சிக்கன் 65

தேதி: September 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழித்துண்டுகள் - அரை கிலோ
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
சோம்பு - அரை தேக்கரண்டி
வினிகர் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
கடலைமாவு - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
கேசரி கலர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு கோப்பை


 

கோழித்துண்டுகளை சுத்தம் செய்யவும்,
இஞ்சி, பூண்டு, சோம்பை அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்புத்தூள், மிளகாய்தூள், கடலைமாவு, கேசரிகலர், வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் கோழித்துண்டுகளை போட்டு நன்கு பிசறி சுமார் நான்கு மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஊற வைக்கவும்.
எண்ணெய்சட்டியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மேலே தெரிக்காமல் இருக்க பாதி திறந்தார்போல் மூடிப்போட்டு பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்