தக்காளி குருமா

தேதி: August 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (20 votes)

 

தக்காளி - 2 - 3 பெரியது
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி நறுக்கியது - கால் கப்
புதினா - 5 இலை
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
முந்திரி - 8
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - ஒன்று


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி எடுக்கவும். சுவையான தக்காளி குருமா தயார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.

இதில் முந்திரி அரைத்து ஊற்றாமல் அப்படியே வைத்தால் தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும். அப்படி வைப்பதானால் காரம் இன்னும் குறைக்க வேண்டும். சப்பாத்திக்கு இன்னும் ரிச்சாக இருக்க முந்திரி சேர்த்திருக்கிறேன். முந்திரி பாதி, தேங்காய் துருவல் பாதி சேர்த்தும் அரைத்து சேர்க்கலாம். முந்திரிக்கு பதிலாக ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை தேங்காயுடன் சேர்த்தும் அரைக்கலாம். விரும்பினால் வெங்காயம் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வனிதா அக்கா முகப்பில பார்த்ததுமே நீங்கதான்னு கண்டுபுடிச்சுடேன்..உங்க சர்விங் பவுல வச்சுதான்.:)..பார்க்க நல்லா இருக்கு அக்கா..
நான் தக்காளி குருமா செய்யும் போது இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா தூள் சேர்பேன்.சாம்பார் பொடி சேர்த்ததில்லை..இது மாதிரி ட்ரை பண்ணி பார்க்குறேன்..

தக்காளி குருமா வாசம் இங்க வரைக்கும் வருது வனிதா.இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செஞ்சி பார்க்குறேன் இந்த வாரம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனி சுவையான சூப்பரான தக்காளி குருமா கண்டிப்பா செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஓ! இதுதான் நீங்க முன்னாடி சொன்ன பொட்டுகடலை யூஸ் பண்ணி செய்யிர குருமாவா? ரொம்ப நல்லா இருக்கு. ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
என்னோட guess சரியா?தப்பா?

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செர்விங் பவுல் கொஞ்சம் புதுசா வாங்கனும்னு நினைக்கிறேன் ;) ஹிஹிஹீ. நான் பயன்படுத்தும் சாம்பார் பொடி ஏறக்குறைய கறி மசாலா தூள் தான்... என்னோடதில் குறிப்பு இருக்கும் பாருங்க (http://www.arusuvai.com/tamil/node/16543). தனியா, மிளகாய், அரிசி, பருப்பு, மிளகு, சீரகம்னு ஒரு காம்பினேஷன். வறுக்காத கறி தூள் தான் இது. இஞ்சி பூண்டு விரும்பினா சேருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. கட்டாயம் செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இல்ல அது இது இல்ல... ;) அது பொட்டுக்கடலை குருமான்னே சொல்வோம், ஒவ்வொருத்தரா வருவாங்க பாருங்க. இதை அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா நல்லா ஈசியான குருமா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹிஹிஹீ. நான் இரவு நேரங்களில் சமைப்பதுன்னா ரொம்ப சோம்பேரி... அதான் சிம்பிளான குறிப்புகள் சப்பாத்திக்கு. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா தக்காளி குருமா இரவு சப்பாத்திக்கு செய்தேன். செய்வதற்கு ஈசியா இருந்தது சுவையாகவும் இருந்தது.முந்திரிக்கு பதில் தேங்காய் சேர்த்து செய்தேன்.நன்றி

இதுவும் கடந்து போகும்

செய்தீங்களா? பிடிச்சுதா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கவிதா... :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல ஈசியான டேஸ்டி குருமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி.....
காலையே பதிவிடனுன்னு நினைச்சேன்... ஆனா எங்க வீட்டு குட்டியோட நேரம் சரியாய் போச்சு.... நேத்து night எங்க வீட்ல சப்பாத்தி + உங்க தக்காளி குருமாதான்.... என் husband க்கு ஒரே ஆச்சிரியம் இவ்வளவு சீக்கிரம் சமையலை முடிச்சுட்டனான்னு.....(நாம எப்பவுமே late தான்...:) )
உங்க குறிப்பால பாராட்டல்லாம் வேற.....!:)(சீக்கிரம் சமைச்சதுக்கு தான்....)
அருமையான குறிப்பு..... வாழ்த்துக்கள்...... Thanks ம் தான்......:)

The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ரேவதி. படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு. குட்டி நலமா? நீங்க நலமா? பிசியா இருக்கிங்கன்னு கவிதை பக்கத்தில் உங்க கவிதை இல்லாதபோதே தெரிஞ்சுகிட்டேன். குட்டியை பார்த்துக்கங்க. :)

உங்க பதிவை படிக்க மகிழ்ச்சியா இருக்கு. நானும் இரவு நேரம் ரொம்ப ஸ்லோ தான்... பல நேரம் சமைக்கவே மூட் இல்லன்னு உட்கார்ந்துட்டே இருப்பேன். அப்பறம் கடைசி நேரத்தில் அவசர சமையல் தான் :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ நைட் தோசைக்கு தக்காளி குருமா செய்தேன் செம டேஸ்ட்... தோசைக்கு சூப்பர் ஜோடி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனி
தக்காளி குருமா சூப்பர் இப்பொ தான் சாப்பிட்டு முடிச்சோம்.செய்ய ரொம்ப சுலபம்.டேஸ்டோ ப்ரமாதம்.

மிக்க நன்றி :) பல இடங்களில் பல முறை என் கண்னில் பட வேண்டும் என்று சிரமமெடுத்து தேடி தேடி பதிவிட்டீங்க... மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா