மாரினாரா பாஸ்தா

தேதி: August 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மாரினாரா சாஸ் செய்ய தேவையானவை :
பிரிஞ்சி இலை - 2
தக்காளி - 3 (அ) க்ரஷ்ட் (Crushed) டொமேட்டோ கேன் - ஒன்று
ஆலிவ் எண்ணெய் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பூண்டு பல் - 2
செலரி - 2 தாள்கள்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
பாஸ்தா செய்ய :
பாஸ்தா - அரைக் கிலோ
காளான், காரட், பிராக்கோலி, முட்டைகோஸ், பட்டாணி, சோளம் - 2 கப்
உலர்ந்த பேசில், உலர்ந்த பார்ஸ்லி - தலா ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், உப்பு, - தேவையான அளவு
சீஸ் - தேவையான அளவு


 

முதலில் சிறிதளவு எண்ணெய் (அரைக்கும் போது மீதம் உள்ள எண்ணெயை உபயோகிக்கவும்) விட்டு சாஸ் செய்ய தேவையானவற்றை (உப்பு மிளகு தூள் தவிர) வதக்கவும். ஆறியபின் உப்பு, மிளகு தூள் சேர்த்து அரைத்தெடுக்கவும். முழு தக்காளி உபயோகித்தால் சுடு நீரில் இட்டு தோலுரித்து பின்பு வதக்கவும். இப்பொழுது மாரினாரா சாஸ் ரெடி.
வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு உலர்ந்த ஹர்ப்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
இதற்கிடையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் பாஸ்தா சேர்த்து 10-15 அல்லது வேகும் வரை (இது பாஸ்தாவின் தன்மையை பொருத்து மாறும்) விட்டு வடிகட்டவும். உடனே வேறு ஒரு பாத்திரத்தில் பரப்பி மேலே எண்ணெய் தெளித்து ஆற விடவும். இல்லையென்றால் ஒட்டிக் கொள்ளும்.
இந்த பாஸ்தாவை காய்கறிக் கலவையில் கொட்டி கிளறவும்.
ஐந்து நிமிடம் கழித்து இரண்டு கப் மாரினாரா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
ஐந்து முதல் எட்டு நிமிடம் விட்டு மேலே தேவையான அளவு சீஸ் தூவி இரண்டு நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சுலபமாக செய்யக் கூடிய சத்தான வெஜ்ஜி பாஸ்தா வித் மாரினாரா சாஸ் ரெடி.

இந்த சாஸை அதிக அளவில் கூட செய்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் காரட் மற்றும் ஹர்ப்ஸ் சேர்த்தும் செய்யலாம். கூடுமானவரை ஹோல் வீட் பாஸ்தா உபயோகிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாஸ்தாவில் எக்ஸ்பர்ட் நீங்க தான் :) சூப்பர். அருமையா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம் யம்மி பாஸ்தா.healthy பாஸ்தா...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மாரினாரா பாஸ்தா.பாக்கும் போதே கண்ன பறிக்கிது எனக்கு இப்பவே சாப்டனும் போல் ஆகிடுச்சு நள்ள குறிப்பு வாழ்த்துக்கள் லாவண்யா.

பாஸ்தாவ பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு அதுவும் அந்த சீஸ் உருகி பார்க்கறதுகே ரொம்ப ஆசையாக இருக்கு

வெரி டேஸ்டி அண்ட் ஹெல்தி டிஷ் குடுத்ததுக்கு தாங்க்ஸ் லாவண்யா மேடம் இதுல ஆலிவ் ஆயில்கு பதிலா வேறு குக்கிங் ஆயில் சேக்கலாமா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

லாவண்யா, ரொம்ப ஈஸியாக இருக்கும்னு தோணுது, என் பையனுக்கு இந்த மாதிரி அயிட்டம்ஸ்தான் ரொம்ப பிடிக்கும். ட்ரை செய்து பார்த்து சொல்கிறேன். பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. தாங்ஸ்.

பாஸ்தா பார்க்கவே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.