பஹாரா பைங்கன்

தேதி: August 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

கத்தரிக்காய் - அரைக் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
மல்லி இலை - சிறிய கட்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி பேஸ்ட் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பஹாரா செய்ய :
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கலோஞ்சி - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - நான்கைந்து இலை
தேங்காய் - கால் மூடி
முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
எள் - ஒரு மேசைக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு மேசைக்கரண்டி


 

பஹாரா செய்ய தேவையானவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில்லாமல் வறுத்து வைக்கவும்.
சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
மேலே வறுத்து வைத்த பொருட்களுடன் வெங்காயமும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை கழுவி நான்காக கீறி வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை நன்கு வதக்கவும். பாதி அளவுக்கு வெந்ததும் எடுத்து வைக்கவும்.
சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு பச்சை வாசம் அடங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். மசாலா நன்கு கொதித்ததும் (ஐந்து முதல் எட்டு நிமிடம் கழித்து) தூள் வகைகள் மற்றும் புளி பேஸ்ட் சேர்க்கவும் .
இதனுடன் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து தேவையெனில் தண்ணீர் தெளித்து விடவும். தீயை நன்கு குறைத்து வைக்கவும். கத்தரிக்காயில் மசாலா நன்றாக ஏறி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான ஹைதராபாதி பஹாரா பைங்கன் தயார். கீ ரைஸ், புலாவ், ஜீரா ரைஸ், ப்ளெயின் ரைஸ் எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

wow parthaaley sapidanumnu thonudhu, superb color... appapaa evlo ingredients serthu irukinga...
but enakku oru doubt kalonji na enna?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

குறிப்பு நன்றாக இருக்கிறது. எனக்கும் அதே சந்தேகம்தான், கலோஞ்சி என்றால் என்ன?

‍- இமா க்றிஸ்

ஹாய் லாவண்யா, பார்த்தவுடன் நாவில் எச்சிலை வரவழைக்கிறது. இதில் கலோஞ்சி இல்லாமல் செய்யலாமா? அது இங்கு கிடைக்குமா என தெரியவில்லை. ராதா சாமிநாதன்

ரேவதி, இமாம்மா, ராதா ///கலோஞ்சி என்றால் ஆனியன் சீட்ஸ் , ப்ளாக் சீட்ஸ், நைஜெல்லா , கருஞ்சீரகம் என்றும் சொல்லுவார்கள். /// -இது லாவண்யா சொன்னது தான்.
லாவண்யா பஹாரா பைங்கன் கிரேவி சம சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

ஓ! அதுவா! நன்றி வினோஜா.

‍- இமா க்றிஸ்

லாவி பஹாரா பைங்கன் கிரேவி சூப்பரா இருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவி
வாவ்..அந்த கத்திரிகாயை பார்க்கவே அழகு
பேரும் அழகு தான். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பஹாரா பைங்கன் பார்க்கும் போது அலகாக இருக்கிரது.

வாவ்... பஹாரா பைங்கன் கிரேவி ப்ரசண்டேஷன் படம் பார்க்கும்போதே செம டெம்ட்டிங்கா இருக்கு லாவி! :) நானும் எப்பவாது செய்வதுண்டு, இடையில் கொஞ்ச நாளா செய்யலை. ஓக்கே, இப்பக்கூட இந்த குட்டி கத்திரிக்காய் கொஞ்சம் ஃப்ரிட்ஜ்ல ஸ்டாக் இருக்கு! உங்க மெத்தட்ல செய்து பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