பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

//தேங்காய் எண்ணை உண்மையில் உடலுக்கு நல்லது ஒரே ஒரு ஸ்பூன் சேர்த்தால் கூட போதும்..ஆனால் எண்ணையே இல்லாமல் கூட என் பாட்டி அடுப்பில் கணலில் சுட்டு எடுத்திருக்காங்க.சுவையாக இருக்கும்.// - இன்னைக்கு பதிவான எதிர் அணி தோழியின் பதிவு தான் ;) இப்போ தெரியுதா நடுவரே... யாரை பார்த்து நாம் வியக்கிறோம், யார் ஆரோக்கியமா சமைச்சது, யார் கில்லாடிங்கன்னு???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே நீங்க குழந்தையை கவனிங்க முதலில் பொறுமையா வாங்க நாங்க காத்திருப்போம்.

//இப்போ இருக்குற பெண்கள் தான் எந்த ஃபுட்ல என்ன சத்து இருக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்கு இத சாப்ட்டா எவ்வளவு கலோரி இதை எல்லாம் பாத்து பாத்து பக்குவமா சமைக்கிறாங்க. நம்ம பாட்டிக்கு கலோரினா என்னனு தெரியுமா ? அப்புறம் எப்படி அவங்க ஆரோக்கியமா சமைக்க முடியும் ?//

பாட்டிக்கு கலோரின்னா என்னன்னு தெரியாதுதான் ஆனா அவங்களாம் நல்லா ஆரோக்கியமாத்தான் இருந்தாங்க ஏன்னா அவங்க சமைத்த உணவுமுறையில் ஆரோக்கியம் இருந்துது ஆனால் நாம் கலோரி பத்தி தெரிஞ்சி என்னத்த பன்னுறோம் நமக்கு தெரியும்னு பெருமையா சொல்லிக்கலாம் அவ்வளவுதான்

//அந்தக்காலத்தவங்க இந்த ஆவடு ஊறுகாய் எழுமிச்சை ஊறுகாய்னு எண்ணெய் சும்மா இஷ்டத்துக்கு ஊத்தி செஞ்சு பானையில ஒரு வருசம் ஊற வைச்சு சாப்பிடறதுனால சுவைமட்டுமா கூடவே ..L.D.L ங்கிற பேட் கொலஸ்ட்ராலையும் இலவசமா உடம்புல சேரரது தெரியாமயே சாப்பிட்டாங்க ஐயோ பாவம்ங்க அவங்க;-(//

அந்த காலத்துல பிபி யாவது கொலஸ்டராலாவது எல்லோரும் திடமாவும் திடக்காத்திரமாகவும் தான் இருந்தாங்க 100ல் 10 பேருக்கு பிபி இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான் நடுவரே அம்புட்டு ஸ்ட்ராங்கா இருந்தாங்க
முழுக்க முழுக்க தேங்காய் எண்ணெய்ல முக்கி எழாத குறைதான் ஆனாலும் நல்லாத்தான் இருந்திருக்காங்க

இந்த காலத்துல ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்தா ஒத்துக்க மாட்டேங்குது பிபி கொலஸ்ட்ரால் எல்லாம் கூட பிறந்த உறவாய் வந்து ஒட்டிக்குது அதுக்கு காரணம் நாம சாப்பிடும் சமைக்கும் உணவுமுறை அப்படி இருக்கு.இந்த காலத்துல 100க்கு 50 பேருக்காவது கொலஸ்டரால் இருக்கு.
அந்த காலத்துல மருத்தவமனைகள் எங்கோ ஒன்னுதான் இருக்குமாம் இப்போ தெருவுக்கு தெரு முக்குக்கு முக்கு இருக்கே ஏன் அந்த அளவுக்கு வியாதிகள் பெருகி போனதுதான் காரணம்.

