"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

நான் 14 வார கர்ப்பமாக உள்ளேன் . எனக்கு சில நாட்களில் பசி எடுக்கிறது . சில நாட்களில் பசி எடுபதில்லை மற்றும் வயறு மந்தமாக உள்ளது . ஆலோசனை தரவும் . நேற்று பசி எடுத்தது ,இன்று மந்தமாக உள்ளது .உங்கள் பதில்லுக்கு காத்து கொண்டு உள்ளேன்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தோழிகளே எனக்கு 11/2 வருடமாக sugar இருக்கிறது.இப்போது நான் 2 மாதம் கர்பமாக இருகிறேன்.இப்போது நான் என்ன சாப்பிடலாம் / சாப்பிடகூடாதுனு சொல்லுங்கள்

நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்ளுங்கள்,ஜீரணத்திற்கு எள்தாக உள்ளதை எடுத்துக்கோங்க,தினமும் வாழைபழம் சாப்பிடலாம், சீரகம் போட்டு சுடவைத்த தண்ணீர் குடிக்கலாம்.இவை ஜீரணத்திற்கு உதவும்......உங்கள் மருத்துவரிடம் உணவு சார்ட் வாங்கிகொள்வது பரவாயில்லைப்பா........

கர்பத்தின்போது சர்க்கரை இருப்பின் முக்கனிகளும் சாப்பிடக்கூடாது. சாதம் குறைவாகவும் காய்கறி,கீரைகள் அதிகமும் எடுக்கனும்,இதில் எந்த காய்களை ஒதுக்குவதுன்னு தெரிந்து கொண்டு சொல்கிறேன்.அடுத்த முறை மருத்துவரை காணும்போது அவரிடமும் டயட்டிசியனிடமும் உங்களின் உணவுமுறையினை கேட்டு தெரிந்து கொண்டு சீராக்கிக்கோங்க,
மனதை தெளிவா வச்சுக்கோங்க,

மைதாவில் செய்த உணவுகள் பரோட்டா,முக்கியமாக பேக்கரியின் கேக்குகள்,பப்ஸ், குக்கீஸ் இதுபோல மைதா உள்ள பொருள்களை உண்டால் சர்க்கரை வரும்,அதிகரிக்கவும் செய்யும்........கவனம்பா........

நீங்கள் கர்ப்பத்திற்கு முன்பு sugar க்கு tablet எடுத்திங்களா (or)insulin எடுத்திங்களா.கர்ப்பத்திற்கு முன்பு sugar control ஆ இருக்கனும்னு சொல்லுவாங்களே உங்களுக்கு control ஆ இருந்துதா?

மைதாவில் செய்த பரோட்டா,பப்ஸ் இதுபோல மைதா உள்ள பொருள்களை உண்டால் சர்க்கரை வரும

கர்பமாகும்போது suger அதிகமாகதான் இருந்தது talet போட்டேன் இப்போ daily இன்சுலின் போடுகிட்டு இருகேன் இப்போ suger normal ah இருக்கு

நான் முன்று வருடம் கழித்து கர்ப்பம் ஆனேன் .இப்பொழுது 14 வாரம் ஆகிறது . சின்ன சந்தேகம் , தினமும் பேரிச்சை பழம் , பாதாம் பருப்பு , நாட்டு கோழி முட்டை , சாபிடலமா? உங்கள் பதில்லுக்கு காத்து கொண்டு உள்ளேன்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தோழி சாந்தி வாழ்த்துக்கள் தாயாக போகும் உங்களுக்கு. 4 பாதாம் பருப்பபை முதல் நாள் இரவே ஊற வைத்து மறு நாள் தோலை உரித்து சாப்பிடவும். அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். பேரிச்சை பழம் தினமும் 2 அல்லது 3 சாப்பிட்டால் போதும்னு சொன்னாங்க (அது கொஞ்சம் சூடு அதான்). நாட்டு கோழி முட்டை பத்தி எனக்கு தெறியவில்லை. வால்நட்ஸ் கூட குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது. நிறைய காந்கறி, கீரை, பழங்கள் சாப்பிடுங்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

தோழிகளே என் மகளுக்கு பென் குழந்தை பிறந்துள்ளது ஊருக்கு எவ்வளவு நாட் கள் கழித்துப் போகலாம் சிசேரியன் மூலம்தான் பிறந்தது எவ்வளவு நாளில் போகலாம்னு சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்