"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

ஹாய் சங்கரி,
இப்ப உங்களுக்கு எத்தனை மாதம்? கர்பிணிப்பெண்கள் ஆரோக்யமா இருக்கும்பொது தடுப்பூசி மட்டும் போட்டால்போதும்.அது எப்பன்னு உங்க டாக்டரே சொல்வாங்க,
கேரட் ஜூஸ், 1 கேரட்டை தோல்சீவி நன்கு கழுவி கட்பண்ணிட்டு ஒரு டம்ளர் பாலில் மிக்சியில் அடித்துக்கொள்ளுங்க,இதை வடிக்க வேண்டாம்..... சர்க்கரை வேண்டாம்,அதன் இனிப்பே போதும்,

எனக்கு இன்றுடன் 7 வாரம் 3 நாட்கள் ஆகிரது, தடுப்பூசி மட்டும் போதுமா ஒகே அக்கா உங்கள் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி...........................

ஹாய் பாரதி, எனக்கும் 120 நாட்கள் ஆகிறது,ப்ரொட்டின் பவுடர் அல்லது மன்னா ஹெல்த் மிக்ஸ் குடிங்க

தோழிகளே, நான் குழந்தைக்காக முயற்சி செய்கிறேன்.எனக்கு கர்ப்பபை ரொம்ப வீக்கா இருக்குனு டாக்டர் சொல்லுராங்க.என்னோட இந்த வீக்கனஸ் சரியாக நான் எந்த மாதிரி சாப்பிட வேண்டும்.இந்த மாதிரி யாருக்காவது இருந்துருக்கா?இந்த வீக்னஸ்னால எனக்கு கரு தரிப்பதில் எதாவது பிரச்சனை வருமா?

கர்ப்பகால பிரஷ்ஷர் (உயர் ரத்த அழுத்தம்) ஹாய் ஃபிரண்ட்ஸ் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி என் கூட வேலை பார்க்குற பொண்ணுக்காக இத கேக்குறேன். அவளுக்கு இது ஐந்தாவது மாதம் 130/80 பிரஷ்ஷர் இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்களாம். அது ஜாஸ்தின்னு சொல்லிருக்காங்க.. அதுக்கு உப்பு குறைக்கணும் வாக்கிங் போகணும் சொல்லிருக்காங்க. வேற என்னலாம் பண்ணலாம் பிரஷ்ஷர் குறைக்க ப்ளீஸ் சொல்லுங்களேன். ரொம்ப பயப்படறா, உங்க பதிலுக்கு காத்திருக்கோம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கர்ப்பகால பிரஷ்ஷர் (உயர் ரத்த அழுத்தம்) ஹாய் ஃபிரண்ட்ஸ் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி என் கூட வேலை பார்க்குற பொண்ணுக்காக இத கேக்குறேன். அவளுக்கு இது ஐந்தாவது மாதம் 130/80 பிரஷ்ஷர் இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்களாம். அது ஜாஸ்தின்னு சொல்லிருக்காங்க.. அதுக்கு உப்பு குறைக்கணும் வாக்கிங் போகணும் சொல்லிருக்காங்க. வேற என்னலாம் பண்ணலாம் பிரஷ்ஷர் குறைக்க ப்ளீஸ் சொல்லுங்களேன். ரொம்ப பயப்படறா, உங்க பதிலுக்கு காத்திருக்கோம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தோழிகளுக்கு வணக்கம் ,எனக்கு ஆறாவது மாதம்(24வது வாரம் ) ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது ,குழந்தைவளர்ச்சி நன்றாக இருக்கிறது என மருத்துவர் கூறிவிட்டார் ,மேலும் எனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு ,காலையில் வெறும் வயிற்றில் 117mg/dl,காலை உணவுக்கு பின் 193mg/dl.இது அதிகமா ?எல்லோருக்கும் ஆரம்பத்தில் இப்படி இருக்குமா ?இந்த ரிப்போர்ட் எடுத்து சென்று நான் எனது மருத்துவரை கேட்ட போது
எனது மருத்துவர் எனக்கு ரத்தத்தில் சர்க்கரை கொஞ்சம் அதிகம் உள்ளது ,அதுக்கேற்ப உணவு உண்ண சொல்லி இருக்கிறார் ,metmorphin மாத்திரை எழுதி 20 நாள் சாப்பிட கொடுத்துள்ளார் ,மேலும் சர்க்கரை கட்டுபடவில்லை எனில் இன்ஜெக்ஷன் போட வேண்டும் என சொல்லி விட்டார் .நான் என்ன செய்ய வேண்டும் ,எதை உண்ண வேண்டும் ,எதை உண்ணக் கூடாது ,மேலும் என் மருத்துவர் இன்று ஸ்கேன் செய்தார் ,அதில் குழந்தை தலை இன்னும் திரும்பி கீழே வர வேண்டும் என்றி கூறி இடது பக்கமாக எப்போதும் ஒருக்களித்து படுக்க சொல்லியுள்ளார் ,அதை வைத்தே அடுத்த முறை ஸ்கேன்கு செல்லும் போது நார்மல் ஆகுமா ?அல்லது சிசேரியன் ஆகுமா ?என சொல்வாராம் .எனக்கு சர்க்கரை இருப்பதால் நான் mothers horlicks குடிக்கலாமா ?அல்லது வேறு ஏதேனும் ஹெல்த் drink எடுக்கலாமா ?நான் எப்படி இருக்க வேண்டும் ,மூத்த தோழிகள் கொஞ்சம் வந்து தெளிவுபடுத்தவும்.உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நான் கர்ப்பமாக இருக்கிறேன் இப்போது ஒன்பது மாதம் தொடங்கி
உள்ளது .ஆனால் பிரஸ்ஸர் அதிகமாக இருக்கு .உப்பு இல்லாமல் சாப்பிட சொன்னார் டாக்டர் அதன் படி செய்கிறேன் .மாத்திரையும் போடுகிறேன்
இதனால் குழந்தையை எதுவும் பாதிக்குமா ?
வேறு எப்படி பிரஸ்ஸரை குறைப்பது என்பது பற்றி தெரிந்த தோழிகள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் .

உங்களுக்கு ஓய்வு(Bed rest) மிக முக்கியம் , உப்பு கூடவே கூடாது , பிரஷ்ஷர் கண்டிப்பாக கண்ட்ரோலில் இருக்க வேண்டும் . உப்பு இல்லாமல் சாப்பிடுவதால் சோர்வு காணப்படும் ,வெள்ளரி பிஞ்சு சாப்பிடுங்கள் ,கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள்.எவ்வளவு ஆசை இருந்தாலும் ஊறுகாய்,அப்பளம் ,கருவாடு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்த்து விடுங்கள்,குழந்தையின் அசைவு உணர முடியா விட்டால் டாக்டரைப் பார்க்கவும்.

மிக்க நன்றி வாணி பதில் சொன்னதற்க்கு நீங்கள் சொன்னதுபோல் நான் உப்பில்லாமல்தான் சாப்பிடுகிறேன் .தொண்டையில் இறங்கமாட்டேங்கிறது
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கு .அதில் ஒன்றும் பிரச்சனை
இல்லை .ரெஸ்ட்டில் தான் இருக்கேன் .பார்க்கலாம் ..ரொம்ப நன்றி தோழி ..

மேலும் சில பதிவுகள்