கோழி குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 23671 | அறுசுவை


கோழி குழம்பு

வழங்கியவர் : Ramya Karthick
தேதி : திங்கள், 27/08/2012 - 12:35
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
2.857145
7 votes
Your rating: None

 

 • கோழி கறி - அரைக் கிலோ
 • பூண்டு - ஒரு வில்லை
 • இஞ்சி - ஒரு வில்லை
 • சிறிய வெங்காயம் - கைப்பிடி
 • தக்காளி - ஒன்று
 • தேங்காய் - இரு துண்டுகள்
 • பச்சை மிளகாய் - தேவைக்கு
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - தாளிக்க
 • பொடி வகை:
 • மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
 • மிளகாய் பொடி - தேவைக்கு
 • மல்லி பொடி - அரை தேக்கரண்டி
 • வறுத்து அரைக்க:
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • மிளகு - அரை தேக்கரண்டி
 • மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - ஒன்று
 • பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
 • அரிசி - ஒரு தேக்கரண்டி
 • சோம்பு - ஒரு கிள்ளு
 • பெரிய வெங்காயம் - பாதி

 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டினை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.

வறுத்தவை ஆறியதும், தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின் மீண்டும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பின், இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும். பொடி வகைகளை சேர்த்து கிளறவும்

கோழி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி விடவும்.

கறி நீர் விடத் தொடங்கியதும், அரைத்த விழுதை சேர்க்கவும்.

மீண்டும் சுமார் ஐந்து நிமிடம் கழித்து இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். சிக்கன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.

கிராமிய முறைப்படி செய்துள்ள சுவையான சிக்கன் குழம்பு இது.

கிரேவி போல அல்லாமல் குழம்பு தண்ணியாக இருக்க வேண்டும். தோசை, இட்லிக்கு பொருந்தும். இட்லிக்கு பிரமாதமாக இருக்கும். என்னிடம் அன்று கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை இல்லை. இதை சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். தாளிக்க சின்ன வெங்காயம் தான் நன்றாக இருக்கும். அதுவும் என்னிடம் இல்லாததால் பெரிய வெங்காயமே சேர்த்து செய்தேன்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ரம்யா

ரம்யா ரொம்ப டேஸ்டியான சிக்கன் குழம்பு சூப்பரா இருக்கு..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

hai

படங்கள் அருமை,நல்ல குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கோழிக்குழம்பு

ரம்ஸ்,

கோழிக்குழம்பு சூப்பர்ர்ர்!!!
படங்கள் ஒவ்வொன்னும் பளிச், பளிச்!!
அந்த கடைசிப்படத்துக்கு முதல்படம் பார்க்கும்போதே எனக்கு இங்க பசிக்குது! :) வாழ்த்துக்கள் ரம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

nice

nice

ரம்யா

ரம்யா,
தெளிவான படங்கள்,குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா

இது சிக்கன் வாரம்!!! முகப்பு முழுக்க சிக்கன் குறிப்பா இருக்கு ;) ஹிஹிஹீ.

நல்லா இருக்குங்க... வழக்கத்தை விட தேவையான பொருட்கள் பட்டியல் கொஞ்சம் சின்னதா தான் இருக்கு. ;) அவசியம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா

கோழி குழம்பு கம,கமக்குது. எங்க ஊர்(காரைக்குடி) பக்கம் இந்த மாதிரி கோழி குழம்பு வைப்பாங்க நல்ல ருசியா இருக்கும். வாழ்த்துக்கள் ரம்யா.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நன்றி

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

இந்த்ரா
ரொம்ப நன்றிங்க ;)

முசி
மிக்க நன்றி ;)

ராதிகா
நன்றி ;)

கவி
ரொம்ப நன்றி கவி ;)

வனி
ஹஆகாஹா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க ;)
உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் ;)

அனு
ரொம்ப நன்றி :)
அப்படியா .செய்து பார்த்து அதே ருசியானு சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ரம்யாஅக்கா

அன்பு ரம்யா அக்கா சூப்பரான குறிப்பு.....அத்தனை படங்களும் அருமை.அழகிப்போட்டிக்கு நிற்கும் அழகிகள் போல, போட்டி போட்டுக்கொண்டு பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் !!!

கோழி குழம்பு...

ரம்யா,
உங்க குறிப்பை பார்த்து கோழி குழம்பு செஞ்சு சாப்பிட்டு முடிச்சிட்டு நேரா வந்திருக்கேன் :) ரொம்ப சூப்பர்ங்க... செம டேஸ்ட்... எப்போடா சிக்கன் சாப்பிடலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. உங்க ரெசிபி நல்ல சாய்ஸா அமைந்து விட்டது :)
மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)