கடலைப்பருப்பு குருமா

தேதி: August 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (8 votes)

 

கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் - கால் கப்
பச்சை மிளகாய் - 3 - 4
கறிவேப்பிலை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். இத்துடன் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து 2 - 3 கப் வரை நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போய் குருமா பதம் வந்ததும் இறக்கவும். சுவையான கடலைப்பருப்பு குருமா தயார். தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுலபமான சைட் டிஷ்.

நீர் நிறைய சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு அரைத்து சேர்ப்பதால் உடனே கெட்டியாகி அடிப்பிடிக்கும். அடிக்கடி கிளறிவிட வேண்டும். மசால் வாசம் போகும் முன் கெட்டியானால் இடையில் சூடான நீர் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி இன்று டின்னருக்கு உங்கள் கடலைப்பருப்பு குருமா தான் செய்யப்போகின்றேன்.ரொம்ப சுலபமான குறிப்பு..வாழ்த்துக்கள்....

பரணிகா:)

சொந்த முயற்சியா? வட்டார உணவுக்குறிப்பா? Anyway sounds good. இன்னைக்கு நைட் இதுதான்.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இது எங்க கிராமத்தில் செய்வாங்க ஜெயந்தி. அம்மாவும் செய்வாங்க. எனக்கு பிடிக்கும், அதனால் அம்மாவிடம் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்பஈசியா இருக்குங்க.இன்னைக்கு சமையல் முடிச்சிட்டென்.நாளைக்கு உங்க இந்த குருமா தான் செய்ய போறேன்.நன்றி வனிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

Ivlo easy ah kuruma va?? Chance ye illa akka... Enaku podhuva kuruma na romba pidikum. Ippo breakfast dosai kooda unga kuruma thaan seiya poren:) akka, 3-4 green chilli sertha kaaram jasthi aagidadha akka? Neenga solli irukura alavu ethana per ku akka? Pls clear my doubt akka... (vara vara indha nithya thollai thaangala!!! unga mind voice keakkudhu akka;))

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது காரம் கம்மி தான்... ஏன்னா கடலைப்பருப்பு அரைச்சு சேர்ப்பதால் கெட்டி ஆகும்... நீங்க நிறைய நீர் சேர்ப்பீங்க, அளவு அதிகமா இருக்கும். இது 2 - 3 பேருக்கு போதுமானது. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க நித்யா. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kuruma senju mudichuten. Super akka taste. Akka, nan enga rendu perukku thaan senjen same quantity but 2 green chilli thaan akka potten. Naanga mild ah thaan akka kaaram serpom. Nan vena konjam thookkala sapduven. Anyway kuruma supera senju vechuten. Ippo poi dosai kooda saptu varen:) ellarum sapda vaanga:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குருமா செய்தேன். அருமையாக வந்தது.சாப்பிட்ட கையோட(கழுவிட்டுதான்) பின்னூட்டம் உங்களுக்கு.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மிக்க நன்றி. கடகடன்னு செய்துட்டு வந்துட்டீங்க... படிக்கவே மகிழ்ச்சியா இருக்குங்க. காரமெல்லாம் எப்பவும் நான் போடுறதை போட்டுடாதீங்க ;) நீங்க மைல்டா சேர்ப்பேன்னு சொன்னதால் சொல்றேன்... நான் ரொம்ப காரம் சேர்ப்பேன். எனக்கு இந்த காரமெல்லாம் காரமே இல்லை :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எல்லாரும் சீக்கிரமே செய்துட்டீங்க இந்த குறிப்பை... ரொம்ப சிம்பிளா இருக்கே, அனுப்பலாமா வேணாமான்னு குழப்பமா இருந்தது, பலரும் செய்து பார்த்து பதிவிடுவது மகிழ்ச்சியா இருக்கு. நன்றி ஜெய்ந்தி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Naanum avarum oru oru dosai extra saptom na parunga:) innum idhu madhiri simple recipe's edhavadhu olichu vechirundheengana udane anupunga. Basically i am so somberi;) easy ah irundha udane senjuduven. Illaina innoru naal seiyalam nu vitruven:) so pls send some simple recipe's of you and amma... parkum podhe indha quantity ku ivlo chilli enaku adhigamnu thonichu adhaan 2 mattum potten. correct ah irundhadhu:) thanks akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனி

வித்தியாசமான குறிப்பு
செய்து பார்த்து சொல்றேன்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அவசியம் அனுப்பறேன் நித்யா. செய்து பார்த்து சொல்லுங்க எல்லாத்தையும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு இந்த குருமா செய்தேன்.டேஸ்ட் அருமையோ அருமையாக இருந்தது.சப்பாத்திக்கு சைடிஸ்சாக செய்தென்.சாப்பத்தியும் காலி,குருமாவும்காலி.அவ்வளவு அருமையாக இருந்தது.நன்றி வனிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மிக்க நன்றி. எங்க ஊர் சமையல் இத்தனை பேருக்கு பிடிச்சிருப்பது மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரஞ்சிதா. நன்றி நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் நேற்று தோசைக்கு சைட்டிஷ் ஆக இந்த கடலைப்பருப்பு குருமா செய்தேன் எனது கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார்.ரொம்ப சுலபமான குறிப்பு மட்டுமில்லை testy ஆனதும் .நன்றி

பரணிகா:)

மிக்க நன்றி :) மறக்காம செய்து, பின்னூட்டமும் கொடுத்தது மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் பரணிகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மிகவும் சுவையான குருமா. எனக்கு ரொம்ப பிடிக்கும். வழக்கமா நான் இதுல கடலை பருப்புக்கு பதிலா பொட்டுகடலை சேர்ப்பேங்க. அடுத்த முறை கடலை பருப்பு சேர்த்து செஞ்சு பார்க்கிறேன்.

மிக்க நன்றி. ஹிஹிஹீ... நாங்க பொட்டுக்கடலை சேர்ப்பதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணுவோம், அதுவும் அனுப்பி இருக்கேன், வரும் இந்த பகுதியில். அவசியம் செய்து பாருங்க, சுவையில் மாற்றம் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றுதான் இதை செய்தேன். நீங்க சொன்ன மாதிரி சுவையில் மாற்றம் இருந்தது. என்னவருக்கும் பிடித்திருந்தது.

செய்து பார்த்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி யமுனா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா நேற்று இரவு இட்லிக்கு இந்த குருமா செய்தேன். ரொம்ப சுவையா இருந்தது. தேன்க்யூ

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி. செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி கவிதா... கூடவே எனக்கும் சூடா 2 இட்லி + குருமா அனுப்பிடுங்க. “தேன்க்யூ”??? ஹைய்யா... தேன்க்யூ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அகேன் இன்னைக்கும் சப்பாத்தி& கடலை பருப்பு குருமாவை செய்திருக்கென்.செஞ்சு டேஸ்ட் பன்னிட்டு வந்திருக்கென்.இன்னும் சாப்பிடலை.செஞ்ச கையோட வனிதா உங்களுக்கு பதிவு செய்கிறேன்.இன்னைக்கும் சூப்பரா வந்திருக்குங்க குருமா.வனிதா மீண்டும் நன்ரிங்க.ஈசி & டேஸ்டான குறிப்புக்கு.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

அட மீண்டும் மீண்டும் செய்யறீங்களா?? அதுவே குறிப்பின் வெற்றி தான்... ரொம்ப ரொம்ப நன்றிங்க... மீண்டும் மீண்டும் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க கடலைபருப்பு குருமா இன்று இரவு சப்பாத்திக்கு செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.எல்லோரும் ஒரு பிடி பிடித்தோம் என் மகள் உட்பட. மிக்க நன்றி வனி இந்த அருமையான ,எளிமையான குறிப்பை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு.மேலும் பல எளிமையான குறிப்பு தர என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

செய்துட்டீங்களா... மகளுக்கு பிடித்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மீனாள். செய்து பார்த்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பச்சை வாசம் போக எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு 15 நிமிடங்கள் கொதித்த பின்னும் இருந்தது :(