இறால் குழம்பு

தேதி: August 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

இறால் - 20
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி – பாதி
சுரைக்காய் - 15 துண்டுகள்
கேப்ஸிகம் - சிறிது (விரும்பினால்)
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப் (விரும்பினால்)
அரைக்க :
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி – சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி மற்றும் கேப்ஸிகமை சிறியதாக நறுக்கவும். சுரைக்காயை சதுரமாக நறுக்கவும். புளியை சுடுதண்ணீரில் கரைத்து வைக்கவும். இறாலை சுத்தப்படுத்தி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து, அதில் இறாலை போட்டு வேகும் வரை விடவும். (இறால் நிறம் மாற வேண்டும்). வெந்த இறாலை தனியே எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம், கேப்ஸிகம் போட்டு வதக்கி, அதில் அரைத்த விழுதையும் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அவை வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மசாலா தூள், உப்பு போட்டு புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் சுரைக்காய் மற்றும் தக்காளியையும் போட்டு கொதிக்க விடவும்.
புளி வாசம் போனதும், இறாலை சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு, அதோடு தேங்காய் பாலை சேர்த்து தீயை குறைத்து 2 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.
மிகவும் சுவையான இறால் குழம்பு தயார். சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

இதில் தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம். கிரேவி அதிகம் விரும்புபவர்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதில் காரம் குறைவாகவே சேர்த்துள்ளேன். எனவே அவரவர் விருப்பத்திற்கு காரம் சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அபி எண்ணெய் மிதந்துக்கிட்டு இறால் குழம்பு பார்க்க நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

அபி இறால் குழம்பு சூப்பரா இருக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இறால்
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். நான் சாப்பிட்டது இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது யாருக்காவது செய்து தரேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அபி,
சுரைக்காய் சேர்த்து இறால் குழம்பு நல்லா வந்திருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அபி...இறால் தொக்கு தான் செய்து இருக்கிறேன் ,but இறால் குழம்பு கூட சூப்பரா இருக்கும் போலே ....உங்கள் முறைப்படி சுரக்காய் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவையை தரும் . வாழ்த்துக்கள் !

இறால் பார்க்கவே ஆசையா இருக்கு :) ஆனா இங்க வாங்க தான் முடியாது. யானை விலை குதிரை விலை இங்க இறால். ;) ரொம்ப நல்லா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்.. அண்ணா இந்த குறிப்பு இறால் பகுதியில் தேடினால் கிடைக்கலியே ஏன்??

வாழ்க வளமுடன்

வினோஜா - வாழ்த்திற்கு மிக்க நன்றி..
இந்திரா - ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ரம்யா - நிச்சயம் நல்லாயிருக்கும். நீங்களும் சாப்பிட்டு பாருங்கள். நன்றி.
கவிதா - உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவி.

வாழ்க வளமுடன்

vibgy - உண்மைதான்.. இறால் குழம்பு ரொம்ப நல்லாயிருக்கும். அதில் உருளை, சுரைக்காய் இப்படி காய்கள் நல்ல சுவையை தரும். செய்து பாருங்கள். ரொம்ப நன்றி..
வனிதா - ரொம்ப நன்றி வனிதா. இறால் விலை அதிகமா?? அட கடவுளே.. ஊருக்கு வரும் போது மொத்தத்தையும் சேர்த்து சாப்பிடுங்க :(

வாழ்க வளமுடன்