வெஜ் சாஸேஜ் ரைஸ்

தேதி: August 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

வெஜ் சாஸேஜ் செய்ய :
கடலை மாவு - ஒரு கப்
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
புதினா - 10 இலை
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - பொரித்தெடுக்க
மஞ்சள் தூள் - சிறிதளவு
சாதம் செய்ய:
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
உருளை - 2
மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இலவங்கம், பெருங்காயம், முந்திரி - தாளிக்க
இஞ்சி பேஸ்ட் - 3 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவையான அளவு


 

சாஸேஜ் செய்ய தேவையானவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவும். அதிகம் நீர் இல்லாமல் சப்பாத்தி மாவு போன்று பிசையவும். (தயிரில் உள்ள அதிகப்படியான நீரை வடிக்கட்டி விட்டு சேர்க்கவும்).
நீளமாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பொரிந்ததும் ஆறவிட்டு துண்டுகளாக்கவும்.
அரிசியை களைந்து 20 நிமிடங்களாவது ஊற விடவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் உருளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது நீரில்லாமல் அரிசியை சேர்த்து உடையாமல் கிளறவும். சிறிதளவு புதினா சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ( 3 1/2 கப்) சேர்த்து உப்பு மற்றும் பொரித்த சாஸேஜ் சேர்த்து வேக விடவும்.
சுவையான வெஜ் சாஸேஜ் ரைஸ் ரெடி. ரைத்தாவுடன் பரிமாறவும்.

தேவையான காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். நான் குழந்தைகளுக்காக செய்ததால் மசாலா அதிகம் சேர்க்கவில்லை. மிளகு சேர்ப்பதற்கு பதிலாக மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லாவண்யா அக்கா சாசேஜ் ரைஸ் ரொம்......... ப நல்லா இருக்கு,சூப்பரோ சூப்பர்!படங்கள் அழகோ அழகு!வாழ்த்துக்கள்.

புது விதமான குறிப்பு. பிடிச்சிருக்கு. அழகா வந்திருக்கு படங்களும். சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவி
சாசேஜ் என்பது மிக்சட் மீட் தானே. அது வேஜ்ளேயும் கிடைக்குமா?நீங்களே செய்து இருப்பது நல்ல ஐடியா
படங்கள் அருமை :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லாவி இப்போ வருவாங்களான்னு தெரியல :) அறுசுவை போகலன்னு சொன்னாங்க. மிக்சட் இல்லை மின்ஸ்டு மீட். வெஜ் கிடைக்கும். ஆனா அதில் முட்டையாவது இருக்கும். லாவி முட்டை கூட இல்லாம செய்திருக்கது உண்மையில் சூப்பர் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா புது விதமான குறிப்பு சாஸேஜ் ரைஸ் ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க. வித்தியாசமா இருக்கு. வாழ்த்துக்கள்.

லாவி எங்கங்க ரொம்ப நாளா காணும்?

புதுமையான சூப்பரான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஓ வனி

இப்ப தான் பார்த்தேன். அப்படியா? மின்ச்டு மீட் தான்.
நான் மிக்ஸ்டு அப்படினு கேட்ட காரணம் இங்கே பீஃப் ,போர்க் அது இதுன்னு போட்டு மின்ஸ் செய்து மிக்ஸ் பண்ணி சாசேஜ் செய்வாங்க..
அது பார்க்கவே ஒரு மாதிரியே இருப்பதால் அதை பற்றி அதிகம் தெரிந்துக் கொண்டதில்லை. தனி தனி மீட்டில் கூட கிடைக்கலாம்.மின்ஸ் செய்த மீட்டை ஏனோ பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும்.

லாவியே வெஜ் ட்ரை பண்ணி இருக்காங்கனு நினைத்தேன்.ஆனா அது வேஜ்ளையும் கிடைக்கும்னு நீங்க சொல்லி தான் தெரியும்.தாங்க்ஸ் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)