நாமளாம் வேலைக்கு போரேன் பேர்வழின்னு அவசரம் அவசரமாவும் அரைகுறையாகவும் சமைத்து சாப்பிட்டும் சமைக்க நேரமில்லாமல் ஃபாஸ்ட் புட் ரெடி மிக்ஸ் வகைகளை சாப்பிட்டும் வியாதிகளை வரவச்சிக்கிறோம்,
இந்த காலத்துல தான் புட் பாய்சன் அது இதுன்னு எல்லாம் வருது அந்த காலத்து ஆளுங்ககிட்ட புட் பாய்சன்னு சொல்லி பாருங்க அப்படின்னா என்னன்னு கேப்பாங்க நடுவரே.

சரிங்க நடுவரே நீங்க குழந்தையை நல்லா கவனிச்சிட்டு,திருமண நாள்,பிறந்த நாளையும் அமர்க்களமா கொண்டாடிட்டு பொருமையா வந்து அக்காலமேன்னு தீர்ப்பு சொல்ல மட்டும் வந்திடுங்க சரிங்களா ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நடுவருக்கும் தோழிகளுக்கும் மீண்டும் வணக்கங்கள். நடுவரே நீங்க குழந்தையை நல்லா கவனிச்சுட்டு பிறந்தநாள் திருமணநாளை அமர்க்களமா கொண்டாடிட்டு வாங்க. அதுவரைக்கும் நாங்க டமால் டுமீல் னு குஸ்தி போட்டுக்கறோம் :)

நடுவரே எதிரணித் தோழி கேட்டாங்க அந்த காலம் மாதிரி துடுப்பு போட்டா களி செய்தீங்க. குக்கரில்தானே செய்தீங்கன்னு. அட என்ன நடுவரே நாங்க துடுப்பு போட்டோ போடாமலோ குக்கரில் செய்தாலும் ருசியா சமைக்கறோம்ல அதுதானே கில்லாடித் தனம் அப்படீங்கறது. அந்த காலத்துல செய்தது மாதிரியேதான் செய்யணும்னா சிக்கிமுக்கி கல்லு வச்சித்தான் அடுப்பு மூட்டணும். நம்ப அம்மா பாட்டி காலத்துலேயே ஸ்டவ்வும் கேசும் வந்துடுச்சு. ஒருவேளை அவங்க கில்லாடி இல்லைன்னு எதிரணி சொல்றாங்களோ!

எங்க பாட்டி காலத்துல மருத்துவர் பாட்டியை இரவு ஓட்ஸ் சாப்பிடுங்க அதுதான் உடலுக்கு நல்லதுன்னு சொன்னார். எங்க பாட்டியும் ஓட்ஸ் சாப்பிடுவாங்க. நல்லா பாலில் கொதிக்க வச்சு சர்க்கரையும் சேர்த்து பாயாசம் போல சாப்பிடுவாங்க. இதுவா ஆரோக்கியம்? இதுவா கில்லாடியாக சமைப்பது?

இப்போ நானும் ஓட்ஸ் சாப்பிடறேன் நடுவரே. காய்கறிகள் சேர்த்து தண்ணீரில் வேக வைத்து சூப் செய்து சாப்பிடுகிறேன். வெண்ணெய் நீக்கிய மோரில் இஞ்சியும் கறிவேப்பிலையும் உப்பும் காரத்துக்கு ஒரு பச்சைமிளகாயும் சேர்த்து அரைத்து கலந்து அதை தண்ணீரில் வேகவைத்த ஓட்சுடன் கலந்தும் சாப்பிடுகிறேன். சப்புன்னு இருக்கற ஓட்சை பாலில் கலந்து தந்தால் உவ்வே என்று ஓடிவிடுபவர்கள் கூட இதை ருசித்து சாப்பிடுவார்கள். இதுதான் நடுவரே கில்லாடித்தனம்.

இதே ஓட்ஸை குழந்தைகளுக்கு கொடுக்கணுமா? லேசாக வறுத்து பொடி செய்து வெல்லம்,டேட்ஸ், நட்ஸ் சிறிது நெய் கலந்து லட்டு செய்து கொடுப்பாங்க இந்த காலத்து அம்மாக்கள்.

