பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

//அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போகும் போது சமைச்சு போடுங்க... அப்போ சொல்லுவாங்க உங்க அப்பா ( 1 வருஷத்துல உன்னை விட நல்லா சமைக்க கத்துக்கிட்டா. நீயும் தான் 25 வருஷமா ஒரே சமையலே செய்யுர னு)// - அட இதெல்லாம் அப்படியே நம்பிபுடாதீங்க... பிள்ளை மனசு கஷ்டப்பட கூடாதுன்னு உலோலாய்க்கு சொல்றது ;) உண்மையில் 4 நாளைக்கு நாம தொடர்ந்து செஞ்சா “ஏம்மா அவளையே செய்ய விடுற, நீ செய்ய கூடாதா...” அப்படின்னு இண்டைர்க்ட்டா “உன் சமையல் போல வருமா...”னு மனைவிக்கு இன்ஸ்டர்க்‌ஷன் குடுத்துடுவாங்க.

//நம்ம அம்மா பாட்டி எல்லாம் எத்தனை விதமா குழம்பு, சாதம், பொரியல், காலை உணவு செய்துருப்பாங்க... யோசிங்க... சாம்பார். ரசம். கார குழம்பு, குருமா, வழக்கமான புளிசாதம், லெமன் சாதம், தக்காளி சாதம்.... இன்னும் கொஞ்சம்... அதே இந்த காலத்து பெண்கள் எத்தனை விதமா செய்து கலக்குறாங்க தெரியுமா // - அவங்களுக்கு அந்த காலத்தில் அதிகமான உணவு வகைகளை காட்ட ஆளில்லைங்க... இப்போ போல அறுசுவை, சமையல் புத்தகம், அக்கம் பக்கம் வெளீனாட்டு வெளி மாநில ஆட்கள்னு அப்போ இல்லை... இருந்திருந்தா... இன்னைக்கு நாம எல்லாம் இத்தனை வகை சமைப்பதில் நாங்க முதல்னு கூட சொல்லிக்க முடியாது. அடிச்சு தூள் கிளப்பியிருப்பாங்க.

//இதுல எங்க அவங்க பொடி அரைக்க, மாவு சளிக்க எல்லாம் நேரம் இருக்கும்.// - அடடே... நேரமிருந்தா நாமெல்லாம் அப்படியே பொடி வகையெல்லாம் அரைச்சு வெச்சுடுவோமாக்கும்??? அந்த பொடியை எந்த பதத்தில் அரைச்சு வைக்கணும், எப்படி வெச்சா வருடத்துக்கும் கெடாம இருக்கும்னு கூட நமக்குலாம் தெரியாதுங்க.

ஒன்னும் வேண்டாம் நடுவரே... இங்க எத்தனையோ சின்ன சின்ன சந்தேகங்கள், பெரிய சந்தேகங்கள் சமிஅயலில், சமையல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கேட்கறாங்க... அனுபவம் உள்ள மூத்தவங்க தானே சரியான பதிலை சொல்றாங்க?? வயதில் நம்மை விட பெரியவர்கள் அம்மாக்கள் அறுசுவையில் இல்லையா என்ன? அவங்க அனுபவத்தில் சொல்லும் விஷயங்களை கேட்டு தானே கத்துகுட்டிங்க நாம கத்துக்கறோம்??? அப்போ அவங்க தான் கில்லாடிகள்... நாம எப்பவும் கத்துகுட்டி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களுக்கும், அருமையான தலைப்பு தந்த தோழி கல்பனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...சமையலில் கில்லாடிகள் அந்த காலப் பெண்களே என்பது என் கருத்து....விதவிதமாக நாம் சமைத்தாலும் தாயின் கையால் சாப்பிடும் சாப்பாடுக்கு ஈடாகுமா??அதுவும் இங்கே தினமும் நாமே சமைத்து சாப்பிடும் போது தாய்நாட்டுக்கு போய் பெரியவர்கள் கையால் சாப்பிட மாட்டோமா என்று மனசு ஏங்குகிறது....இது மறுக்க முடியாத உண்மை அவர்களே...
விரிவான கருத்துக்களுடன் மீண்டும் பதிவு செய்கிறேன்.....

//இந்த காலத்தில் மைக்ரோவேவ், அவன் எல்லாம் பயன்படுத்தறோம் தான், ஆனால் இது எதுவுமே இல்லாம அந்த காலத்தில் சத்தான ஆரோக்கியமான உணவை மட்டுமே கொடுத்த நம்ம அம்மா, பாட்டி சமையலுக்கு முன்னாடி இதெல்லாம் நிக்கவே முடியாது.//
இதெல்லாம் ரொம்ப ஓவர் நடுவரே... பழைய டி வி எல்லாம் பெரிய பீரோ சைசில இருந்தது... அதற்காக இன்னைக்கும் அதே மாதிரி தான் புது டி வி வாங்குவோமா? லேட்டஸ்ட் டெக்னாலஜி டி.வி தானே வாங்குவோம்...
அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நல்ல தரமானவை... இப்போது உள்ள சூழ்நிலையில் நமக்கு அது போல் கிடைப்பதில்லை.. அதற்காக அந்த காலத்தில் இருந்தவர்கள் தான் கில்லாடிகள் என்று சொல்லி விட முடியுமா??

//இன்னைக்கு சமைச்சு அசத்துற நம்மில் எத்தனை பேர் அம்மா சமையலுக்காக ஏங்காதவங்க??? எல்லாருக்கும் அம்மா சமையல் தான் பேஸிக்... அங்க இருந்து தான் நம்ம சமையலே துவங்கும். அடித்தளம் அமைச்சு கொடுப்ப்பதே அம்மா தானே. கூடவே பாரம்பரிய சமையல் என்பதை அம்மா, பாட்டி சொல்லி தான் நாம தெரிஞ்சுக்கறோம். அது தெரியாம வேறு எது தெரிஞ்சும் பயன் இல்லையே.//
//எங்கம்மா ரசம் போலவே இருந்தது. ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க பாட்டியோட மீன் குழம்பை நியாபகப்படுத்திட்டிங்க என்ற வரிகள் தான்.//
அப்படி பார்க்க போனால் நிஜமான கில்லாடிகள் ஆதி மனிதர்கள் தான்... ஏன்னா எப்படியும் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையிடம் தான் சமையல் கற்றுக் கொள்ள முடியும்... சோ ஸ்டார்டிங் பாயின்ட் ஆதி வாசிகள் தானே :)
அம்மா சமையலுக்கு ஏங்குவதற்கு காரணம் அதன் சுவை மட்டும் அல்ல... அதனோடு பிணைய பட்டிருக்கும் அந்த அன்பு... கல்யாணத்திற்கு முன்பு நானும் என் சகோதரிகளும் என்னுடைய அம்மாவின் சமையலை நல்லா கிண்டல் செய்வோம்... ஆனால் இன்று அம்மாவின் சமையலை உண்ண ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஆசையாக தான் இருக்கிறது... அதற்க்கு காரணம் அந்த சுவை மட்டும் அல்ல:) இப்போ நான் எல்லாம் சமையலில் வெகு சுமார் ஆனாலும் என் மகளுக்கு என் சமையல் தான் விருப்பம்.... நான் என்ன அவளுக்கு ஸ்பெஷலாகவா செய்கிறேன்... அவளுக்கு பிடித்த வகையில் செய்கிறேன் அவ்வளவு தான்...இதெல்லாம் காலம் காலமாக வரும் நம் உறவு பழக்கங்கள்... இதை எல்லாம் கொண்டு இவர்கள் தான் கில்லாடிகள் என்று சொல்லி விட முடியாது...

//அந்த எள்ளடை எண்ணவாக மாறியது என்ற ஒரு அற்புதமான வரலாற்றை சொல்ல விரும்பினேன் இழையில் சொல்லியிருக்கிறேன். அதை படித்தவர்கள் அந்த வரலாற்றின் மேன்மையை நன்கறிகறிவார்கள்.//
அட போங்கப்பா... அப்போ அம்மா பாட்டி எல்லாம் ஒரு தடவை கூட தப்பே செய்யாமல் சமைக்க கத்துக்கிட்டாங்களாக்கும்;-)

எதிரணியில் பாட்டி சமையல் பற்றி சொன்னார்கள்... சந்தோஷம்... சப்பாத்தி சாப்டாக செய்பவர் தான் சமையலில் கில்லாடி என்றால் நம்ம தலைப்பே தப்பு :), எங்கள் குடும்பத்தில் என்னுடைய கணவர் தாங்க சமையலில் கில்லாடி ;-) அவருடைய அம்மா, பாட்டி, சித்தி, மாமா... மற்றும் உறவினர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்ட விஷயம் இது ;-)
கிண்டல் செய்றேன்னு நினைக்காதீங்க... பொதுவாக அனுபவம் என்பது செய்ய செய்ய வருவது... அந்த காலத்து மக்கள் அனுபவசாலிகள் அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் அதற்காக அவர்கள் தான் சமையலில் கில்லாடிகளா? இல்லை... இப்போது ஒரு தோட்டத்தை பார்க்கிறீர்கள் அதில் ஒரே ஒரு அழகிய மலர் தான் இருக்கிறது, ஆனால் சுற்றிலும் பல விதமான பச்சை பசேலென மரங்கள் செடிகள் புல்வெளி இருக்கிறது... இப்போது அந்த தோட்டத்தை ரசித்து பார்க்கும் ஒருவர் அந்த மலர் மீது மட்டும் கவனம் செலுத்தினால் அதில் என்ன தனி சிறப்பு இருக்கிறது? அதே தோட்டத்தை வேறு ஒருவர் அந்த மலரை ரசிப்பதுடன் நிறுத்தாமல் சுற்றி இருக்கும் பச்சை பசேலென்று இருக்கும் செடி கொடிகளையும் பார்த்து ரசித்தால் அது தனி சிறப்பு தானே... இதே தான் அந்த காலத்து மக்களுக்கும் இந்த காலத்து மக்களுக்கும் உள்ள வேறுபாடு...

என்னுடைய பெற்றோர் பிறந்து வளர்ந்தது எல்லாம் குமரி மாவட்டத்தில் ஆனால் திருமணதிற்கு பின் வசிப்பது சென்னையில்... ஆனால் இன்றும் கூட என் அம்மாவின் சமையலின் அதே குமரி மாவட்ட மணம் இருக்கும் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் அவர்களின் adaptability குறைவு...
இப்போது இந்த காலத்து பெண்களை பாருங்கள்... உதாரணமாக நம் அறுசுவை குறிப்புகளையே பாருங்கள்... மாலேவில் இருந்து வரும் குறிப்பெல்லாம் சென்னை சமையல் குறிப்புகள் தானா? அதே போல் தான் Charlotteல் இருந்து வரும் குறிப்புகளும்... நம்முடைய பாரம்பரிய சமையலுடன் மாறி வரும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு எல்லா நாட்டு உணவையும் சமைத்து ரசித்து பகிர்ந்து கொள்கிறார்களே அவர்கள் தானே கில்லாடிகள்????

//நம் அறுசுவையில் அந்தக்காலப்பெண்கள் யாராவது சமையலில் சந்தேகம் கேட்டு வந்திருப்பதை பார்க்க முடியுமா?//
அது சரி அவர்கள் புதிதாய் எதையாவது செய்தால் தானே சந்தேகம் என்று ஒன்று வர... ;-)

// போனால் சுடுதண்ணி எப்படி வைக்குறது? அடுப்பை எப்படி பத்த வைக்குறதுன்னு கேட்டு வந்தாலும் யாரும் ஆச்சர்யப்படாதீங்கோ.அதான் இந்தக்காலப்பெண்களின் சமையல் கில்லாடித்தனம்//
ஓஹோ அந்த காலத்தில் பிறக்கும் போதே சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்றும், அடுப்பை பற்ற வைப்பது என்று கற்றுக் கொண்டே பிறந்தார்களோ??? எனக்கு இவ்வளவு நாள் தெரியாது போய் விட்டதே :)
நடுவரே, எதையும் கேட்டு தெரிந்துக் கொள்வதிலோ, எந்த வயதிலும் கற்றுக் கொள்வதிலோ தவறே இல்லை :) என்ன தான் சமூகம் மாறி இருந்தாலும் 99.999999% வீடுகளில் இன்றும் பெண்கள் தானே சமைக்கிறார்கள்??? சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்று கேட்டு தெரிந்துக் கொண்டாலும், சமையலை(யும்) கற்றுக் கொண்டு அசத்துகிறார்கள் பாருங்கள் அது தான் இந்த காலத்து பெண்களின் கில்லாடித்தனம்:)

இன்றும் கூட, சென்னையில் இருந்து பெற்றோரின் கிராமத்திற்கு சென்றால் அங்கிருக்கும் உணவு பிரெஷாக இருப்பது தெரியும்... அங்கேயும் கூட இப்போது எல்லாம் பிரிட்ஜ், மிக்சி என்று தான் பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் அவரகளுக்கு கிடைக்கும் அந்த ரா materials பிரெஷாக இருக்கிறது... அதில் உணவு சுவையே மாறி போய் விடுகிறது... என்ன செய்வது இதெல்லாம் காலத்தின் கோலம்... அதற்கும் சமைக்கும் திறமையில் இருக்கும் கில்லாடி தனத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை :)

புது பரிமாணத்தோடு, சமையல் கலையை எடுத்து செய்து கலக்கும் இந்த காலத்து பெண்களே சமையலில் கில்லாடிகள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என் ஓட்டு பாட்டிக்கே, எனது ஆத்தா(அப்பாவின் அம்மா) வைக்கும் பண்ணைக்கீரை குழம்புக்கு அடிமை. எனது கணவரையும் அடிமையாக்க விரும்பி கீரைக்காரரிடம் 2கட்டு கீரை வாங்கி வேகவைத்து உப்பு,ப.மிளகாய்,பூண்டு ,சீரகம்,எல்லாம் போட்டு மிக்ஷ்சியில் அரைத்து வைத்தேன் பாருங்கள் உடனே எனது கணவர் சமையல் வகுப்பில் சேர்த்து விட்டார்.மருதாணி என்று நினைத்து விட்டார். வனிதா வின் பொட்டுகடலை குருமா எனது அம்மாவின் மஞ்ஞள் குழம்பு போலுள்ளது எனது குழந்தைகள் வைத்த பெயர் அது .எனவே அந்தகால பெண்மணிகளே கில்லடிகள்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

கூகிள் உதவியால் இக்காலத்து பெண்களே கில்லாடிகளாக இருக்கிறோம்.பாட்டி ,அம்மாக்கள் எல்லாம் அவங ஊர் பாரம்பரிய சமையலோடு சரி..மற்றும் எந்த வசதிகளும் இல்லாததால் சிரமப்பட்டு அன்றாடம் சமைத்தார்கள்..இன்று நமக்கு அப்படியில்ல பெரியவங்ககிட்ட இருந்து பாரம்பரிய சமையல்,நம்ம ஊர் நம்ம பக்கத்து ஊர் பக்கத்து நாடு என்று உலகில் முக்கு மூலைகளில் காணும் அனைத்தையும் சமைத்து அசத்த்ய்கிறோம்,,இப்போல்லாம் நம்ம பெற்றோரே நம்மை பார்த்து வியக்கிறார்களா இல்லையா

நடுவரே

இந்த காலத்து பெண்கள் விதவிதமா சமைக்கறதுக்கு காரணம் மீடியா தாங்க. அது நம்ம பாட்டி காலத்தில் இருந்திருந்தா பாட்டியும் பஞ்சாபி தாபா செய்து இருப்பாங்க. இந்த காலத்தில் மீடியா இல்லாமல் போயிருந்தா நாமும் அரிசி பருப்பும் தான் சமைச்சு இருப்போம்ங்க.. அதனால் அந்த காலத்தில் பெண்களின் திறமையை குறைச்சு எடை போட முடியாதுங்க..

இந்த காலத்து பெண்கள் விட அந்த காலத்து பெண்களுக்கு அதிக நேரம் இருந்ததுனும், அவங்க அதிகபட்ச சதவிகிதம் சமையல் தான் செஞ்சாங்கனும் சொல்றது எல்லாம் அபத்தம்ங்க..அந்த காலத்து பெண்கள் காலைல 4 மணிக்கே எழுந்து சாணம் தெளிச்சு, கோலம் போட்டு , மாட்டு கொட்டாய் சுத்தம் செய்து, 6 மணிக்கே அடுப்பை பத்த வைத்து ( அடுப்பை தொடும் முன் குளிச்சிடுவாங்க) சமையலை தொடங்குவாங்க.

இந்த கால பெண்கள் சீரியல், ஃபேஸ் புக் நைட் லேட்டா துங்கி,காலை ஆபிஸ்னா 8 மணிக்கு எழுந்து அவசரமா குளிச்சு, சான்ட்வேஜ்ஜோ, இட்லி தோசையோ அவசரமா ஊத்தி , மதியம் ஏதாவது ஒன்னை கிளறி எடுத்துட்டு ஓடுறோம்.லீவு நாள்னா பத்து மணிக்கு எழுந்து, நீட்டி நெளிஞ்சு.. குளியல் எல்லாம் சாயங்காலம் தான் ;) சோம்பேரித்தனமா வேலை செய்யறோம்.

அந்த காலத்து பெண்கள், விறகை அடுக்கி, கண்கள் எரிய, புகை தொண்டையை அடைத்து இருமல் வர, மூனு கல்லுல குண்டா வைத்து கஷ்டப்பட்டு சமைச்சாங்க..
இந்த கால பெண்கள், எலக்ட்ரிக் அடுப்புல, இப்படினா ஆண் ஆகுது, அப்படினா ஆஃப் ஆகுது, அதுல நிமிஷத்துல சமைச்சு முடிக்கிறோம்ங்க.

அந்த கால பெண்கள் ஜாலியா அடுப்பு வேலை மட்டும் பாக்கலை. மாட்டை குளிப்பாட்டறது , கையாள துவைச்சு , நோட் தி பாயின்ட் யுவர் ஆனர் கையாள துணி துவைப்பது, வீட்டை சுத்தமா வைக்கறது, வயல் இருந்தா விவசாய வேலைக்கு உதவி செய்வது, விறகு பொறுக்க போவது, வெட்டுவது.. அது இதுன்னு அப்பப்பா எத்தனை வேலைகளை மெஷின் இல்லாம செய்தாங்க தெரியுமா? மெஷின்ஸ் இருந்தே நாம படாதபாடுபடறோம்.இத்தனை வேலையில் அவங்க பக்குவமா சமச்சாங்க நடுவரே.முழு நேரமும் சமையலில் இல்லை.

இந்த கால பெண்கள், மாவு அரைச்சு, சட்னி அரச்சு எல்லாத்தையும், குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
அந்த கால பெண்கள் எல்லாத்தையும் புதுசா செய்யணும்.

சோ ..பழைய கால பெண்கள், சும்மா இருந்தாங்க. அதனால் அதிக நேரம் சமயலறையில் இருந்தாங்க. ஆனா இந்த கால பெண்கள், வேலை செய்துட்டே சமைச்சு அசத்தறாங்கனு சொன்ன ஒத்துக் கொள்ள முடியாது ;) அந்த கால பெண்களும் ஆண்களுக்கு நிகரா நிறைய வேறு வேலை செய்துக்கிட்டு தான், எந்த இயந்திரமும் இல்லாமல் ஃபிரஷா சமச்சாங்க...

எத்தனை தான் நெட் இருந்தாலும், சமையலில் ஒரு சந்தேகம்னா உடனே அம்மாவை தானே அழைத்து பேசறோம் நடுவரே. என்னதான் சொல்லுங்க..விதவிதமா சமயத்தாலும், அம்மா செய்து தரம் ரசத்துக்கு நிகர் எது. காய்ச்சல் சமையத்துல அவங்க தர ரசம்க்கே காய்ச்சல் பறந்து ஓடிடும்.

சமையலில் நாம கத்துக்குட்டி தான். கில்லாடிகள் எப்பவுமே நம்ம பாட்டிகள், அம்மாக்கள் தாங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே சமையலில் கில்லாடிகள் இந்த காலத்து பெண்கள் தான். நான் ஏற்கனவே அறுசுவையை உதாரணம் சொன்னேன் அது எப்படினா இங்க நம்ம அறுசுவைய எடுத்துக்கிட்டோனா 90% குறிப்பு இந்த கால்த்து பெண்களோடது தான். கில்லாடியா இல்லாம இருந்தா இவ்வளவு குறிப்புகள் தர முடியுமா?

அம்மா,பாட்டி எல்லாம் பாத்தீங்கனா எத்தனை வகையா சமைப்பாங்க.ரொம்ப கொஞ்சம் வெரைட்டி தான் அவங்களுக்கு சமைக்க தெரியும். தெளிவா சொல்ல போனா அவங்க வட்டார உணவு மட்டும் தான் அவங்களுக்கு சமைக்க தெரியும்.ஆனால் இப்போ இருக்குறவங்க அவங்க வட்டார சமையல் மட்டும் இல்லாம வெளி வட்டார சமையல்,வெளி மாநில சமையல்,வெளி நாட்டு சமையல் இப்படி எல்லாத்துலயும் அசத்துறாங்க. நம்ம பாட்டிய ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பீஸா செய்ய சொன்னா செய்ய தெரியுமா? ஆனால் இப்போ இருக்குறவங்க பாட்டி சமையலும் செய்வாங்க ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பீஸாவும் செய்வாங்க.

// இன்றைய சமையல் எல்லாத்துக்கும் ஸ்பூன் அளவு தரும், அன்றைய சமையல் கை அளவு, கண் அளவு... கொஞ்சமும் மிஸ் ஆனதில்லையே. அதை என்னன்னு சொல்ல?// எதிரணி தோழி இப்படி சொல்றத ஒத்துக்க முடியாது நடுவரே. அவங்கள் மட்டும் மனசுல வச்சிட்டு இப்படி சொல்றாங்கனு நினைக்கிறேன்.நான் சமைக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து இது வரைக்கும் ஸ்பூன் அளவுல எதும் போட்டது இல்ல எல்லாமே கண் அளவு தான். அறுசுவைக்கு குறிப்பு அனுப்பும் போது எனக்கு ரொம்ப கஷ்டமன விஷயம்னா அது தேவையான பொருட்கள்ல அளவு சொல்றது தான் ஏனா நான் எதும் அளந்து போட மாட்டேன் ஆனால் குறிப்பு அனுப்பும் போது கண்டிப்பா அளவு சொல்லனும் இல்லனா நல்லா இருக்குமா?

//பெறுகி வரும் மசாலா பொடிகளும், ரெடிமேட் மிக்ஸ்களும், பொடி வகைகளும், ரெடி டு ஈட் வகைகளும், ரெஸ்டாரண்ட்டுகளுமே நல்ல உதாரணம் :)// எதுக்கு நடுவரே ரெடிமேட் மிக்ஸ் வருது? இப்போ இருக்குற நேரமின்மை தான் அதற்கு காரணம். காலைல எந்திரிச்சி வேலைக்கி கிளம்புற அவசரத்துல அம்மியில மசால அரச்சி குழம்பு வைக்க முடியுமா? இன்னும் எதிரணியினர் விறகு அட்ப்புலயா சமைக்கிறாங்க கேஸ் தான... அம்மியிலயா அரைக்கிராங்க மிக்ஸி தான? அதுமாதிரி தான் நடுவரே ரெடிமேட் மசாலாவும்....

//நமக்கு பருப்பை குக்கரில் வைத்து தான் சாம்பார் செய்ய நேரம் இருக்கும். அதுவும் காய்களை கடாயில் போட்டுவிட்டு , அலுவல் வேலைக்கு ரெடி ஆகிட்டு இருக்க தான் முடியும்.ஆனா நம்ம பழைய கால பெண்கள் , பக்கத்திலே நின்னு பக்குவம் மாறாம சமைப்பாங்க. //அந்த காலத்துல பெண்களுக்கு சமைக்கிறது மட்டும் தான் வேலை. அவங்க நல்லா சமைக்கிறதுங்கிறது பெரிய விஷயமே இல்ல. ஆனா இப்பொ இருக்குற பெண்கள் வேலைக்கும் போகனும்,குழந்தைக்கு பாடமும் சொல்லி தரணும்,சமைக்கவும் செய்யனும் அதும் வித விதமா.இவ்வளவு வேலையும் பாத்துட்டு விதவிதமாவும் சமச்சி அசத்துற இந்த காலத்து பெண்கள் தான் சமையலில் கில்லாடிகள் நடுவரே... நேரம் கிடைக்கும் போது மீண்டும் வரேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நடுவரே... நம்ம அம்மா வயசு மக்கள் தான் இன்று சமையலில் வல்லுனர்களாக டிவியிலும், நெட்டிலும் சமையல் கத்து கொடுக்கும் ரேவதி ஷன்முகம், ரேவதி சங்கரன், நம்ம தொப்பை ப்ரொஃபசர்... அவர் பேரு நினைவுக்கு வரலயே... இவங்க எல்லாம். அவங்ககிட்ட் அகத்துகிட்டாலும் அவங்க அளவுக்கு நம்மால் வர முடியலயே. அவங்க தாங்க கில்லாடிங்க.

அந்த காலத்தில் என் அம்மா கூட பள்ளி படிக்கும் போதே வீட்டில், வயலில் வேலை செய்யும் 20, 30 பேருக்கு சமைச்சு போட்டவங்க தான். சும்மா சமைஅல் மட்டுமே வேலை இல்லைங்க... பள்ளிக்கு போய் வந்தாங்க. கூடவே வீட்டு வேலை எல்லாம் செய்வாங்க. வீட்டில் எல்லார் துணியும் கிணற்றுக்கு கொண்டு போய் துவைத்து கொண்டு வருவதும் அம்மா தான். இத்தனைக்கும் அது கூட்டு குடும்பம். வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் காட்டுக்கும், விவசாயத்துக்கும், நெசவுன்னும் பிசியா இருந்தா, இவங்க தான் எல்லா வேலையும் பார்ப்பாங்க. அதெல்லாம் இன்னைக்கு நம்மால் நினைச்சே பார்க்க முடியாது.

ஒன்னும் வேணாங்க... அந்த காலத்தில் பயன்படுத்தின அடுப்பில் தீயை கட்டுப்படுத்துவதே சிரமம். ஆனா அதிலும் நம்ம அந்த கால பெண்கள் கில்லாடிகள் தான். நாமலாம் வெச்சா வெச்சதும் கருகி போகும். இன்னைக்கு எல்லாத்துலையும் டைமர்... இல்லன்னா நாம எல்லாம் சமைச்சு ஒரு வழி ஆக்கிடுவோம். அனுபவத்தில் எனக்கு தெரிஞ்சு நான் பள்ளி படிக்கும் வரை கூட பாட்டி வீட்டில் இந்த் ஆடுப்பு தாங்க... புகையில் என்னால் கண்ணை கூட திறக்க முடியாது... பாட்டி அதிலையே சமைச்சு அசத்துவாங்க.

முன்பெல்லாம் பலகாரம்... தீபாவளி, பொங்கல்னா எத்தனை வகையா சமைப்பாங்க?? எத்தனை பலகாரம் வீட்டில் செய்தாங்க??? இன்னைக்கு வினாயகர் சதுர்த்திக்கு கூட சுண்டலை அடையார் ஆனந்தபவனில் வாங்குறாங்க ;( இது நிச்சயம் நேரமின்மை இல்லை நடுவரே... சோம்பேரி தனம்.

என் பாட்டி வீட்டில் ஃப்ரிட்ஜ் எல்லாம் இப்போ தான்... இதுக்கு முன்பு பானையில் வெண்ணெய் சேகரிப்பாங்க. இன்னைக்கு வீட்டில் நெய் செய்வதுன்னு சொன்னா “அட... நெய் கூட் அவீட்டில் செய்யலாமா”னு என்னிடம் கேட்டவர்கள் உண்டு. இத்தனைக்கும் நான் வெண்ணெய் வெளிய வாங்கி தான் செய்யறேன். பாட்டி, அம்மா காலத்தில் தினம் பால் காய்ச்சு, தயிராக்கி, மோராக்கி, கடைஞ்சு வெண்ணெய் எடுத்து பானையில் சேகரிச்சு வெச்சு, பதமா அருமையா நெய் காய்ச்சினாங்க... இன்னைக்கு ஃப்ரிட்ஜ் இல்லாம வெண்ணெயை ஸ்டோர் பண்ண கூட நமக்கு தெரியாது.

இப்போ சமையலை பொறூத்தவரை சுவைக்கு தான் அதிக முக்கியத்துவம். ஆனா அந்த காலத்தில் உணவை மருந்தா கொடுத்தாங்க. எப்போ என்ன உணவு கொடுக்கணும்னு அறிவுப்பூர்வமா செய்தாங்க. வயது வந்த பெண்ணுக்கு என்ன தரணும், குழந்தைக்கு என்ன தரணும், பிள்ளை பெற்றவளுக்கு என்ன தரணும், பிள்ளை உண்டானவளுக்கு என்ன தரணும்னு உணர்ந்து செய்தாங்க. உணவே மருந்தா அவங்க செய்ததால் தாங்க இன்னும் பாட்டி வைத்தியம் பிரபலமா இருக்கு.

வெளி சமையலை அக்கால பெண்கள் ட்ரை பண்ணுவதே இல்லைன்னு யார் சொன்னது?? நான் மற்ற உணவுகளை சமைக்க ஆர்வம் காட்டுவதே அம்மாகிட்ட கத்துகிட்டது தாங்க... அம்மா திருநெல்வேலியில் இருந்தபோது அந்த ஊர் சமையல் கத்துகிட்டாங்க, தருமபுரி மாவட்டத்தில் இருந்தப்போ அந்த ஊர் சமையல் கத்துகிட்டாங்க. இப்போ சென்னை வந்து இங்கையும் கத்துக்கறாங்க. அவங்க சமையல் ஆர்வம் கொஞ்சமும் குறையல. டிவியில் ஒரு ஷோ விட மாட்டாங்க, பார்த்து மானசுக்கு பிடிச்ச எல்லாம் சமைச்சு பார்ப்பாங்க. இன்னைக்கு புதுசா உள்ள வந்த மஷ்ரூம், பனீர், பேபி கார்ன் முதல் எல்லாமே அவஙக் சமைக்கறாங்க... இதை விட என்ன வேணும் நடுவரே??? அன்றைய பாரம்பரிய சமையல் கூட இதையும் கத்துகிட்டு அசத்தும் அம்மா, பாட்டி சமையல் தான் கில்லாடி சமையல்னு அடிச்சு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// வனிதா வின் பொட்டுகடலை குருமா எனது அம்மாவின் மஞ்ஞள் குழம்பு போலுள்ளது // இங்கே எதிரணி தோழி குறிப்பிட்டு இருக்கும் நபர் இந்த கால பெண்மனி தானே. அவரால் தோழியின் அம்மவின் கை மணத்திலும் சமக்க முடிகிறது என்றால் அவர்(வனிதா) எவ்வளவு பெரிய கில்லாடி நடுவரே நீங்கள் இதை மறுப்பீர்களா?

//இந்த காலத்து பெண்கள் விதவிதமா சமைக்கறதுக்கு காரணம் மீடியா தாங்க. // என்ன தான் மீடியாவ பார்த்து சமச்சாலும் எல்லோராலும் நல்லா சமைக்க முடியாது. திறமை வேணும் அதான் ருசியா சமைக்க முடியும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

தோழிகளே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இன்னும் கொஞ்சம் வீட்டு வேலைகள் மிச்சமிருக்கு, முடிச்சிட்டு வந்து பதிவு போடுறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்