can you help me

plz tell me an idea to make some savory without the murukku making acchu..i dont have that..some other alternative for that?thanks.

டியர் அனு,

உங்கள் கேள்வி கொஞ்சம் புரியவில்லை. முறுக்கு அச்சு இல்லாமல் some savouries எப்படி செய்யலாம் என கேள்வி கேட்டு இருக்கின்றீர்கள். முறுக்கு வகைகள் செய்வதற்கு மட்டும்தான் அச்சு தேவை. அதுவல்லாமல், நிறைய savouries அச்சு இல்லாமல் செய்யலாம்.

ஒருவேளை, முறுக்கு அச்சு இல்லாமல் முறுக்கு எப்படி சுடுவது என்பது உங்கள் கேள்வியா? அப்படியெனில் நீங்கள் ஒரு துணியில் ஓட்டையிட்டு, மாவை உள்ளே வைத்து, ஜாங்கிரி பிழிவது போல் ஒரு தட்டில் பிழிந்து, பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கலாம். இந்த முறையில் செய்வதற்கு மாவு சற்று இளக்கமாக இருக்கவேண்டும். பிழியும் அளவிற்கு கையில் கொஞ்சம் பலம் இருக்கவேண்டும். இல்லையெனில் கைமுறுக்கு தயாரிக்கலாம். இதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை.

அமெரிக்காவில் முறுக்கு அச்சு கிடைப்பதில்லையா? இந்தியாவில் இருந்து வரும் யாரையேனும் வாங்கி வரச் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்