சேமியா ரவா இட்லி

தேதி: August 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சேமியா - 1/2 கப்
ரவை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஆப்ப சோடா - 1/4 ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உடைத்த முந்திரி - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - சிறிது


 

சேமியா ரவையை தனித்தனியாக 2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மற்ற பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக தயிர் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கவும்.
இட்லி போல் இட்லி தட்டுக்களில் ஊற்றி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
இதே கலவையில் தோசையும் ஊற்றலாம்.
தோசை ஊற்றினால் அடுப்பை சிம்மில் வைத்து சுடவும்.


இட்லி வெந்தவுடன் தட்டில் இருந்து எடுக்காமல் 5 அல்லது 10 நிமிடம் கழித்து எடுக்கவும். சூடாக இருக்கும் பொழுது எடுத்தால் உதிர்ந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் சேமியாரவாஇட்லி செய்தேன் .இட்லி செய்யாமல் ஊத்தப்பம் போல் ஊற்றினேன் சுவை நன்றாக இருந்தது... தயிரில் கலந்தபோது நல்ல வாசமாக இருந்தது...நன்றி மேம்..

வாழு, வாழவிடு..