கொத்தவரை கறி

தேதி: August 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடியாக நறுக்கிய கொத்தவரை - 2 கப்
உருளை - 2 சின்னது
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு


 

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு வதக்கி பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் தோல் நீக்கி நறுக்கிய உருளை, கொத்தவரை சேர்த்து பிரட்டவும்.
பின் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி ஒரு விசில் விட்டு சிறுந்தீயில் 5 நிமிடம் வைக்கவும்.
மூடியை திறந்து நீர் சற்று குறையும் வரை லேசாக பிரட்டி எடுக்கவும். நீர்க்க இல்லாமல் மசாலா போல் இருக்க வேண்டும்.
சுவையான கொத்தவரை உருளை கறி தயார். இது ரொட்டிக்கு நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா...எளிமையான குறிப்பு.மொத்த வேலையும் பத்தே நிமிடத்தில் முடிந்து விடும் போல் தெரிகிறதே... ஆஹா! ஒரு சூப்பரான குறிப்பு கிடைச்சாச்சு வாழ்த்துக்கள் !!

நான் ரெண்டு மூணு நாளா எதிர்பார்தேன்....இன்று வந்து விட்டது...ஆனா ஒன்றை தவிர :(...எதுனா.....ஹோம் பேஜில் ஸ்க்ரோல் ஆகும் அனைத்து குறிப்பும் உங்களோடதா இருக்கனும்னு....

அந்த ஒன்றையும் சேர்த்து...SIX TRICK அடிச்சிருங்க :)) நாளைக்கு மறுபடியும் பார்க்கலாம்....

வாழ்த்துக்கள். எனக்கு பிடித்த உருளை கிழங்கு கறி. இங்கு கொத்தவரை
என்பது பீன்ஸ் தானே? நன்றி.

அஹா,வனி உருலை,பீன்ஸ் த்னியாதான் செய்து இருக்கிரேன்,கன்டிப்பா சாப்ட்ருவோம்ல,சூப்பர் மா,என் கூட பேசுவதெ இல்லை,2இழைஇல் உங்க கிட்ட பெசினேன் பதிலே இல்ல,வாழ்த்துக்கள் வனி,யாழு-வை கேட்டேனு சொல்லுன்க,

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஆமாம் சீக்கிரம் செய்ய கூடிய வகை தான். எனக்கு எப்பவுமே ரொம்ப நேரம் நின்னு செய்யும் வகை எல்லாம் ஒத்து வராது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... நானே அதை கவனிக்கல, நீங்க எல்லாரும் கவனிக்கறீங்க!!! இரண்டு குறிப்பு இருக்கே நடுவில் ;) இன்று தூக்கினாலும் என் குறிப்புகளை தானே தூக்குவாங்க. நன்றி யமுனா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. cluster beans தான் கொத்தவரை. சீனியவரக்காய்ன்னு சொல்வோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நீங்க என்கிட்ட பேசி இருந்தா நானும் பதில் சொல்லி பேசி இருப்பனே ;) பதில் இல்லைன்னா பார்க்காம மிஸ் பண்ணிருப்பேன்... அவ்வளவு தான். பார்த்துட்டு பேசாம போவேனா?? யாழுவை கேட்டதா சொல்லிடுறேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா