பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

//ஒன்னும் வேணாங்க... அந்த காலத்தில் பயன்படுத்தின அடுப்பில் தீயை கட்டுப்படுத்துவதே சிரமம். ஆனா அதிலும் நம்ம அந்த கால பெண்கள் கில்லாடிகள் தான். நாமலாம் வெச்சா வெச்சதும் கருகி போகும். இன்னைக்கு எல்லாத்துலையும் டைமர்... இல்லன்னா நாம எல்லாம் சமைச்சு ஒரு வழி ஆக்கிடுவோம். அனுபவத்தில் எனக்கு தெரிஞ்சு நான் பள்ளி படிக்கும் வரை கூட பாட்டி வீட்டில் இந்த் ஆடுப்பு தாங்க... புகையில் என்னால் கண்ணை கூட திறக்க முடியாது... பாட்டி அதிலையே சமைச்சு அசத்துவாங்க.// இப்பவும் தமிழ் நாட்டுல இரூகுற பல கிராமங்களில் விறகு அடுப்பு தான் இருக்கு. இந்த காலத்து பெண்கள் அதுல சமைச்சிட்டு தான் இருக்காங்க. அந்த காலத்துல தான் பெண்கள் கஷ்டபட்டு சமைச்சாங்க இப்போ எல்லரும் சொகுசா சமைக்கிறாங்க அப்படினு சொல்றதெல்லம் சும்மா...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

/*அந்த காலத்தில் பயன்படுத்தின அடுப்பில் தீயை கட்டுப்படுத்துவதே சிரமம். ஆனா அதிலும் நம்ம அந்த கால பெண்கள் கில்லாடிகள் தான். நாமலாம் வெச்சா வெச்சதும் கருகி போகும். இன்னைக்கு எல்லாத்துலையும் டைமர்... இல்லன்னா நாம எல்லாம் சமைச்சு ஒரு வழி ஆக்கிடுவோம். அனுபவத்தில் எனக்கு தெரிஞ்சு நான் பள்ளி படிக்கும் வரை கூட பாட்டி வீட்டில் இந்த் ஆடுப்பு தாங்க... புகையில் என்னால் கண்ணை கூட திறக்க முடியாது... பாட்டி அதிலையே சமைச்சு அசத்துவாங்க.*/

யார் சொன்னது விறகு அடுப்பு பாட்டி எரிச்சா தான் எரியும் னு... வெளிய எதுக்கு எடுத்துக்காட்டு தேடனும்... என்னோட அக்கா இருக்கிறது கிராமத்துல... அது சமையலுக்கு விறகு அடுப்புலயும் செய்யும்.. gas ஸ்டவ் ல செய்யும். ஓவன் ல யும் செய்யும்...

ஆனா பாட்டி அம்மா கு எல்லாம் எல்லாத்துலயும் சமைக்க வராது...

/*இன்னைக்கு வினாயகர் சதுர்த்திக்கு கூட சுண்டலை அடையார் ஆனந்தபவனில் வாங்குறாங்க ;( இது நிச்சயம் நேரமின்மை இல்லை நடுவரே... சோம்பேரி தனம்.*/

விநாயகர் சதுர்த்தி கூட வித்தியாச வித்தியாசமான ஷேப், டேஸ்ட் ல கொலக்கட்டை வீட்டுல செய்யுரவங்க நிறைய பேரை நான் பாத்துருக்கேன்(இக்கால பெண்கள்)...

/*அம்மா திருநெல்வேலியில் இருந்தபோது அந்த ஊர் சமையல் கத்துகிட்டாங்க, தருமபுரி மாவட்டத்தில் இருந்தப்போ அந்த ஊர் சமையல் கத்துகிட்டாங்க. இப்போ சென்னை வந்து இங்கையும் கத்துக்கறாங்க*/

அதை தாங்க நாங்களும் சொல்றோம்... அவங்க ஏரியா(sorrounding) உணவு வகைகள் மட்டும் தான் அவங்களுக்கு சமைக்க தெரியும்... ஆனா இந்த காலத்து பெண்கள் வெளிநாட்டு சமையல் கூட கிராமத்துல இருந்தா கூட கத்துக்குவாங்க.. அதுக்கு அவங்க அந்த நாட்டுக்கு போயி கத்துக்கணும் னு அவசியம் இல்லை..

அம்மாவோட சமையலுக்கு ஏங்குறதுக்கு காரணம் அம்மா நம்ம மேலயும், நாம அம்மா மேலயும் வச்சுருக்க பாசம் தான்.... மத்தபடி சமையல் ல எதுவும் இல்லை.. சமையல் அ , ஆ சொல்லி கொடுத்தது அம்மா தான்.. ஆனா phd, mphill எல்லாம் நாமல வாங்கிக்கணும்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

// இப்ப வந்து நெட், யு டிப்னு பாத்து புதுமையா செய்து சாப்பிடுகிறோம்.// புதுமையாதான் சாப்பிடுறோம், ஆனா அது நாவுக்கும், உடம்புக்கும் இனிமையா இருக்கான்னா, இல்லைனுதான் சொல்லனும். இதைதானே சொல்ல வர்ரீங்க ரம்யா.
//ஆனா அவங்களுடைய சாராம்சம் கண்டிப்பா இந்த கால பெண்களுக்கு வந்திடுமா?// நிச்சயம் வராது ரம்யா, அவங்கெல்லாம் உணவு பதார்த்தங்களை இயற்கையோடு சேர்த்து சமைச்சாங்க. உணவே மருந்து; மருந்தே உணவுனு அவங்க உணவுப் பழக்கம் இருந்தது. கடும் விஷத்தை கூட முறிக்கும் டிஷ் அவங்களுக்கு தெரியும். ஆனா நாம அப்படியா. எதையாவது சாப்பிட்டு ''ஃபுட் பாய்ஸன்'' டாக்டர்கிட்ட தானே ஓடுறோம்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க பிந்து, வாழ்த்துக்கு நன்றி. இந்த கால பெண்களுக்கு கைகொடுக்க நீங்க வந்திருக்கீங்க.
//அந்த காலத்து மக்கள் ஒரு விதமான சமையல் (single cuisine) தான் செய்தார்கள் ஆனால் இந்த காலத்து பெண்கள் பல விதமான சமையல் (multi cuisine) செய்து அசத்துகிறார்கள்..// பிந்து சரியாதானே சொல்றாங்க எதிரணி தோழிகளே. அந்த கால பெண்களுக்கு, அந்த வீட்டின் (அ) அந்த சமூகத்தின் பாரம்பரிய சமையல் மட்டுமே தெரியும். ஆனால் இந்த கால பெண்களோ உலகத்தில் எத்தனை நாடுகள் இருக்கிறதோ, அத்தனை நாடுகளின் உணவுகளை செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்திவிடுகிறார்கள்தானே.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

புதுமுக நடுவருக்கும் நல்ல தலைப்பை தந்த கல்ப்ஸ்க்கும் வாழ்த்துக்கள் :)

நடுவர் அவர்களே சந்தேகமே இல்லை சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்கள்தான் நாமெல்லாம் அவங்க கை பக்குவத்தை கையில் எடுத்துகொண்டுதான் ஏதோ சமைத்துகொண்டு இருக்கோம் என்னதான் நாம வித விதமா சமைச்சாலும் அவங்க சமைத்த சமையலுக்கு ஈடாகுமா சொல்லுங்க.

இன்னிக்கு வரைக்கும் என் அம்மா வைக்கும் கோழி குழம்புக்கு எங்க வீட்டுல எல்லோரும் அடிமை ஆனால் அதே போல நானும் செய்து பார்க்கிறேன் ம்கூம் வரவே இல்லை :(
பாட்டி,அம்மா இவங்க சமைத்த சமையலில் உணவும் ஆரோக்கியமா இருந்துச்சி உடம்பும் ஆரோக்கியமா இருந்துச்சி ஏன்னா மசாலா பொருட்கள் எல்லாம் அம்மியிலும்,ஆட்டுக்கல்லிலும் அரைத்து செய்ததால இப்பலாம் பட்டனா தட்டினாதான் வேலையே ஆகும் நமக்கு அதுல சுவையும் இல்லை ஆரோக்கியமும் இல்லை இதுதான் உண்மை.

