பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

//பழைய டி வி எல்லாம் பெரிய பீரோ சைசில இருந்தது... அதற்காக இன்னைக்கும் அதே மாதிரி தான் புது டி வி வாங்குவோமா? லேட்டஸ்ட் டெக்னாலஜி டி.வி தானே வாங்குவோம்...// கொஞ்சம் ஃபார்வேடா யோசிக்க சொல்றாங்க.
//இப்போது உள்ள சூழ்நிலையில் நமக்கு அது போல் கிடைப்பதில்லை..// ஆனால் கிடைப்பதை வைத்து ருசியாய் சமைக்கிறாங்களே, அது கில்லாடித்தனம் இல்லையா எதிரணியினரே?பிந்து கேக்குறாங்க.
//அப்படி பார்க்க போனால் நிஜமான கில்லாடிகள் ஆதி மனிதர்கள் தான்// அச்சச்சோ லிஸ்டுல ஆதிமனிதர்களை குறிப்பிடாம விட்டுட்டேனே. சொல்லியிருந்தா அவங்கதான் கில்லாடிகள்னு சொல்லியிருப்பாங்க எதிரணி.
// இப்போ நான் எல்லாம் சமையலில் வெகு சுமார் ஆனாலும் என் மகளுக்கு என் சமையல் தான் விருப்பம்.... நான் என்ன அவளுக்கு ஸ்பெஷலாகவா செய்கிறேன்... அவளுக்கு பிடித்த வகையில் செய்கிறேன் அவ்வளவு தான்...இதெல்லாம் காலம் காலமாக வரும் நம் உறவு பழக்கங்கள்... இதை எல்லாம் கொண்டு இவர்கள் தான் கில்லாடிகள் என்று சொல்லி விட முடியாது...// நீங்க சொல்றதையெல்லாம் மறுக்கவே முடியாது பிந்து. இதுக்கெல்லாம் எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

//ஆனாலும் அவரகளுக்கு கிடைக்கும் அந்த ரா materials பிரெஷாக இருக்கிறது...// என்ன சொன்னாலும் கைப்பக்குவம்னு ஒன்னு இருக்குனு எதிரணி சொல்லப்போறாங்க பாருங்க.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க அருட்செல்வி, நீங்களும் பாட்டி காலமா. கீரையை மிக்ஸியில் போட கூடாது. மத்தால்தான் கடையனும். அப்போதான் ருசியும், மணமும் கிடைக்கும். இன்னும் வாதங்களோடு வாங்க.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

வாங்க தளிகா. இக்கால பெண்கள் அணியா.
//பாரம்பரிய சமையல்,நம்ம ஊர் நம்ம பக்கத்து ஊர் பக்கத்து நாடு என்று உலகில் முக்கு மூலைகளில் காணும் அனைத்தையும் சமைத்து அசத்த்ய்கிறோம்,,இப்போல்லாம் நம்ம பெற்றோரே நம்மை பார்த்து வியக்கிறார்களா இல்லையா// ஆமாம், உண்மைதான். இன்னும் வாதங்களோடு வாங்க. காத்திருக்கேன். சீனியர்ஸ் எல்லாம் வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

//இந்த காலத்தில் மீடியா இல்லாமல் போயிருந்தா நாமும் அரிசி பருப்பும் தான் சமைச்சு இருப்போம்ங்க..// ஸ்டார் ஹோட்டல்கள் கூட காரணம். அங்க சாப்பிட்டு, அதையே செய்து கொடுக்க சொல்லி வாண்டுகள் பிடிக்கும் அடம்.
//இந்த கால பெண்கள், மாவு அரைச்சு, சட்னி அரச்சு எல்லாத்தையும், குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
அந்த கால பெண்கள் எல்லாத்தையும் புதுசா செய்யணும்.// இப்ப இருக்கிற பவர் கட்ல நாமளும் தினமும் புதுசா செய்ய வேண்டிய நிலைலதான் இருக்கோம்.
//அது இதுன்னு அப்பப்பா எத்தனை வேலைகளை மெஷின் இல்லாம செய்தாங்க தெரியுமா? மெஷின்ஸ் இருந்தே நாம படாதபாடுபடறோம்// எல்லா எலக்ட்ரிக் குட்ஸும் இருந்தும், எதுவுமே இல்லாத மாதிரிதான். ராத்திரியானா தூங்க முடியாம, இருட்டுல வாழற கற்கால வாழ்க்கை. அதனால நாங்களும் குறைஞ்சவங்க இல்ல அப்படினு எதிரணி சொல்லப்போறாங்க

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

இழையை மேலே தூக்கி விட இந்த பதிவு. இரவு நேரம் வருபவர்கள் மிஸ் பண்ணாம இருக்க தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவருக்கும் மற்றும் என் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்

கொஞ்ச நாளா அறுசுவை பக்கம் வர முடியல. ஏதோ என்னால முடிந்த அளவு இந்த பட்டில கொஞ்சம் பத்த வைக்குறேன்.

சமையலில் கில்லாடிகள் வேற யாருங்க அந்த கால பெண்கள் தான். இந்த காலத்துல எல்லாமே ரெடிமேட் பொடி தான் எல்லாமே. புளி சாதம் செய்யணுமா பொடிய வாங்கி செய்து வைத்திருக்கும் சாதத்துல ஒரு கலக்கு கலக்கி கொடுத்து விடுறாங்க. இன்றைக்கு எத்தனை பேர் கைல மசாலா அரைத்து குழம்பு வைக்குறாங்க ? எல்லாமே மிக்ஸ்சி. மண்பானை சாப்பாடு எவ்வளவு ருசியா இருக்கும். ஆனா இப்போ உள்ள பெண்கள் அப்படியா சமைக்குறோம் ?

