வேர்க்கடலை சாம்பார்

தேதி: August 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த சாம்பாருக்கு கலந்த மிளகாய்த் தூள் பயன்படுத்தவும். கலந்த மிளகாய்த்தூளை கீழ்கண்டவாறு தயாரித்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது பயன்படுத்தலாம்.

மல்லி - அரை கிலோ

மிளகாய் வற்றல் - கால் கிலோ

மஞ்சள் - 4 துண்டங்கள்

கடலைப் பருப்பு - கால் கப்

மிளகு - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 2 மேசைக்கரண்டி

பச்சரிசி - 2 மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் லேசாக வெயிலில் உலர்த்தி எடுத்து, அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு
கலந்த மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறு நெல்லிக்காய் அளவு
பூண்டு - 6 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
முருங்கைக்காய் - 3
முள்ளங்கி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 5
வேர்க்கடலை - கால் கப்
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் வற்றல் - 3
உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
புளியில் தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் வைக்கவும்.
ஒரு பானில், பருப்புடன் அரைத் தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம், பூண்டு சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.
வேக வைத்த பருப்புடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
பின்னர் நறுக்கின முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், முள்ளங்கி மற்றும் நிலக்கடலை சேர்க்கவும்.
அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும்.
பிறகு ப்ரஷர் பானை மூடி வைத்து சுமார் 20 நிமிடங்கள் வேக விடவும்.
அதன் பின்னர் திறந்து, கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும். இப்போது திறந்து வைத்தே சுமார் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு அரை தேக்கரண்டி,சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சாம்பாரில் ஊற்றவுன். சிறிது கொத்தமல்லித் தழையை மேலே தூவவும்.
இப்போது சுவையான வேர்க்கடலை சாம்பார் ரெடி!
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

பொடியில் வெந்தயம் சேர்ப்பதனால் சாம்பாரில் பருப்பின் அளவை சற்றுக் குறைவாக சேர்க்கலாம். சாம்பார் திக்காக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்