அந்த காலத்துல மசால பொடி வகைகள் எல்லாம் அவங்களே கைப்பட பொருட்கள் சேர்த்து அரைத்து வச்சாங்க அதோட மணம்,வாசனை இதெல்லாம் இப்போ நாம சமைக்கும் இன்ஸ்டண்ட் சாம்பார் பொடியிலும்,மற்ற மசாலா பொடியிலும் இருக்கா சொல்லுங்க.
நாம என்னதான் ,நம்ம ஊர் நம்ம பக்கத்து ஊர் பக்கத்து நாடுன்னு எல்லா விதமான சமையல் செய்தாலும் அந்த காலத்துல செய்த கம்மஞ்சோறு,கேழ்வரகு கழி,பூரி லாடு,கெட்டி உருண்டை,இதுபோல இன்னும் பலவிதமான சமையலுக்கு இன்று வரை ஏங்கி கொண்டுதான் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

///நடுவரே சமையலில் கில்லாடிகள் இந்த காலத்து பெண்கள் தான். நான் ஏற்கனவே அறுசுவையை உதாரணம் சொன்னேன் அது எப்படினா இங்க நம்ம அறுசுவைய எடுத்துக்கிட்டோனா 90% குறிப்பு இந்த கால்த்து பெண்களோடது தான். கில்லாடியா இல்லாம இருந்தா இவ்வளவு குறிப்புகள் தர முடியுமா?///

நடுவர் அவர்களே 90 சதவிகிதம் குறிப்பு இந்த காலத்து பெண்ணோடதா இருந்தாலும் அதில் 70 சதவிகிதம் பாட்டி,அம்மா,அத்தை போன்றவர்களிடம் கற்று கொண்டதும்,தெரிந்து கொண்டதுமாகத்தான் இருக்கும், இல்லை இதெல்லாம் நானே சுயமாக கற்றுகொண்டது என்று இந்த கால பெண்களால சொல்லமுடியுமான்னு கேளுங்க நடுவரே
அப்பவே இண்டர்நெட்,அறுசுவை போன்ற வசதிகள் இருந்திருந்தால் அவங்களே போட்டுட்டு போயிருப்பாங்க அப்போ இந்த வசதிகள் இல்லாததால் நாம போட்டு பேர் வாங்கிட்டு இருக்கோம் அவ்வளவே :)

நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தலைப்பு நாயகி கல்பனா வருக!வருக! இந்த தலைப்பை பார்த்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன். நான் நடுவரான இதைதான் பேசனும்னு. அவ்வளவு இம்ப்ரஸ் பண்ணிடுச்சி. நன்றி கல்பனா.
// காலை 9 மணிக்குள்ளாக 2 வித பொரியல், குழம்பு, ரசத்தோடு மதிய சமையலையும், இரண்டு வித சட்னியோடு காலை டிபனையும் சிட்டு மாதிரி முடித்து வைத்திருப்பார்.// நாமெல்லாம் பெட் விட்டு எழுவதே இந்த டைமுக்குதான். அப்புறம் எப்படி இதெல்லாம் பண்ண முடியும் சொல்லுங்க. அப்படி இல்லையா வேலைக்கு போற இந்த கால பெண்கள் காலை 7மணிக்கே வீட்டை விட்டு கிளம்பிடுவாங்க ஸோ, அவங்களாலயும் முடியாது. சூரியன் ஒரு 9மணிக்கா உதிச்சா அவங்களும் இதையெல்லாம் பண்ணுவாங்க. அதனால தப்பு இந்தகால பெண்கள் மேல இல்ல. சூரியன் மேலதான்.
// அரிசி கழுவிய தண்ணீரையும் வீணாக்காமல் அதிலேயே ரசத்தை வைப்பார்.// நம்மளையெல்லாம் அரிசி கழுவிய தண்ணியில ரசம் வைக்க சொன்னா, கஞ்சி வெச்சி வேணா தருவோம். கஞ்சி காய்ச்ச சொன்னா கோந்து காச்சி தருவோம். நாங்களும் எள்ளுனா எண்ணையா நிப்போம்ல.
//ஒரு சப்பாத்தியை சாஃட்டாக செய்வது எப்படி என தெரியாமல் இன்று வரை நான் முழித்துக்கொண்டிருக்கும் உண்மையை உங்களிடம் சொல்லாமல் காப்பாற்றி வருகிறேன்.// கல்பனா, நான் வேணா டிப்ஸ் தரவா?. ஆனா அதை செய்துட்டு கண்டபடி திட்டவெல்லாம் கூடாது. சரியா.
//நாம் சமைக்கும் சமையலில் நம் மனநிலையும் பிரதிபலிக்கும். நல்ல அமைதியான மனநிலையோடு சமைக்கும் போதும், அன்போடு சமைக்கும் போதும் அந்த சமையல் மிகவும் ருசிக்குமாம்.// ஆமாம் கல்பனா, நானும் கேள்வி பட்டேன். இந்தகால பெண்களின் சமையலில் பழிவாங்கும் உணர்ச்சி அதிகம் பிரதிபலிக்கிறதாம்.
//மூணு மாசம் பண்ண பிரியாணியை டிபன் பாக்ஸ்ல போட்டு தந்தா தான் வழிக்கு வருவாங்க ;)// இதைதான் சொன்னேன் கல்பனா பழிவாங்கும் உணர்ச்சினு. ஆனாலும் நீங்க இப்படியெல்லாமா பண்ணுவீங்க.
// ஜென்ம விரோதி மாதிரி திட்டிட்டு போய்ட்டா// உங்களுக்காவது பரவால்ல கல்பனா. நான் ஒருநாள் புளி காய்ச்சல் பண்றேன்னு செய்ய ஆரம்பிச்சேன். என் தங்கை வீட்ல இருந்தா, தீடீர்னு ஓடி வந்து என்ன கிச்சன்ல இருந்து ஒரு பேட் ஸ்மெல் வருதுனு கேக்குறா. இதுக்கு மேல ஒரு அவமானம் இருக்கா என்ன.
//யாராவது சமையலில் சந்தேகம் கேட்டு வந்திருப்பதை பார்க்க முடியுமா? எல்லாம் இந்தக்கால பெண்கள் தான் அணிவகுத்து நின்றிருப்பார்கள்.// நானும் அறுசுவைல பேக்கிங் பவுடருக்கும், பேக்கிங் சோடாவுக்கும் என்ன வித்தியாசம்னு ஒரு சந்தேகத்தை கேட்டிருக்கேன். எனக்கு யாருமே பதில் போடல. பாவம் என்னை போலவே யாருக்கும் தெரியல போல.
//வேறு யாரையாவது சமைக்க விட்டுட்டு இவங்க ஹாயாக உக்கார்ந்து பூண்டு உரிச்சு தந்துட்டு, உக்கார்ந்த இடத்துலயே காய்கறி அரிஞ்சு தந்து மருமகளுக்குரிய கடமையை பொறுப்பா நிறைவேத்திடுவாங்க.// எங்க வீட்ல எல்லாம் அப்படி இருக்க முடியாதே. எனக்கு பெண்டு கழண்டிடும்.
//கடைசியா பார்த்தா கிளாஸ்ல ஊத்தி தருவாங்க. கேட்டா சர்க்கரை கொஞ்சம் கூடி போச்சு அதான் நீர்த்து போச்சு.// வந்தா தேங்காய் பர்பி, வரலேன்னா தேங்காய் பால் கீர். இப்படி டூ இன் ஒன்னா சமைக்கவும் திறமை வேணாமா? இந்த கலை எல்லாம் நம்மை தவிர யாருக்கு வரும்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

