து வருகிறேன் ,எனக்கு அந்த flavour+smell பிடிக்கவில்லை ,அதனை சாப்பிட்டவுடன் வாமிட் ஆகி விடுகிறது ,நான் பாலில் வேறு என்ன வகையானதை கலந்து குடிக்கலாம் ,வெறுமனே பால் குடித்தால் உடலுக்கு சூடு என்கிறார்கள் ,நான் மருத்துவரை சந்திக்க இன்னும் 15 நாட்கள் உள்ளது ,எனவே தோழிஸ் சொல்லுங்கள் ,சரி பாலே குடிக்காமல் விட்டுவிடலாம் என்றால் ,சத்து கிடைக்காது என்கிறார்கள் . so plz suggest any.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் பெமீனா ,தேங்க்ஸ் பா உங்க வாழ்த்துக்கும் ,பதில் அளித்ததற்கும் ,ஓகே நான் ஹீட் பொருட்களை அவாயிட் பண்ணுற ,லெமன் ஹீட்டான்னு எனக்கு தெரியல அதை சேர்த்து கொள்ளலாமா .................

lemon cool than adhuku nu rombaa use panna venddam....rmba work avois panungA..then malaivembu try panunga

மேலும் சில பதிவுகள்