அந்த காலத்து ஆட்கள் அவ்வளவு எண்ணெய் உபயோகித்து சமைத்தாலும் ஆரோக்கியமாத்தானே இருந்தாங்க அப்படீன்னு கேட்கறாங்க எதிரணியினர். உண்மையில் அந்த காலத்தைய மனிதர்களின் சராசரி ஆயுளை விட இந்த காலத்து ஆட்களின் சராசரி ஆயுள்காலம் அதிகம். காரணம் இக்கால பெண்களின் ஆரோக்கியமான சுவையான சமையல் முறைகள் நடுவரே.

தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது உடலுக்கு நல்லதுன்ன்னு எங்க அணியினர் சொன்னாங்களாம். ஆமாங்க நல்லதுதான் ஒரே ஒரு ஸ்பூன் உபயோகித்தால். அந்த காலம் மாதிரி ஒரு கப் உபயோகித்தால் டிக்கெட் சீக்கிரம் கிடைச்சுடும்.

கறிவேப்பிலை கூட கிடைக்காத நாடுகளில் வாழும் இக்காலப் பெண்கள் சுவையாக சமைக்கிறார்கள் என்பது கூட இக்காலப் பெண்களின் ஸ்மார்ட்னெஸ் க்கு எடுத்துக்காட்டு நடுவரே. நம்ப பாட்டி எல்லாம் கறிவேப்பிலை இல்லைன்னா சமைக்கவே மாட்டாங்க.

அக்காலப் பெண்கள் சமையலுக்கு தேவையான அத்தனைப் பொருட்களும் இருந்தால்தான் அந்த சமையலை செய்வார்கள். ஆனால் இக்கல பெண்கள் ஒன்னு ரெண்டு கூட குறைச்சல் இருந்தாலும் சமாளிச்சு ருசியா சமைச்சு அசத்திடுவாங்க. அதனால் சமையலில் கில்லாடிகள் இக்கால பெண்களே இக்கால பெண்களே இக்கால பெண்களேன்னு சமையல் மீது ஆணையிட்டு சொல்கிறோம் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே, உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னீங்களே, இப்ப குழந்தை எப்படி இருக்காள்? குழந்தையையும், குடும்பத்தையும் கவனிச்சுட்டே நீங்க பொறுமையாக நேரம் கிடைக்கும் போது பதிவிட்டால் போதும். அதுவரை இங்கே அனைத்து தோழிகளும் பொறுமையாக காத்திருப்பார்கள் (நானும் தான்). அப்படியே உங்க குழந்தைக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடறேன்:)

நானும் போனா போகட்டும்.. போனா போகட்டும் இந்தியா போய்ட்டு வந்த சந்தோஷத்துல பேசுறாங்களேன்னு விட்டு பார்த்தேன். ஒண்ணும் சரிபடுற மாதிரியே தெரியல. அதான் இறங்கிட்டேன்.. ;) பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு இல்லீங்களா நடுவரே..

//நடுவர் அவர்களே! நான் தெரியாமதான் கேக்கறேன் இந்த சுகர், கொலஸ்ட்ரால், ஹை ப்ளட் ப்ரசர்., ஒபிசிட்டி எல்லாம் இந்தக்காலம்னா என்ன ஐஞ்சு வருசத்தில வந்ததுங்களா?? சமைக்கறவங்க அவங்க பங்குக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிடு, இன்னும் கொஞ்சம் சாப்பிடுன்னு போடறதும், சாப்பிடறவங்க இவங்க பங்குக்கு இன்னும் போடு, இன்னும் போடுன்னு, கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடற அளவுக்கு ரொம்ப்ப்ப்ப்ப டேஸ்ட்டியா எண்ணெய் மொதங்க சமைச்சு போட்டு கெடுத்துவிட்ட நம்ம பாட்டி அம்மா சமையலுதாங்க....//

