scan பற்றி விவரம் சொல்லுங்கள்

நான் 5 வார கர்ப்பிணி. இன்னியோட எனக்கு 50 நாள் ஆகுது. இது எனக்கு 1st பேபி. 1 1/4 வருஷத்துக்கு அப்புறம் கிடைச்ச வரம். 48வது நாள் scan செய்தார்கள். பேபி நல்லா இருக்குனு சொல்லிட்டாங்க. ஆன எனக்கு ஒரு சந்தேகம். பேபியோட heartbeat எந்த வாரத்துல தெரியும். பேபியோட heartbeat எந்த scan எடுக்கும்போது தெரியும். இதோட எனக்கு எப்போ scan எடுப்பாங்க. சொல்லுங்கபா

நான் கேள்விப்பட்டவரை குழந்தை இதயத்துடிப்பு ஆறாவது-ஏழாவது வாரம் மேல் தான் கேட்கும். உங்களுக்கு செய்த ஸ்கேன்-லேயே தெரியும். கவலை வேண்டாம். உங்களுக்கு தாய்மை வரம் பெற்ற மற்ற தோழிகள் விவரமாக பதிவு போடுவார்கள்.

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .பொதுவாக
60வது நாளில்(8வாரத்தில்) குழந்தையின் ஹார்ட் பீட் தெரியும் .குழந்தையின் ஹார்ட் பீட் அறிய நமக்கு அடி வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள் .உங்களுக்கு ஸ்கேன் எடுக்க எப்போது வர வேண்டும் என நீங்கள் பார்த்த மருத்துவரிடம் கேட்பது நல்லது . .ஒரு வருடம் கடந்து உருவான கரு என்பதால் இன்ஜெக்ஷன் கூட போட சொல்வார்கள் .அதையும் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் .பத்திரமாக இருங்கள் .வேலைகள் அதிகம் செய்ய வேண்டாம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ரொம்ப நன்றி தோழி. injection போட்டுட்டு தான் இருக்கேன். வாரம் ஒரு injection மொத்தம் 5 வாரம் போட சொல்லியிருக்காங்க. 2 வாரம் போட்டாச்சு.

சந்தேகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி இழை வேண்டாம் .நீங்கள் உங்கள் சந்தேகங்களை தாய்மை அடைந்தோர் இழையிலேயே கேட்டுக் கொள்ளலாம் .கண்டிப்பாக அங்கேயும் பதில் வரும் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்