பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

பெருமைக்கும் மதிப்பிற்கும் உரிய நடுவர் அவர்களுக்கு வணக்கம்;-)

”பெருமை” எதுக்குனா என்னோட பட்டியிலதாங்க நீங்க மொதமொதல்ல பேசினீங்கங்கற பெருமை;-) ”மதிப்பு” வழக்கம்போல அறுசுவை நடுவர்ங்கற உயர்ந்த பதவிக்கு நாங்க கொடுக்கற மரியாதைதாங்க;-)(ஹி ஹி இந்த வாரம் முடியும்போது நீங்களே புரிஞ்சுக்குவீங்க ;-)

நடுவரே...!

//ஆதிவாசி பெண்களா இந்த கால பெண்களான்னு கேட்டாலும் நாங்க பேசுவோம்.. ஆனா என்ன செய்ய ..நடுவர் நம்ம அம்மா பாட்டியான அந்த கால பெண்களை தான் சொல்லி இருக்கிங்க ;)//

அதே அதேதாங்க .., அந்தக்காலம்னா அம்மா, பாட்டி காலத்த மட்டும் பேசுங்க., இந்தக்காலம்னா ஃப்ரெஷ் அண்டு யங் லுக்கிங் மிஸ் அண்டு மிஸ்ஸஸ் பத்தி பேசுங்கன்னு என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை வைச்சிட்டு கலத்தில குதிக்கறேன் நடுவரே ....

(அய்யோ... அம்மா...பனால்.. டமால்...)

நடுவரே நான் குதிச்சதுல உடைஞ்சது நீங்க போட்டிருந்த சேர்தான் ஆனால் என் வாதம் முடியும்போது உடையறது எதிரணியின் மூக்கா கூட இருக்கலாம் ஹி ஹி சாரிங்க நடுவரே சேர உடைச்சிட்டு பஞ்ச் டயலாக் பேசறீயான்னு கோவிச்சுக்காதிங்க ஊருக்கு போய்ட்டு வந்ததுல நாலஞ்சு கிலோ ஏறினது தெரியாம ஒரு ஆர்வக்கோளாருல குதிச்சிட்டேன் ஈ...;-D....

நடுவர் அவர்களே! நான் தெரியாமதான் கேக்கறேன் இந்த சுகர், கொலஸ்ட்ரால், ஹை ப்ளட் ப்ரசர்., ஒபிசிட்டி எல்லாம் இந்தக்காலம்னா என்ன ஐஞ்சு வருசத்தில வந்ததுங்களா?? சமைக்கறவங்க அவங்க பங்குக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிடு, இன்னும் கொஞ்சம் சாப்பிடுன்னு போடறதும், சாப்பிடறவங்க இவங்க பங்குக்கு இன்னும் போடு, இன்னும் போடுன்னு, கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடற அளவுக்கு ரொம்ப்ப்ப்ப்ப டேஸ்ட்டியா எண்ணெய் மொதங்க சமைச்சு போட்டு கெடுத்துவிட்ட நம்ம பாட்டி அம்மா சமையலுதாங்க....

இன்னும் அந்த டேஸ்ட் நாக்குல என்ன, ஜீன்லேயிருந்தே போகமாட்டேன்னு அடமிபிடிச்சு இருக்கிற நம்ம ஹஸ்பெண்டுகிட்டயெல்லாம் ஆரோக்கியம் ஆரோக்கியம்னு தினமும் நாலுதடவை லெக்சர் கொடுத்து அப்பப்பா ..நமக்கு சமைச்ச களைப்பை மட்டும் இல்லாம இந்த லெக்சர் கொடுக்கிற கொடுமையையும் சேர்த்துக்கொடுத்தது நம்ம பாட்டி மற்றும் அம்மாக்கள் காலம்தாங்க...

நடுவரே நான் தெரியாமதாங்க கேக்கறேன் ஏங்க நம்ம பாட்டி பொண்ணுபாக்கற படலத்தில ஆரோக்கியம்னு இளநீரும், இட்லியுமா கொடுத்தாங்க... என்னங்க நீங்க ..பஜ்ஜி, சொஜ்ஜியோட டீ காபிதானுங்க கொடுத்தாங்க..

நடுவரே.. களியப்பத்தி நம்ம எதிரணித்தோழி சொல்லியிருக்காங்கம் நாம் இப்ப செய்யறதே இல்லைன்னு... நாம இல்லைங்க நம்ம பாட்டி, அம்மாவே அத இப்ப செய்யறது இல்லைங்க .. இத ஏன் நான் சொல்றேன்னா ஊருக்கு போனப்போ என் கணவர் ஆசையா களி கிளறித்தாங்கன்னு அவங்க அம்மாகிட்ட கேட்டப்போ, எனக்கெல்லாம் தெரியாது பாட்டி வரட்டும் பாட்டி வரட்டும்னு சொல்லி ஒரு வாரம் ஓட்டினாங்க. பாட்டி வந்ததும் அதெல்லாமா இப்ப சாப்பிடறீங்க!! அத யாரு கிளறது., துடுப்பு போட்டு கிளறதுக்குள்ள கையெல்லாம் ஓஞ்சிடும்னு பாட்டி ஆயாசமா சொல்ல நான் பொருத்து பொருத்து பாத்து குக்கர்ல டூ மினிட்ஸ் மேகி மாதிரி களி கிளறி இறக்கி வைக்க என் ஹஸ் வாயெல்லாம் பல்லாக என் வொய்ஃப் இஸ் த பெஸ்ட்ன்னு சொல்ல வைச்சது இந்தக்கால சாமர்த்தியமான கில்லாடி சமையல்தாங்க;-)

