லாஹூரி சிக்கன் கறி

தேதி: August 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தயிர் - 3/4 கப்
பாதாம் - 10
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கு
உப்பு
மிளகாய் வற்றல் - 2
கடுகு, சீரகம் - தாளிக்க
புதினா - அரை பிடி
மிளகு - அரை தேக்கரண்டி
பூண்டு, இஞ்சி


 

கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தவும்.
இத்துடன் தயிர் சேர்த்து நைசாக அரைக்கவும். வெங்காயம், தக்காளி தனித்தனியாக அரைத்து வைக்கவும். பாதாமை நீரில் ஊற வைத்து அரைக்கவும்.
அரைத்த விழுதை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து அத்துடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயை தேவைக்கு எடுத்து அரைத்த வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும். பின் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் மீதம் உள்ள தயிர் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் அரைத்த பாதாம் விழுது சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரிய கொதி வந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும். சுவையான பாகிஸ்தானி லாஹூரி சிக்கன் கறி தயார். ரொட்டி, நாண் போன்றவைக்கு நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வழக்கம் போலவே ரொம்ப அருமை. சூப்பர் ரெசிபி கொடுத்துஇருக்கீங்க.கூடிய சீக்கிரம் செய்துபார்த்துவிட்டு சுவையை சொல்றேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு பிடித்த சிக்கனில் விதவிதமான சூப்பர் குறிப்புகள். நீங்கள் உண்மையிலேயே "சிக்கன் குயின்" தான்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கிச்சன் குயின் தெரியும்... சிக்கன் குயின் ;) நல்லா தான் இருக்கு. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான குறிப்பு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் வனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா சிக்கன் சூப்பரா இருக்கு பார்க்கவே... இந்த வாரம் கண்டிப்பா செஞ்சி பாத்துட்டு எப்படி இருந்துச்சினு சொல்றேன்:-)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனி,

'சிக்கன்'ல எக்ஸ்பர்ட் நீங்கதான் வனி! படங்களே குறிப்பை செய்துபார்க்க சொல்லுது! :) ட்ரை பண்ணிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எப்பவாது ஒரு முறை எட்டி பார்த்து எல்லா குறிப்பிலும் ரவுண்டு கட்டி பதிவு போடுறது ;) நலமா?? அவசியம் செய்துட்டு சொல்லுங்க. வனி வெயிட்டிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
சிக்கன் குறிப்பு என்றதும் நீங்கன்னு பார்த்தேன்..
பொரித்து சேர்த்து இருப்பது புதுமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி
வழக்கம் போல சிக்கன் அருமை
படங்கள் பளிச்
செய்து பார்த்திடலாம் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹஹஹா... தேன்க்ஸ் :) செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா