iron box cleaning

Hi friends,
Iron box சுத்தம் செய்வது எப்படி?

அது சுத்தம் செய்யவே மார்கெட்டில் பொருட்கள் கிடைக்கிறது..அல்லது நல்ல பெரிய திக்கான உபயோகமில்லாத துணி(டவல்) எடுத்துக் கொண்டு அயர்ன் பாக்ஸை சூடுபடுத்தி மெழுகை தேய்க்கவும்..மெழுகு உருக உருக ஐரன் பாக்சை அழுத்தமாக துணியில் தேய்க்கவும்..கறை உருகி துணியில் படியும்...இப்படி செய்வதால் மேக்சிமம் போகும்..அப்படி இல்லையென்றாலும் உப்பு தூளை ஒரு பேப்பரில் கொட்டி அதன் மேல் பாக்ஸ் வைத்து அழுத்தி தேய்த்து துணியில் துடைத்து எடுக்கலாம்

Panadol’னு ஒரு மாத்திரை... paracetamol தான். இதை வைத்து சூடான Iron box'ல தேச்சு துணியால் துடைச்சா போயிடும்னு ஒரு முறை இமா சொன்னதை படிச்சிருக்கேன். நல்ல சுத்தமாகி இருந்ததை படத்திலும் பார்த்தேன். அதனால் தைரியமா ட்ரை பண்ணுங்க. மாத்திரையை பிடிக்க கொரடா பயன்படுத்துங்க. இல்லன்ன கையில் சூடு பட்டுடும். இதுவும் அவங்க சொன்னது தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோடா உப்பை (ஆப்ப சோடா) ஈரமான துணியில் தொட்டு துடைத்தால் கறைகள் நீங்கி விடும். என் அம்மா இப்படித்தான் சுத்தம் செய்வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thanks friends
செய்து பார்க்கிறேன்

வனீ... ;))) நான் கேள்வியைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தால் எனக்காக நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ;)

இதற்கென்றே பல தயாரிப்புகள் விற்பனையில் இருக்கின்றன. நான் வாங்கியது, தான் உருகிற்றே தவிர சுத்தம் செய்யமாட்டேன் என்றுவிட்டது. ஆனால் பனடோல் சுத்தமாக்கியது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்