சாக்லெட் சுக்கினி ப்ரெட்

தேதி: August 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சுக்கினி (Zucchini) ‍துருவியது - ஒரு கப்
ஆல் ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு - 1 1/2 க‌ப்
வெண்ணெய் - ‍ அரை க‌ப்
ச‌ர்க்க‌ரை -‍ ஒரு க‌ப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - ‍ஒரு தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் சோடா ‍- அரை தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் - ஒரு தேக்க‌ர‌ண்டி
சின்னமன்/ப‌ட்டைத்தூள் (cinnamon) - அரை தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் கோக்கோ - 3 மேசைக்க‌ர‌ண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செமி ஸ்வீட் சாக்லெட் சிப்ஸ் - ‍ அரை க‌ப்


 

தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். (குறிப்பு: எப்போதுமே, பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது.)
சுக்கினியை நன்கு கழுவி தண்ணீரை துடைத்து விட்டு, ஒரு கப் அள‌விற்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
பிறகு இதனுடன் 2 முட்டைகளையும் உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்து மிருதுவாக கலந்து வைக்கவும்.
வேறு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, கோக்கோ பவுடர், சின்னமன் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும்.
இப்போது இதில் ஏற்க‌ன‌வே அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் க‌ல‌வையை சேர்த்து ஒரு ஸ்பேட்சுலா அல்லது ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் ரொம்ப‌ அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம், இல்லையென்றால் ப்ரெ‌ட் , மென்மைத்த‌ன்மை போய் க‌டின‌மாகிவிட‌ வாய்ப்பு உள்ள‌து.
அடுத்து, சாக்லெட் சிப்ஸ், சுக்கினி துருவ‌ல் இர‌ண்டையும் இதனுடன் சேர்த்து ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய 8 x 4 x 2 இன்ச் அளவுள்ள ப்ரெட் பேனில் ஊற்றி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.
சுமார் ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்த‌தும் ஒரு டூத்பிக்கை உள்ளே விட்டு, அது சுத்தமாக மாவு ஏதும் ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்த்து, ப்ரெட் முழுவதுமாக வெந்துவிட்டதை உறுதி செய்துக் கொள்ளவும். பிறகு ப்ரெ‌ட்டை எடுத்து, க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌ விட‌வும்.
இங்கே நான் காண்பித்திருப்ப‌து, எலக்ட்ரிக் ப்ர‌ட் மேக்க‌ரில் பேக் செய்யும் முறை. இத‌ற்கு, மாவுக்க‌ல‌வையை அத‌ற்குண்டான‌ பாத்திர‌த்தில் ஊற்றி, 'பேக் ஒன்லி' என்ற‌ ஆப்ஷ‌னை சூஸ் ப‌ண்ண‌வும். கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் ப்ரெ‌ட் ரெடியான‌தும், எடுத்து, க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌விட‌வும். பிறகு வேண்டிய அளவில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான சாக்லெட் சுக்கினி ப்ரெ‌ட் த‌யார்! சாக்லெட் கலந்து செய்து இருப்பதால், இது குழந்தைக‌ளுக்கு மிக‌வும் பிடிக்கும்! நமக்கும் அவ‌ர்க‌ளை காய் சாப்பிட‌ வைத்த‌ திருப்தியும் கிடைக்கும்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஃபைனல் ப்ரசன்டேஷண் ரொம்ப சூப்பரா இருக்கு...வாழ்த்துக்கள்...

சூப்பர் டிஷ் பாகவே அட்டகாசமா இருக்கு வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ் சுஸ்ரீ... படமே அசத்துது. சுக்கினி சேர்த்து ப்ரெட் இப்ப தான் கேக்கறேன்... சூப்பர் ஹெல்தி, டேஸ்டி குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு முதல் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஷமீலா,
முதலாய் வந்து தந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
-

கனிமொழி,
உங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
-

வனி,
பாராட்டுகளுக்கு மீண்டும் மிக்க நன்றி வனி! :) படங்கள் பிடிச்சிருக்கா?! அரட்டையிலும் குறிப்பிட்டு சொல்லியிருந்தீங்க... ரொம்ப தேங்ஸ்! :D

ஆமாம் வனி, சுக்கினி வைத்து ப்ரெட், ரொம்ப நாளாவே நினைச்சிட்டு இருந்து, ரீசன்டாதான் செய்தேன். வீட்டில பயங்கர ஹிட் ஆகிடிச்சு! சாக்லெட் சிப்ஸும் சேர்ப்பதால், சுக்கினி மறைந்து சாக்லெட் சுவைதான் தெரியுது, என் பையனே சாப்பிட்டான்னா பார்த்துக்கோங்களேன்!!! :) :)
உங்களுக்கு முடியும்போது ட்ரை செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க வனி. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ இப்படி ஒரு பிரெட் இப்பதான் கேள்வி படுறேன் ஆனால் பார்க்கவே சாப்பிடனும்னு தோணுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா

உங்களின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