அந்த காலத்து சமையலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்தால் பல ஸ்பூன்கள் பாசத்தையும், அன்பையும் கலந்து சமைப்பார்கள். அதனால் அந்த கொழுப்பு உடலில் சேராது. எந்த பாதிப்பும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் கொழுப்பை கரைக்க வைத்தியமும் வைத்திருந்தார்கள். அவங்க சாப்பாட்டை கேட்டு வாங்கி சாப்பிடுற மாதிரி இருந்தது. அதனால் தான் எண்ணெய் மொதக்க இருந்தாலும் கேட்டு கேட்டு வாங்கி சாப்டாங்க. ஆனா, இப்ப பாருங்க ஆரோக்கிய சமையல்னு (பேருக்கு) சொல்லிட்டு சமைச்சு சாப்பிட ஆள் இல்லைனா அந்த சமையலுக்கு தான் என்ன பெருமை? சமைச்சவங்களுக்கு தான் என்ன பெருமை இருக்க போகுது? நீங்களே சொல்லுங்க நடுவரே. இப்பவும் எதாவது நமக்கு உடல்நலக்குறை ஏற்பட்டா பாட்டிகளை தான் தேடி ஓடுவோமே தவிர நேத்து பொறந்த குழந்தையை தேடியா ஓடுறோம். இந்த கால ஜெனரேஷனில் வந்தவர்கள் எத்தனை பேருக்கு சிம்பிளா வீட்டு கைவைத்தியம் கூட தெரிந்திருக்கும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அனாசின், மட்டாசின், நோவால்ஜின்னு-னு ஜின்னுங்க தான்.. அதனால் தேர் எங்கே சுத்தினாலும் அந்த காலத்து பாட்டிங்க, மனுஷாள் கிட்ட தான் போய் நிக்கனும். இதை மறக்க வேணாம்னு சொல்லி வைங்க நடுவரே எதிரணி தோழிக்கு :D

//இன்னும் அந்த டேஸ்ட் நாக்குல என்ன, ஜீன்லேயிருந்தே போகமாட்டேன்னு அடமிபிடிச்சு இருக்கிற நம்ம ஹஸ்பெண்டுகிட்டயெல்லாம் ஆரோக்கியம் ஆரோக்கியம்னு தினமும் நாலுதடவை லெக்சர் கொடுத்து அப்பப்பா ..நமக்கு சமைச்ச களைப்பை மட்டும் இல்லாம இந்த லெக்சர் கொடுக்கிற கொடுமையையும் சேர்த்துக்கொடுத்தது நம்ம பாட்டி மற்றும் அம்மாக்கள் காலம்தாங்க... //

நடுவர் அவர்களே, நாம சம்பாதிக்கறது எதுக்கு? நல்லா சாப்பிடவும், உடை உடுத்தவும், மீதி காசை சேர்க்கவும் தானே. சொல்லப்போனா இன்னைக்கு இருக்கவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு தெரியாத சூழ்நிலைல வாழ்ந்துட்டு இருக்கோம். அப்படி இருக்கும் போது என்ன கட்டுப்பாடு வேண்டி இருக்கு. நொறுங்க தின்னவனுக்கு 100 ஆயுசு. அப்ப.. பயந்து பயந்து தின்றவன் நிலையை யோசிச்சு பாருங்க..கட்டுப்பாடு இல்லாம சாப்பிடக்கூடியது ஒரு குறிப்பிட்ட வயசில் தான். அந்த வயசுக்கு மேல எல்லாத்தையும் சாப்பிட முடியுமா? அதனால் வயசிருக்கும் போதே நல்ல சாப்பாட்டையும், ஆசைப்பட்ட சாப்பாட்டையும் சாப்ட்டு எஞ்சாய் பண்ணிக்க வேண்டியது தான். எதிரணி உடனே நொறுங்க தின்னவன் பழமொழிக்கு ஒரு காரணத்தை சொல்லிட்டு வந்துருவாங்க. அவங்களை நம்பாதீங்கோ ;))

