ஈசி ப்ரெட் உப்புமா

தேதி: August 23, 2012

பரிமாறும் அளவு: 2நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ப்ரெட் பொடித்தது - 2கப்
வெங்காயம் - 1
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
கறிவேப்பிலை - 1 இனுக்கு
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுந்து- 1மேசைக்கரண்டி


 

ப்ரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
பொடித்த ப்ரெட் சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரெட் உப்புமா தயார்,


உப்பு வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் சேர்த்தால் போதுமானது. தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலையும், முந்திரி பருப்பு சேர்த்தும் சுவையை அதிகரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னைக்கு ஈவினிங் டீ டைம்ல உங்க குறிப்பு வந்துது, ஃப்ரிட்ஜில் கொஞ்சம் ப்ரெட் தூங்கிட்டு இருந்தது... தட்டி எழுப்பி நீங்க சொன்ன மாதிரி ரெடி பண்ணினேன். சூப்பர். சுலபமான அதே சமயம் டேஸ்டியான குறிப்பு. நல்லா இருந்தது. தேன்க்யூ :)

----

இன்னும் இதை பார்க்கலயா நீங்க?? உங்க மெயிலை பாருங்க, படம் அனுப்பிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி, செய்தே சாப்பிட்டாச்சா?! சந்தோஷம் வனி. நானும் சிங்கையில் இருந்து திரும்பியதும் என்னடா செய்யலாம்னு ஃப்ரிட்ஜில் தேடினால் ப்ரெட் மட்டுமே இருந்துச்சு. அதை அப்படியே ப்ரெட் ஸ்ப்ரெட் போட்டு சாப்பிட பிடிக்கலை. துண்டுகளாக வெட்டி உப்புமா செய்யவும் பொறுமை இல்லை. மிக்சியில் போட்டு சுற்றி இப்படி செய்தேன். டேஸ்ட் பிடிச்சிருந்தது. அறுசுவையில் போட்டுட்டேன் :)

பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி வனி. அப்புறம் என் மெயிலுக்கு ஃபோட்டோ ஏதும் வரலியே :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்போ பாருங்க... 4 பேர் இருப்பாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாலு பேரையும் பார்த்துட்டேன் :). சூப்பர். நன்றி வனி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுவை மிகவும் அருமை....... சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
பவி

சாரி பவித்ரா. இப்பதான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
சுவை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி பவித்ரா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!