//அம்மா சமைக்க கத்துகிட்ட புதிதில் உட்கார்ந்த் இடத்திலேயே ”பாப்பா உப்பு கம்மி, காரம் கூட” என எல்லாம் சொல்லிடுவாங்களாம். அவ்வளவு எக்ஸ்பர்ட் சமையலில் அம்மாவின் பாட்டி.// சாப்பிடாமலே சொல்லுவாங்கன்னா கண்டிப்பா எக்ஸ்பர்ட்தான். நம்ம சமையல்ல எல்லாம் உப்பு, ஒரப்பு இல்லைன்னாலும், பேசாம எல்லோரும் சாப்பிட்டுதானே ஆகனும். இல்லைன்னா அடுத்த நாள் அதுவும் கிடைக்காதே.
//இந்த கலத்தில் எத்தனை பெண்களுக்கு கொழுக்கட்டைக்கும், இடியாப்பத்துக்கும் வீட்டில் மாவு திரிக்க தெரியுது?, இந்த கால பெண்கள் வீட்டில் ரசப்பொடி, சாம்பார் பொடி செய்றாங்க??? ஒன்னு அம்மா வீட்டில் இருந்து கொடுக்கணும்,// நானெல்லாம் செய்வேனாக்கும்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க கார்த்திகா, வாழ்த்துக்கு நன்றி. இன்றைய பெண்களுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்திருக்கீங்களா.
// 10, 12 வயசு ல எல்லாம் எல்லாமே செய்து பழகிருப்பாங்க...maximum 1 வருஷம் தான்... அவங்க சமையலை விட நல்லாவே செய்துருவாங்க.// இக்கால பெண்களெல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வெருவீங்கன்னு சொல்றீங்க. சரியா கார்த்திகா.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

//உண்மையில் 4 நாளைக்கு நாம தொடர்ந்து செஞ்சா “ஏம்மா அவளையே செய்ய விடுற, நீ செய்ய கூடாதா...” அப்படின்னு இண்டைர்க்ட்டா “உன் சமையல் போல வருமா...”னு மனைவிக்கு இன்ஸ்டர்க்‌ஷன் குடுத்துடுவாங்க.// என் கணவர் கூட, தினமும் நீயே சமைச்சி ஏம்மா கஷ்டப்படுற, எங்கம்மா சும்மாதானே இருக்காங்க, அவங்கள செய்ய சொல்ல கூடாதான்னு சொல்வாரு. நான் கூட எவ்ளோ அக்கறைனு நினைச்சேன். இப்போ நீங்க சொல்லிதான் உண்மையான அர்த்தம் புரியுது.
//அவங்களுக்கு அந்த காலத்தில் அதிகமான உணவு வகைகளை காட்ட ஆளில்லைங்க...இருந்திருந்தா... இன்னைக்கு நாம எல்லாம் இத்தனை வகை சமைப்பதில் நாங்க முதல்னு கூட சொல்லிக்க முடியாது. அடிச்சு தூள் கிளப்பியிருப்பாங்க.// ஆமாம், என் மாமியார் என்னை பார்த்து பொறாமை பட்டு ஃப்ரைட் ரைஸ் பேரனுக்கு பண்றேன்னு சொல்லி வெஜிடபிள் பிரியாணி செஞ்சி எடுத்துட்டு வந்தாங்க.
//அந்த பொடியை எந்த பதத்தில் அரைச்சு வைக்கணும், எப்படி வெச்சா வருடத்துக்கும் கெடாம இருக்கும்னு கூட நமக்குலாம் தெரியாதுங்க.// இதெல்லாம் நாமும் தெரிஞ்சிக்க முடியும். ஆனா அதுக்கு ஆர்வமும், அக்கறையும் வேணும். அதுதான் நம்மகிட்ட இல்லையே.
//வயதில் நம்மை விட பெரியவர்கள் அம்மாக்கள் அறுசுவையில் இல்லையா என்ன? அவங்க அனுபவத்தில் சொல்லும் விஷயங்களை கேட்டு தானே கத்துகுட்டிங்க நாம கத்துக்கறோம்??? // ரொம்ப சரி வனி, அவங்களும் இந்த பட்டியில் கலந்துக்கிட்டா இன்னும் இந்த தலைப்பு சிறப்படையும்னு நினைக்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க ஷமீலா, வாழ்த்துக்கு நன்றி.
//தாய்நாட்டுக்கு போய் பெரியவர்கள் கையால் சாப்பிட மாட்டோமா என்று மனசு ஏங்குகிறது...// நீங்க சொல்றது 100/100 உண்மை, இப்படி ஏக்கத்தோடு தாய்நாட்டு(வீட்டு) சாப்பாட்டுக்காக ஏங்கிட்டு வெளிநாட்டிலிருந்து வர்றவங்க, எங்க வீட்லயும் இருக்காங்க. இன்னும் வாதங்களோடு வாங்க.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்