//இந்த காலத்து பெண்கள் 3d, 4d என்று இல்லை 100d வரைக்கும் கூட வித விதமான சமையல் செய்யும் வல்லுனர்கள்..// ஓ அதனால தான் கணவன்மார்கள் பிள்ளைகள் எல்லாம் ஓட்டலுக்கு போய் சாப்பிடனும்னு ஆசை படுறாங்களோ ?

//அப்படி பார்க்க போனால் நிஜமான கில்லாடிகள் ஆதி மனிதர்கள் தான்... ஏன்னா எப்படியும் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையிடம் தான் சமையல் கற்றுக் கொள்ள முடியும்... சோ ஸ்டார்டிங் பாயின்ட் ஆதி வாசிகள் தானே// அத தானே சொல்றோம். அந்த காலத்து பெண்கள் தான் சமையலில் கில்லாடிகள்.

அந்த காலத்து பாட்டி தாத்தா எல்லாரும் நீண்ட ஆயுளோட இருந்ததுக்கு காரணம் அந்த கால பெண்களோட சமையல் தான். அவுங்க சமையல்ல எல்லாமே இருந்தது. ஆனா இப்போ உள்ள பெண்கள் சமையல் அப்படின்ற பேர்ல கண்ட பொடிகளை கலந்து நம் ஆயுளை நாமலே குறைத்து தானே கொள்கிறோம்.

அப்புறமா வாறன் ...

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நடுவரே

நடுவரே.. ஆதிவாசி பெண்களா இந்த கால பெண்களான்னு கேட்டாலும் நாங்க பேசுவோம்.. ஆனா என்ன செய்ய ..நடுவர் நம்ம அம்மா பாட்டியான அந்த கால பெண்களை தான் சொல்லி இருக்கிங்க ;)

மைசூர்பா சுவையா தான் இருக்கு .. ஆனா அதுல வியாதி அதிகம் இருக்கு :) ஆப்பிள் அதை விட சுவை கம்மி தான்..ஆனால் உடம்புக்கு ரொம்ப நல்லது. இது ஏன் நான் சொல்ல வரேனா? கில்லாடிகள் என்பதன் அர்த்தம் என்னன்னா.. எல்லா வகையிலும் திறமையானவங்க என்பது தான் அர்த்தம். ஸ்மார்ட்டா இருப்பவங்க.. எது இருந்தாலும் சமாளிப்பவங்க..
சுவை சுவைனு சொல்றாங்க..இந்த கால பெண்கள் சுவையா தான் சமைக்கறாங்க.ஆனா ஆரோக்கியம் ? அந்த கால பெண்களை போல செய்யமுடியுமா?

கில்லாடிகள் என்பது சுவையா தருவதோடு மட்டுமின்று, ஆரோக்கியமா செய்து தரவதும் தான்.. அந்த கால பெண்கள் கழி கிண்டினாங்க,, இந்த கால பெண்களில் எத்தனை பேருக்கு ஆரோக்கியமான கம்பை பக்குவமா செய்ய தெரியும் ? எல்லாவற்றிலும் சாயம், கெமிக்கல், கண்ட பொடி போட்டு தானே செய்யறோம்.

அதான்.கார்னிஷ்.. கார்னிஷ் பண்றேன்னு தேவையில்லாததை செர்க்கறோம்.. கலரான சிகப்பு நிற தந்துரின்னு சொல்லி சிவப்பு வண்ணத்தை கலக்குறோம். அந்த கால பாட்டியும் தான் கோழி குழம்பு வெச்சாங்க..நாட்டுக் கோழி அடிச்சு, மிளகு தட்டி தண்ணி மாதிரி வைக்கும் குழம்பு மருந்தா இருந்தது.சளியை தீர்த்தது..

சிவப்பு பொடி போட்டு, பொரிச்செடுக்கும் கோழி கொழுப்பை கொடுக்குது. கில்லாடி என்பது சுவையை தரும்படி சமைப்பது மட்டுமில்லை.
சுவையோடு சத்தாக தருவதும் தான். அதை அந்த கால பெண்கள் தான் செய்தார்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் கூட்டணி இந்த பட்டிக்கு மட்டும் உடைகிறது :(. ஹி ஹி இப்போ புரிஞ்சிருக்குமே நான் எந்த அணின்னு :). இக்கால பெண்களே சமையலில் கில்லாடிகள் என்பதே வாதம்.

சீட் புடிச்சுட்டேன். வாதங்களோடு விரைவில் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

naduvare,
super. unga title . aana old ladies i.e. nama patti, amma samaiyal than eppavum super. athil than vitamins, protiens appadinu neriya items irunthathu. aana intha kalathula appadi ethuvum kidaiyathu.

with regards
"He who has health has hope. And he who has hope has everything.” - Arabian proverb
sumithra vijayakumar

நடுவர் அவர்களே
எனது பாட்டி ரவை உப்புமாவிற்கு அரிசியை வறுத்து ராகிக்கல்லில் அரைத்து அதாவது அவர்களே ரவை தயாரித்து உப்புமா செய்வார்கள். நம்மாள் அந்த கல்லை நகர்த்தக்கூட முடியாது. ஆயத்தபொடிகள் அனைத்தும் வீட்டில் அவரின் கைவண்ணமே. வேலை ஆட்களுக்கும் உண்ணவளிக்கவேண்டியிருக்கும். எந்த இயந்திரமும் கிடையாது. சுவையும் மண்மும் நாவில் இன்றும் நீருற வைக்கிறது. இந்த தலைப்பை கொடுத்த கல்பனாவிற்கு ரொம்ப நன்றி.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்