மீந்து, பிஞ்சு போன ஜிலேபிய பால்ல போட்டு கொதிக்க வைச்சு பாயாசமா மாத்தற கலையும், கடைசியில ஒடைஞ்சுகிடக்கிற முறுக்க மிக்ஸியில சுத்தி வெல்லத்த காய்ச்சி ஊத்தி முறுக்கு இனிப்பு உருண்டை செய்யற சாமர்த்தியமும் பாட்டி அம்மான்னு வழிவழியா வந்தது இல்லைங்க., கஷ்டப்பட்டு சமைக்கறது வேஸ்ட் பண்ண மனசு இல்லாம சம்பாத்தியத்தோட அருமை தெரிஞ்சு தானா பொறந்த கலைங்க..ன்னு சொல்லி இதைதான் எதிரணி என்ன எல்லாருமே கில்லாடிங்கற இப்பத்திய மொழில செல்லமா சொல்றாங்கன்னு சொல்லி, அதனால கில்லாடிங்கறதே இந்தக்கால மொழிதான்., அப்ப கில்லாடியும் இந்தக்கால பெண்களே! பெண்களே! சொல்லி ...இருங்க இருங்க கடைசியா...

//சிவப்பு பொடி போட்டு, பொரிச்செடுக்கும் கோழி கொழுப்பை கொடுக்குது.//

கொழுப்பக்கொடுக்கறது சிவப்புக்கோழி மட்டும் இல்லைங்க பஜ்ஜி சொஜ்ஜியும்தாங்க ஆனா அதக்கூட நான்ஸ்டிக் பணியாரக்கல்லுல ஊத்தி சாப்பிடறது இந்தக்காலத்து சாமார்த்தியம்னு சொல்லி இறுதியா இந்தக்கால பெண்களே ”ஜகஜாலக்கில்லாடிகள்”னு சொல்லி இந்த வாதத்தை முடிக்கிறேன் நடுவரே...அப்புறமா டைம் கிடைக்கும்போது மீதி வாதங்கள் அள்ளித்தெளிக்கிறேன் நடுவரே..;-)

பொருமையா படிக்கும் தோழிகளுக்கும், ஆவேசமா படிக்கும் எதிரணித்தோழிகளுக்கும் .. என் வாதத்தை மட்டும் கொஞ்சம் சிரிச்சிட்டே படிங்கங்கங்கற சின்ன வேண்டுகோளும் வைச்சுடறேனுங்க ;-)சிரிப்பே வரலைன்னாலும் என் வேண்டுகோளைப்பாத்தாவது சிரிச்சிருங்க.. நன்றி ;-)

Don't Worry Be Happy.

நடுவரே அந்த கால பெண்கள் சுவையா சமைத்தார்கள்தான். ஆனால் அன்று அவர்களுக்கு கிடைத்த பொருட்களும் தரமானதாக உரம் மருந்து தெளிக்காத சுவையான பொருட்கள். அவற்றிற்கு இயற்கையாவே ருசி அதிகம். அதை வைத்து சுவையா சமைத்தார்கள் என்பதில் எந்த சிறப்பும் இல்லை. இன்னிக்கு கால கட்டத்தில் எல்லாமே உரம் போட்டு மருந்து தெளித்து அவசரம் அவசரமாக வளர்க்கப் பட்டு அவசரம் அவசரமாக அறுவடை செய்யப் பட்டு சாவகாசமாக லாரியில் பயணம் செய்து நம்மை வந்து அடைகிறது. இதில் ஃப்ரெஷ்னெஸ் இருக்குமா? ஆனால் அப்படிப்பட்ட பொருட்களை வைத்தும் சுவையாக சமைத்து அசத்தும் இக்காலப் பெண்கள் அக்காலப் பெண்களைக் காட்டிலும் கில்லாடிகள் இல்லையா?

எல்லாமே ரெடிமேட் பொடிவகைகள் வாங்கி சமைக்கிறோமாம். உண்மைதான். இது காலத்தின் கட்டாயம். ஆனால் அப்படி வாங்கும் பொடிகளைக் கொண்டும் சுவையில் அசத்துகிறோமா இல்லையா?

அன்னிக்கு ஒரே சாம்பார், ரசம் கூட்டு பொரியல்னு வெரைட்டி மிகக் குறைவு. பக்கத்து மாநில சமையல் கூட செய்ய மாட்டாங்க. ஆனால் இன்னிக்கு பெண்கள் பக்கத்து மாநிலம் என்ன உலக நாடுகளின் சமையல் அத்தனையும் செய்து சுவைத்து அசத்துகிறோமே!

அன்னிக்கு சமையல் ஆரோக்கியமானதாம். இன்னிக்குதாங்க பெண்கள் எண்ணெய் இல்லாத சமையல், கொழுப்பு குறைந்த சமையல், டயட் சமையல்னு அசத்துறோம். அன்னிக்கு எல்லாருக்கும் ஒரே வகை சமையல்தான். பத்திய சமையல் வேணும்னா ஆரோக்கியமா எண்ணெய் இல்லாமல் காரம் இல்லாமல் செய்வாங்க. ஆனா அன்னிக்கு மக்கள் பத்திய சாப்பாடா எனக்கு வேணவே வேணாம்னு தெறிச்சு ஓடுவாங்க. காய்ச்சல் காரன் மட்டும் விதியேன்னு பத்திய சாப்பாடு சாப்பிடுவான்.

ஆனால் இன்னிக்கு எண்ணெய் இல்லாத சமையலை மக்கள் விரும்பி சாப்பிடறாங்க. காரணம் எண்ணெய் இல்லாமலும் சுவையா சமைக்க முடியும்னு சுவையாக சமைப்பது இக்கால பெண்கள்தான் நடுவரே.

இன்னிக்கு பெண்கள் அசைவ சமையலை கூட எண்ணெய் இல்லாம பேக்ட், க்ரில்டு, பார்பிக்யூட் ன்னு சுவையா செய்யறாங்க. ஆனால் அன்னிக்கு நெருப்பில் சுட்டு சாப்பிடுவது கவுரவக் குறைச்சலா எண்ணி எண்ணெயில் முக்கிதான் சமைப்பாங்க.

எங்க ஊர்ப் பக்கம் தேங்காய் சேர்க்காத சமையலே இல்லைன்னு சொல்ற அளவுக்கு எல்லாவற்றிலும் தேங்காய் இருக்கும். போதாக் குறைக்கு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயும் தேங்காய் எண்ணெய்தான். ஒரு பொரியலில் எந்த அளவு காய் இருக்கிறதோ அதே அளவு தேங்காய் சேர்ப்பாங்க. இதெல்லாம் என் பாட்டி காலத்தில். என் அம்மா காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் பை பை சொன்னாங்க. இன்னிக்கு நான் சமைப்பது மிகக் குறைவான தேங்காய் மற்றும் மிகக் குறைவான எண்ணெய். சுவையில் குறை ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த தேங்காய் அதிகம் சேர்த்து செய்யப்படும் பொரியல சாப்பிட்டால் வயிறு ஹெவியான ஃபீலிங் இருக்கும். மந்தமாகவே இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. லைட்டாக அதே நேரம் ஹெல்தியாவும் இருக்கு.

அதெப்படி தேங்காய் எண்ணெயும் தேங்காயும் குறைவான சமையல் ருசியா இருக்கும்னு நினைப்பீங்க. சூட்சுமம் ரொம்பவே சின்னதுதான் நடுவரே. அந்த காலத்தில் தேங்காயை துருவி அதனுடன் மலாசா பொருட்கள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பொரியலில் சேர்ப்பாங்க. தாளிக்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயோடு நிற்காமல் இறுதியாகவும் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்குவாங்க. இப்போ மசாலா பொருட்களை மட்டும் தனியே அரைத்து தேங்காய் துருவலோடு பிசிறி பொரியலில் பயன்படுத்தறேன். இந்த முறையில் செய்வதால் மிக மிக குறைந்த அளவு தேங்காயே போதும். அடுத்து தேங்காய் எண்ணெயின் மணமே தனி இல்லையா. அரைத் தேக்கரண்டி வெஜிட்டெபிள் ஆயிலில் தாளித்து விட்டு இறுதியாக கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை பரவலாக ஊற்றி கிளறி விட்டால் மணமும் பெர்ஃபெக்ட். இப்போ சொல்லுங்க இந்த கால பெண்கள்தானே சமையலில் கில்லாடிகள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே எதிரணி தோழிகள் எல்லாரும் அந்த காலத்து சமையல் தான் சத்தானது இப்போ இருக்குறவங்க சமைக்கிறது எல்லாமே கேடுனு சொல்லிட்டே இருக்காங்க இத இவங்க புரிஞ்சி தான் பேசுறங்களா இல்ல வாதத்துக்குனு பேசுறாங்களோ தெரியல. இப்போ இருக்குற பெண்கள் தான் எந்த ஃபுட்ல என்ன சத்து இருக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்கு இத சாப்ட்டா எவ்வளவு கலோரி இதை எல்லாம் பாத்து பாத்து பக்குவமா சமைக்கிறாங்க. நம்ம பாட்டிக்கு கலோரினா என்னனு தெரியுமா ? அப்புறம் எப்படி அவங்க ஆரோக்கியமா சமைக்க முடியும் ? அதனால தான் அவங்க வைக்கிற கோழி குழம்புல குழம்ப விட எண்ணெய் அதிகமா இருக்கும்.

அப்புறம் பாத்தீங்கனா பாட்டி களி பண்ணாங்க, கம்மங்கூழ் குடிச்சாங்கனு எல்லாரும் சொல்றாங்க. இப்போ இருக்குறவங்களுக்கும் களி கிண்டவும் தெரியும், கம்மங்கூழ் காய்ச்சவும் தெரியும் ஆனா அதை குடிக்க தான் யாருக்கும் பிடிகிறது இல்ல. இப்போ இருக்குற குழந்தைகளுக்கு களி கிண்டி குடுத்தா சாபிடுவாங்களா? கூழ் காய்ச்சி குடுத்தா குடிப்பங்களா? குழந்தைகளுக்கு என்ன பிடிக்குமோ அத தான அம்மா செஞ்சி தருவாங்க.. அத தான இப்போ இருக்குற பெண்கள் பன்னுறாங்க.இவ்வளவு பேசுறங்களே நம்ம எதிரணி மக்கள் களிய பத்தியும், கூழ பத்தியும் அவங்கள களியும் கூழும் தினும் சாப்ட சொல்லுங்க பாப்போம் இரண்டு நாள் கூட அவங்களால சாப்ட முடியாது.

காலத்துக்கு தகுந்த மாதிரி சத்தாகவும் சுவையாகவும் விதவிதமாகவும் சமைக்க தெரிந்த இக்கால பெண்களே சமையலில் கில்லாடிகள்!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பட்டிமன்ற தோழிகள் என்னை மன்னிக்கவும். நான் எப்போதுமே ஒரு பொறுப்பை ஏற்பதற்கு முன் பலமுறை யோசிப்பேன். அதனால்தான் அறுசுவையை கடந்த ஐந்து வருடங்களாக பார்வையிட்டு வந்தாலும் உறுப்பினராகாமல் தவிர்த்தேன். காரணம், என் குடும்பம் பெரிய கூட்டுகுடும்பம். எப்போதும் உறவினர்கள் யாராவது வந்த வண்ணம் இருப்பர். நான் தனியாக பொழுதுபோக்கவெல்லாம் நேரமே இருக்காது. மிகுந்த ஆவலாய் நடுவர் பொறுப்பை ஏற்றேன். எப்படியும் நேரத்தை ஏற்படுத்தி பதிவிடமுடியும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து குழந்தைக்கு காய்ச்சல். அவன் அம்மா, அம்மா என்று என் அருகாமையை நாடுகிறான். அதுமட்டுமில்லாமல் வரும் வெள்ளிக்கிழமை எங்களது திருமணநாள்+ குழந்தையின் பிறந்தநாள். அதனால் வேலைகள் அளவில்லாமல் இருக்கிறது. தயவுசெய்து பட்டிமன்ற தோழிகள் என்னை மன்னிக்கவும். எல்லா பதிவிற்கும் பெரிய பதிவிட்டு உங்களை ஆர்வமாய் பட்டியில் பங்கேற்க வைக்க முடியவில்லை. இன்று இரவு உங்களுக்கு மறு பதிவிடுகிறேன், சின்ன, சின்னதாய். நீங்கள் உற்சாகம் இழக்காமல் பட்டியை தொய்வில்லாமல் நடத்தவும். இதற்காக மீண்டும் ஒருமுறை உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

நடுவர் அவர்களே....

//அந்த கால பெண்கள் ஜாலியா அடுப்பு வேலை மட்டும் பாக்கலை. மாட்டை குளிப்பாட்டறது , கையாள துவைச்சு , நோட் தி பாயின்ட் யுவர் ஆனர் கையாள துணி துவைப்பது, வீட்டை சுத்தமா வைக்கறது, வயல் இருந்தா விவசாய வேலைக்கு உதவி செய்வது, விறகு பொறுக்க போவது, வெட்டுவது.. அது இதுன்னு அப்பப்பா எத்தனை வேலைகளை மெஷின் இல்லாம செய்தாங்க தெரியுமா?//

பசி ருசி அறியாதுங்க ;-)

ஆனால் இந்தக்காலம் பாருங்க எல்லாத்துக்கும் மெசின், ஏரோட்டறவங்கள்ள இருந்து கணக்குப்பிள்ளை வரைக்கும் மிசினா இருக்கறதுனால சாப்பிடற எல்லாத்திலேயும் காலைல குடிக்கற கிணத்துதண்ணிக்கூட ஆக்குவாகார்ட்ல ஊத்தி ஃபில்டர் பண்ணி ருசியா கேக்கற காலமுங்க இது... அதனால இந்தக்காலம்தாங்க சமையல்ல கில்லாடிங்க.. சரிதானுங்க நடுவரே;-)

//இந்த கால பெண்கள், மாவு அரைச்சு, சட்னி அரச்சு எல்லாத்தையும், குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
அந்த கால பெண்கள் எல்லாத்தையும் புதுசா செய்யணும்.// மனித உழைப்பு எப்படியெல்லாம் வீணாகுது பாருங்க நடுவரே;( பெண்கள் ஏன் அந்தக்காலத்தில சமையல் அறையிலேயே முடங்கிகிடந்தாங்க்கன்னு இப்ப தெரியுதுங்களா ம்ஹும்;-(

நாமளாவது இட்லி மாவையும் சட்னியையும் ஒரு வாரம் வைச்சு சாப்பிடறோம் ஆனா அந்தக்காலத்தவங்க இந்த ஆவடு ஊறுகாய் எழுமிச்சை ஊறுகாய்னு எண்ணெய் சும்மா இஷ்டத்துக்கு ஊத்தி செஞ்சு பானையில ஒரு வருசம் ஊற வைச்சு சாப்பிடறதுனால சுவைமட்டுமா கூடவே ..L.D.L ங்கிற பேட் கொலஸ்ட்ராலையும் இலவசமா உடம்புல சேரரது தெரியாமயே சாப்பிட்டாங்க ஐயோ பாவம்ங்க அவங்க;-(

//பாட்டி, அம்மா காலத்தில் தினம் பால் காய்ச்சு, தயிராக்கி, மோராக்கி, கடைஞ்சு வெண்ணெய் எடுத்து பானையில் சேகரிச்சு வெச்சு, பதமா அருமையா நெய் காய்ச்சினாங்க... // அடடா! இவ்வளவு ஈசியான்னு எங்க அத்தையே மூக்குல கை வைக்கிற அளவுக்கு நாங்க பால்லேர்ந்து ஸ்ட்ரெய்ட்டா ஆடைய மட்டும் தனியா எடுத்து சேகரிச்சு கொஞ்சம் பாட்டில்ல தயிரோடு சேர்த்து குலுக்கி வெண்ணெய் எடுப்போமில்ல..

நடுவரே அந்தக்காலத்தில உழைச்சு ஓடாத்தேய்ஞ்சு பசியோட வர மனுசங்க மொத்து, மொத்தா கல்லு தோசை எண்ணெய் மொதக்க ஊத்திக்கொடுத்தும் ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு தேமேன்னு இருந்தாங்க..அவங்ககிட்ட சமைக்கறவங்க கில்லாடியா??..இல்ல.. இந்தக்காலத்தில டீவில ஐக்கியமாயிருக்கறவங்களுக்கே, இடையில மெல்லிசா எண்ணெய்யே இல்லாம ரோஸ்ட் போட்டுக்கொடுத்தாக்கூட, அந்த தோசைய எடுத்து அது வழியா டிவி பாத்து, இன்னும் மெல்லிசா வந்திருக்கனுமோன்னு வக்கனையா பேசறவங்ககிட்ட சமைக்கறவங்க கில்லாடியா நீங்களே சொல்லுங்க நடுவரே !

Don't Worry Be Happy.

பூர்ணிமா கவலை வேண்டாம்பா நீங்க பொருமையா உங்க கடமையெல்லாம் முடிச்சுட்டு வாங்க., மொதல்ல குழந்தைய கவனிங்கபா., கடைசியா தீர்ப்பு சொல்லும்போது வந்தாலும் பரவாயில்லை;-) நாங்க கோவிச்சிக்கமாட்டோம்;-) இதை நம்ம தோழிகளும் ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறேன்.

Don't Worry Be Happy.

நடுவரே!

நம்ம எதிரணித்தோழி என்ன சொல்றாங்க..//இப்ப இருக்கும் வசதிகளை கொண்டு இந்த கால பெண்கள் ரொம்ப நல்லாவே சமைக்கறாங்க. ஆனா கில்லாடிகள்னா எதுவுமே இல்லாம சமையலில் கலக்கிய அந்த கால பெண்கள் தான் ;)//விட்டா சிக்கி முக்கி கல்வைச்சு சமைச்சத எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்குவாங்க போலிருக்கே நடுவரே...!

நடுவர் அவர்களே மொதல்ல கில்லாடினா என்னன்னு நான் சொல்றேன் கேளுங்க நடுவரே.... எப்பவுமே கிடைக்கிற விறகு அடுப்புல சமைக்கிறது கில்லாடின்னு நீங்க நினைச்சா அது தப்புங்க ...25 நாள்தான் வரும்னு தெரிஞ்ச கேஸ் அடுப்புல 35 நாளுக்குமேல வரமாதிரி பாத்து பாத்து சமைக்கிறதுதாங்க கில்லாடி;).

எப்ப வரும், எப்ப போகும்னு தெரியாத கரண்ட்டுக்குட மல்லுகட்டி சுடுதண்ணி, பால் காய்ச்ச, குக்கர்ல சாதம்னு கரண்ட் செலவும் கைகடிக்காதமாதிரி சமைக்கிற சம்யோஜிதம்தாங்க கில்லாடிங்கறது.

கொத்துமல்லி சட்னி, புதினாசட்னிங்கற பேர்ல இருக்கிற ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்து எல்லாத்தையும் வதக்கி அழிச்சு , அதுக்கப்புறமா புளி வேற சேர்த்தி துவையல்னு அரைச்சு தரத இந்தக்காலத்து பசங்க சாப்பிட்டும் பிரயோஜனம் இல்லைங்க, இதையே இன்றைய இளம்தாய்மார்கள் கார்னீஸ்ங்கற பேர்ல இதே கொத்துமல்லிய அப்படியே அழகா தூவி , கூடவே மிண்ட் ஜூஸுனு ஒரு கிளாஸும் கொடுத்துபாருங்க ஒரே செகண்ட்ல தட்டு பூரா காலியாகும், இது கில்லாடித் தனம் இல்லையா என்ன?

அந்தக்காலத்து பசங்களையெல்லாம் கேட்டு பாருங்க தட்டுல இருக்கிற வெங்காயத்த எல்லாம் ஓரம் கட்டிட்டுதான் சாப்பிட்டிருப்பாங்க . ஆனா அதுவே இப்ப பச்சையா தயிர்ல போட்டு சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடாத வாண்டுகளை காட்டுங்க பாப்போம் ...சமையல்ல கில்லாடி யாருன்னு தெரியும் நடுவரே.

ஒரு குழந்தை பெத்ததும் குண்டான அம்மாக்கள் எல்லாம் அந்தக்காலம் நடுவரே..ஆனா இப்ப, தன்னோட குழந்தைக்கு பத்து வயசானாலும் இன்னும் தன்னை இருபது வயசுமாதிரியே கட்டுகோப்பா வைச்சிக்கறது இந்தக்காலம் அம்மாக்கள் நடுவரே.. அப்ப சமையல்ல யாருங்க கில்லாடி;-) சாட்சாத் இந்தக்காலம்தானுங்க.

//பழைய கால பெண்கள் , பக்கத்திலே நின்னு பக்குவம் மாறாம சமைப்பாங்க. அந்த கைகளுக்கு ஒரு வாசம் இருக்குனு சொல்வாங்களே ;)// ரொம்ப்ப கஷ்ட்டமடா சாமி..எங்கடா தீஞ்சிருமோ தீஞ்சிருமோன்னு பாத்து கிளறிட்டே இருக்கனும், பத்தாததுக்கு அப்பப்ப சுடுதண்ணி வேற ஊத்தி ஊத்தி சமைக்கனும் என்ன கொடுமைடா இது;( ஆமாங்க அந்தக்கையில ஒரு வாசம் இருக்கும் அது என்னன்னா கையில் சூடு பட்டதுக்கு களிம்பு எதாவது பூசியிருப்பாங்க அந்த வாசமாதான் இருக்கும்.

நடுவரே.. உங்களுக்கு இன்னும் சுலபமா புரியனும்னா அந்தக்காலத்தில கணவர் சாப்பிட தட்டுலதான் அவங்க மனைவிங்க சாப்பிடுவாங்களாம். அது எதுக்குன்னா தன் கணவர் எதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறாரோ, அதிலெல்லாம் ஏதோ குறை இருக்கும். பின்னர் சமைக்கும்போது அந்த குறைகள் எதுவும் இல்லாம சமைப்பாங்களாம். ஆனா இப்ப இந்த முறை இருக்கான்னு மதிப்பிற்குரிய எதிரணித்தோழிகளிடம் கேளுங்கள் நடுவர் அவர்களே! அப்படிபட்ட எந்தப்பழக்கமும் இப்ப இல்லை அதனால இதிலிருந்து என்னத் தெரியுது இப்பத்திய சமையல்தான் பெஸ்ட்ன்னு தெரியுது.. அதனால கில்லாடிங்கன்னு பாத்தா அது நாமளேதான் ;-)

நடுவர் அவர்களே அந்தக்காலத்து சமையல்கில்லாடிங்களால வந்த வினை என்னத்தெரியுமா பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக் கதைதான் நடுவரே! இப்ப நாம வகைவகையா சமைக்கத்தெரிஞ்சும் பேஸ்மெண்ட் வீக் மாதிரி உடல்ல கோளாறோட இருக்கறவங்களுக்கு என்ன செஞ்சு போட முடியும் நடுவரே. ஆனா பாருங்க இன்னும் பத்து இருபது வருசத்தில ஒபிசிட்டி, கொலஸ்ட்ரால்னு எதுவும் இல்லாத ஆரோக்கிய இளைஞர்கள்தான் பிற்காலத்தில வருவாங்க அதுக்கு இன்றைய தாய்மார்கள்தான் காரணம்னு சொல்லி சமையல்ல கில்லாடின்னா அது இன்றைய இளம்நங்கைகளேன்னு சொல்லிட்டு இப்போதைக்கு கல்தா வாங்கிக்கறேன் நடுவரே;-)

Don't Worry Be Happy.

நடுவர் அவர்களே,அந்த காலத்தில உறவினர்கள் வந்தா தொலைபேசி வசதியெல்லாம் கிடையாது. அவங்க வந்தவுடனே முகமலர்ச்சியோட வரவேற்று உபசரிச்சு சமையல் செய்து அசத்துவாங் ஆனா இப்ப எல்லாம் முன்கூட்டியே சொல்லிட்டு வரணும் இல்லெனா என்ன திடீர்னு அப்படீப்பாஙக.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

கூட்டணி உடைந்து போன சோகம்... கூடவே நீங்களும் பாவம் மகனுக்கு உடல் நலமில்லைன்னு சொல்றீங்க... முதல்ல மகனை பாருங்க நடுவரே. நாங்க பட்டியை கவனிக்கிறோம். :) கவலை வெண்டாம்.

//நடுவரே.. உங்களுக்கு இன்னும் சுலபமா புரியனும்னா அந்தக்காலத்தில கணவர் சாப்பிட தட்டுலதான் அவங்க மனைவிங்க சாப்பிடுவாங்களாம். அது எதுக்குன்னா தன் கணவர் எதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறாரோ, அதிலெல்லாம் ஏதோ குறை இருக்கும். பின்னர் சமைக்கும்போது அந்த குறைகள் எதுவும் இல்லாம சமைப்பாங்களாம். ஆனா இப்ப இந்த முறை இருக்கான்னு மதிப்பிற்குரிய எதிரணித்தோழிகளிடம் கேளுங்கள் நடுவர் அவர்களே! அப்படிபட்ட எந்தப்பழக்கமும் இப்ப இல்லை அதனால இதிலிருந்து என்னத் தெரியுது இப்பத்திய சமையல்தான் பெஸ்ட்ன்னு தெரியுது.. அதனால கில்லாடிங்கன்னு பாத்தா அது நாமளேதான் ;-)
//
- காமெடி பண்ண கூடாது நடுவரே... இந்த காலத்து பெண்கள் குறை சொன்னா அடுத்த வேளை உணவே போட மாட்டாங்க... குறைகளை தெரிஞ்சுக்க ஆர்வமும் காட்டுவதில்லை. மீறி சொன்னாலும் கோவம் வரும். அதான் இதுக்கு காரணமே தவிற குறையே இல்லாம சமைக்கிறாங்கன்னு அர்த்தமில்லையாக்கும். இதை தான் சொன்னோம்... இந்த காலத்தில் ஆர்வமா ஆசையா சமைப்பதில்லை... கடனேனு செய்யறாங்கன்னு.

//
நடுவர் அவர்களே அந்தக்காலத்து சமையல்கில்லாடிங்களால வந்த வினை என்னத்தெரியுமா பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக் கதைதான் நடுவரே! இப்ப நாம வகைவகையா சமைக்கத்தெரிஞ்சும் பேஸ்மெண்ட் வீக் மாதிரி உடல்ல கோளாறோட இருக்கறவங்களுக்கு என்ன செஞ்சு போட முடியும் நடுவரே. ஆனா பாருங்க இன்னும் பத்து இருபது வருசத்தில ஒபிசிட்டி, கொலஸ்ட்ரால்னு எதுவும் இல்லாத ஆரோக்கிய இளைஞர்கள்தான் பிற்காலத்தில வருவாங்க அதுக்கு இன்றைய தாய்மார்கள்தான் காரணம்னு சொல்லி சமையல்ல கில்லாடின்னா அது இன்றைய இளம்நங்கைகளேன்னு சொல்லிட்டு இப்போதைக்கு கல்தா வாங்கிக்கறேன் நடுவரே;-)

//
- இவங்க பட்டியல் போடும் ஒபிசிட்டி, கொலஸ்ட்ரால் எல்லாம் எப்ப வந்தது நடுவரே?? இப்ப தான்... அந்த காலத்து ஆட்களுக்கு இதெல்லாம் இல்லை. நடுவரே ஒரு மேட்டர் புரிஞ்சுக்கணும்... அந்த அந்த சீசனில் வரும் பழம் அந்த சீசனில் சாப்பிடணும், உடம்புக்கு நல்லதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. அதே தான் சமையலும்... நம்ம இருக்க நாடு, ஊருக்கு ஏற்றபடி தான் நம்ம உடலுக்கு எது சரியோ அதை நம்ம உணவில் சேர்த்தாங்க. எல்லாம் நாட்டு உணவும் ஏற்றக்குறைய அவங்க உடல் உழைப்பு, அவங்க வசிக்கும் நாட்டில் வெப்பனிலை இப்படி பல விஷயங்களை சார்ந்தே ஏற்ற மாதிரி இருக்கும். அதை மட்டுமே செய்து சாப்பிட்டதால் தான் அந்த காலத்தில் ஹெல்தியா இருந்தாங்க... இப்போ வெளி நாட்டு உணவுகள், வெளி மானில உணவுகள்னு ட்ரை பண்ணி தான் எல்லா வினையையும் வாங்கி வைக்கிறோம். காரணம் அவை நம் உடலுக்கு ஒத்து வருவதில்லை. வெள்ளக்காரன் காலங்காத்தால சீஸ முழுங்கிட்டு போனாலும் அவனுக்கு தொப்பை வராது... அம்புட்டு எக்ஸர்ஸை பண்ணுவாங்க ரெகுலரா. நம்ம ஆட்கள் அங்க போய் அதே சீஸை சாப்பிட்டு வீடு, ஆபீஸ்ன்னு உட்கார்ந்தே இருந்தா தொப்பை வருது.

//எப்ப வரும், எப்ப போகும்னு தெரியாத கரண்ட்டுக்குட மல்லுகட்டி சுடுதண்ணி, பால் காய்ச்ச, குக்கர்ல சாதம்னு கரண்ட் செலவும் கைகடிக்காதமாதிரி சமைக்கிற சம்யோஜிதம்தாங்க கில்லாடிங்கறது// - அந்த காலத்தில் விளக்கு தானேங்க இருந்தது... அடுப்புல சமைச்சாலும் படிச்சாலும் விளக்கு தானே... கரண்ட் எங்க இருந்தது, முக்கியமா கிராமத்தில்? எனக்கு தெரிஞ்சு எங்க அம்மா பள்ளி படிப்பை முடிக்கும் போது தான் எங்க ஊரில் கரண்ட் வந்தது. நான் என் பள்ளி படிப்பை முடிச்ச பிறகு தான் போன் வந்தது. எந்த அடிப்படை வசதியும் இல்லாம எல்லாம் செய்தாங்க அப்போ. ஒன்னும் வேண்டாம் நடுவரே... இப்பலாம் சாதத்தை குக்கரில் தான் வைக்கறாங்க... அப்போ மாதிரி பெரிய கூட்டு குடும்பத்துக்கு சாதத்தை பானையில் வெச்சு நீரை பானையை கவிழ்த்து வடிக்க எத்தனை பேருக்கு தெரியும்?? அதெல்லாம் சாமர்த்தியம் தாங்க... ஒன்னுமில்லைங்க... அன்னைக்கு வாய் கணக்கா சொன்னாலே எவ்வளவு பெரிய கணக்கையும் போட்டுடுவாங்க, இப்போ 2 + 2 என்னன்னு கேட்டாலே கேல்குலேட்டர் தேடுவாங்க... யாரை கெட்டிக்காறங்கன்னு சொல்வீங்க??? வாய் கணக்கா சொன்னவங்களை தானே?? அதே தான் சமையலிலும்... எல்லாம் வசதியும் இருந்து சமைக்குறது பெரிய விஷயம் இல்லை, எதுவுமே இல்லாம நம்மை விட நல்லா சமைச்சு பக்குவமா சமைச்சு ஊருக்கே விருந்து வைச்ச நம்ம அக்கால பெண்களே சமையலில் கில்லாடிங்க.

//பாட்டி வந்ததும் அதெல்லாமா இப்ப சாப்பிடறீங்க!! அத யாரு கிளறது., துடுப்பு போட்டு கிளறதுக்குள்ள கையெல்லாம் ஓஞ்சிடும்னு பாட்டி ஆயாசமா சொல்ல நான் பொருத்து பொருத்து பாத்து குக்கர்ல டூ மினிட்ஸ் மேகி மாதிரி களி கிளறி இறக்கி வைக்க என் ஹஸ் வாயெல்லாம் பல்லாக என் வொய்ஃப் இஸ் த பெஸ்ட்ன்னு சொல்ல வைச்சது இந்தக்கால சாமர்த்தியமான கில்லாடி சமையல்தாங்க;// - ஆமாம் பின்ன... நாம இப்பவும் குக்கருல தானே வைப்போம்... நமக்கு கிண்ட தெரியாதில்லை அடுப்பில் வெச்சு... வயசானவங்க இப்போ கிளற முடியலன்னு சொல்றது நியாயம்... நம்ம ஏன் குக்கரில் வெச்சோம்?? நமக்கும் கிளற தெரியாது!! :) நமக்கு எல்லாமே 2 நிமிஷத்தில் ஆகணும்... ரெடிமேடா.

இப்போ சொல்லுங்க... அக்கால மக்கள் சமையல் தானே சிறந்தது??? :) ஒத்துக்கங்க... ஒத்துக்கிட்டு தான் ஆகனுமாக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே களி என்பதே பாட்டி சொல்லித்தான் நம்கேதெரியும். சிக்கிமுக்கி கல்லையே நம்ம மூதாதையர்தான் கண்டுபிடிச்சாங்க. OLD IS GOLD,OLD IS GOLD OLD IS GOLD.
=நடுவரே.. களியப்பத்தி நம்ம எதிரணித்தோழி சொல்லியிருக்காங்கம் நாம் இப்ப செய்யறதே இல்லைன்னு... நாம இல்லைங்க நம்ம பாட்டி, அம்மாவே அத இப்ப செய்யறது இல்லைங்க .. இத ஏன் நான் சொல்றேன்னா ஊருக்கு போனப்போ என் கணவர் ஆசையா களி கிளறித்தாங்கன்னு அவங்க அம்மாகிட்ட கேட்டப்போ, எனக்கெல்லாம் தெரியாது பாட்டி வரட்டும் பாட்டி வரட்டும்னு சொல்லி ஒரு வாரம் ஓட்டினாங்க. பாட்டி வந்ததும் அதெல்லாமா இப்ப சாப்பிடறீங்க!! அத யாரு கிளறது., துடுப்பு போட்டு கிளறதுக்குள்ள கையெல்லாம் ஓஞ்சிடும்னு பாட்டி ஆயாசமா சொல்ல நான் பொருத்து பொருத்து பாத்து குக்கர்ல டூ மினிட்ஸ் மேகி மாதிரி களி கிளறி இறக்கி வைக்க என் ஹஸ் வாயெல்லாம் பல்லாக என் வொய்ஃப் இஸ் த பெஸ்ட்ன்னு சொல்ல வைச்சது இந்தக்கால சாமர்த்தியமான கில்லாடி சமையல்தாங்க;-)=
"OLD IS GOLD"இவங்க செய்த களி உருண்டையோட செய்முறைவிளக்கத்தை போடச்சொல்லுங்கள் பார்ப்போம்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்