தேவையான பொருட்கள்
- காளான் - 500 கிராம்
- பெ.வெங்காயம் - 1
- பச்சமிளகாய் - 1
- கடுகு - கால் தே.கரண்டி
- சோம்பு - அரை தே.கரண்டி
- குழம்பு பொடி - 1 மே.கரண்டி
- உள்ளி - 4 பல்லு
- சிறியதக்காளி - 1
- தேங்காய் பால் - அரை கப்
- எண்ணெய் - 1 மே.கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
|
செய்முறை
- காளானை சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக பிளந்து வைக்கவும்.
- வெங்காயம், ப.மிளகாய், உள்ளி என்பவற்றை சின்ன சின்னதாக வெட்டவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக விடவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயம், உள்ளி என்பவற்றை 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்பு தக்காளி, ப.மிளகாய் என்பவற்றையும் போட்டு தக்காளி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
- அடுத்து காளானை போட்டு உப்பு, குழம்பு பொடி என்பவற்றையும் சேர்த்து நன்றாக காளானுடன் சேரும் வரை மெல்லிய தீயில் வைத்து கிளறவும்.
- பிறகு அரை கப் தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் அவிய விடவும்.
- காளன் அவிந்ததும் மூடியை திறந்து விடவும்.
- கறி வற்றி வந்ததும் இறக்கி சாதம் அல்லது தோசை என்பவற்றுடன் பரிமாறலாம்.
|
குறிப்பு:
தேங்காய் பால் சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக அரை கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
வழங்கியவர்
திருமதி. தயாபரன் வஜிதா ஸ்விற்சர்லாந்
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 நபர்களுக்கு) |
5 நிமிடங்கள் |
12 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 32 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
46 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -