ப்ரேட்சில்ஸ்

தேதி: August 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

மைதா - 4 கப்
கலந்து அடிக்க:
பால் - முக்கால் கப்
சர்க்கரை - கால் கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - ஒரு தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - கால் மேசைக்கரண்டி
ஈஸ்ட் செய்ய:
ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
வார்ம் வாட்டர் - கால் கப்
மேலே தூவ :
வெள்ளை எள் - சிறிது
பிரஷ் செய்ய :
உருக்கிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
இளம் சூடான நீரில் ஈஸ்ட்டையும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையையும் போட்டு கலந்து வைக்கவும். 5 நிமிடத்தில் ஈஸ்ட் நுரை கட்டி இருக்கும்.
கலந்து அடிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்துக் கொள்ளவும். பின் அதில் நுரை கட்டிய ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவினை சேர்த்து நன்கு பிசுபிசுவென கையில் ஒட்டும் பதத்தில் பிசையவும். அதை பிளாஸ்டிக் கவரில் நன்கு மூடி வார்மான இடத்தில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்தால் இரு மடங்காக ஆகி இருக்கும்.
சிறிது உலர்ந்த மைதா மாவை தளத்தில் பிசிறி இரு மடங்கான மாவினை நீளவாக்கில் உருட்டவும்.
பின் அதை நான்கு துண்டுகளாக சமமாக வெட்டவும்.
ஒரு துண்டை தனியே எடுத்து மீண்டும் நீளமாக ஒரே அளவில் சீராக சுமார் ஒன்றரை அடிக்கு உருட்டவும்.
அதை U வடிவத்தில் வைக்கவும்.
பின் U வின் இரு முனைகளையும் உள்நோக்கி செலுத்தி க்ராசாக வைத்து மேலே உருக்கிய வெண்ணெயை தடவவும்.
ட்ரேவில் வெண்ணெய் தடவி, மாவினால் டஸ்ட் செய்து ப்ரேட்சில்களை வைத்து எள்ளினை தூவி விடவும்.
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அல்லது அவரவர் அவனிற்கு ஏற்ப வைத்து பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.
சுவையான, மிருதுவான ப்ரேட்சில்ஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரம்யா மேடம் பாகவே சுப்ரா இருக்கே சாப்டா ஹ்ம்ம் செம டெஸ்ட் ஆ இருக்கும் போலே சூப்பர் ரெசிபி குடுத்ததுக்கு மிக்க நன்றி மேடம் வில் ட்ரை ஒன் டே மேடம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்! சுப்பர்ப் ரம்ஸ். கலக்குறீங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப சாப்ட்,படங்களே தெளிவா புறியவைக்கிறது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Hai Madam, nan ithupola oru recipes than thedi kondirunten. Indre seithu parkiren.

We cannot find ourselves if we are always looking for someone else.

Madam, nan indru unggal recipe-i seithu en Kanavaridam parathum Vaangivitten..Migavum super aha vanthathu.. Unggaluku enathu nandri.

We cannot find ourselves if we are always looking for someone else.

ரம்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர்.....:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

idhu romba azhaga vandhirukku. namma endha design venaalum vechukalama rams? idhu sweet ah irukkuma? or tasteless ah irukuma? .....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வாவ்... ரம்ஸ், சூப்பர்!!!, 'பேக்கிங்'கல தொடர்ந்து கலக்கறீங்க... :) அருமையா வந்திருக்கு ப்ரட்சில்ஸ்! பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்யா,
ப்ரட்சில்ஸ் சிறப்பே folded arms வடிவம் தான்..Pray for life என்று denote செய்யவே அந்த வடிவம்...
சர்ச்களில் prayer முடிந்ததும் கொடுக்க ஆரம்பித்தது தான் ப்ரட்சில்ஸ்..இவை அதிர்ஷ்டம்,மேன்மை தரும்னு சொல்வாங்க..
எப்போவோ படிச்சது..
இப்போ குறிப்பு வந்தாச்சு..செய்துடலாம்..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

கனி
ரொம்ப நன்றிங்க .செய்து பார்த்து சொல்லுங்க ;)

இமா
ரொம்ப நன்றி :)

முசி
மிக்க நன்றி ;)

அமராவதி
அப்படியா ரொம்ப மகிழ்ச்சி ;)

ஸ்வரு
ரொம்ப நன்றி டா

ரேவதி
ரொம்ப நன்றி ;)
எப்படினாலும் வெச்சிக்கலாம். ஆனா ப்ரேட்சில்ஸ் இப்படி தான் இருக்கும்.. கிழே கவியின் பதிவை பாருங்க..
இது ப்ரெட் மாதிரி இருக்கும் ;)

சுஜா
ரொம்ப நன்றிங்க ;)

கவி
vilakkam arumai
செய்து பாருங்க.. நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)