இறால் நூடுல்ஸ் (மேகி)

தேதி: August 13, 2012

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மேகி நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
இறால்- 20 துண்டுகள்
முட்டை-2
மிளகு- கால் ஸ்பூன்
வெங்காயம்-1
கேரட்-25 கிராம்
முட்டைகோஸ்-50 கிராம்
பீன்ஸ்-25 கிராம்
கறிவேப்பிலை-6 இலைகள்
பச்சைமிளகாய்-1
பூடு-6 பல்
உப்பு-தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்-4 ஸ்பூன்


 

மேகியை சுடுநீரில் வேக வைத்து நீர் வடித்து எடுக்கவும். குளிந்த நீரில் கழுவிய பின் எண்ணெய் தடவி வைக்கவும்.

முட்டையை உப்பு,மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூடு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும்.

பின்னர் காய்கறி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.

இப்போது நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து காய்கறி ஒரு சேர வதக்கிவிடவும்.

பின் இறக்கி பரிமாறவும்.


மேகி மசாலா தூளே தேவையான நிறத்தை கொடுத்துவிடும். அதனால் பொடி வேறு எதுவும் சேர்க்கத்தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேகி நூடுல்ஸில் நல்ல வேரியேஷன் குடுத்து இருக்கீங்க. ட்ரை பண்ணுவதற்கும் சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள்.