//நடுவரே நான் தெரியாமதாங்க கேக்கறேன் ஏங்க நம்ம பாட்டி பொண்ணுபாக்கற படலத்தில ஆரோக்கியம்னு இளநீரும், இட்லியுமா கொடுத்தாங்க... என்னங்க நீங்க ..பஜ்ஜி, சொஜ்ஜியோட டீ காபிதானுங்க கொடுத்தாங்க//

நடுவர் அவர்களே, இனிப்பும் - காரமும் போல வாழ்க்கையில் நல்லது கெட்டதுகளை கடந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை மனதில் கொண்டு தான் பஜ்ஜியையும், சொஜ்ஜியையும் வைத்திருப்பார்கள்.

//
பாட்டி வந்ததும் அதெல்லாமா இப்ப சாப்பிடறீங்க!! அத யாரு கிளறது., துடுப்பு போட்டு கிளறதுக்குள்ள கையெல்லாம் ஓஞ்சிடும்னு பாட்டி ஆயாசமா சொல்ல நான் பொருத்து பொருத்து பாத்து குக்கர்ல டூ மினிட்ஸ் மேகி மாதிரி களி கிளறி இறக்கி வைக்க என் ஹஸ் வாயெல்லாம் பல்லாக என் வொய்ஃப் இஸ் த பெஸ்ட்ன்னு சொல்ல வைச்சது இந்தக்கால சாமர்த்தியமான கில்லாடி சமையல்தாங்க;-)//

எங்க பாட்டிங்க எல்லாம் கரெக்டா தாங்க இருந்தாங்க. அவங்களுக்கு இல்லாததையும் (மிக்சி, கிரைண்டர், அவன்,ப்ரிட்ஜ், கேஸ் ஸ்டவ்) பொல்லாதததயும் காட்டி மனசை கெடுத்து இப்படி சொல்ல வச்சதே இந்த கால (கி)இல்லாடி பெண்கள் தாங்க. நீங்க என்ன தான் உங்க சாப்பாட்டுல வெரைட்டீஸ் கொண்டு வந்தாலும், டெக்கரெஷன் பண்ணி வச்சாலும் ஆண்களின் மனம் செல்வதென்னவோ அந்த கால உணவிற்கு தானே. இப்பவாச்சும் புரிஞ்சு.. தெளியுங்க. அந்தகால பெண்கள் தயாரிச்ச உணவு தான் கில்லிகள்னு..

//மீந்து, பிஞ்சு போன ஜிலேபிய பால்ல போட்டு கொதிக்க வைச்சு பாயாசமா மாத்தற கலையும், கடைசியில ஒடைஞ்சுகிடக்கிற முறுக்க மிக்ஸியில சுத்தி வெல்லத்த காய்ச்சி ஊத்தி முறுக்கு இனிப்பு உருண்டை செய்யற சாமர்த்தியமும் பாட்டி அம்மான்னு வழிவழியா வந்தது இல்லைங்க., கஷ்டப்பட்டு சமைக்கறது வேஸ்ட் பண்ண மனசு இல்லாம சம்பாத்தியத்தோட அருமை தெரிஞ்சு தானா பொறந்த கலைங்க.//

நடுவர் அவர்களே, பாவம் அவங்க பாட்டி செய்த மாதிரி ஜிலேபியையும், முறுக்கையும் கற்பனைல வச்சுட்டு செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. பாட்டி எவ்ளோ அழகா அந்த உருவத்துக்கு பங்கம் வராம செய்திருப்பாங்க. நம்மாள அப்படி ஆகி இருக்காது. அதுக்கு இப்படி ஒரு மாற்று வழியை பண்ணிட்டு என்னா பேச்சு பேசுறாங்க பாருங்க.. வேஸ்ட் பண்ண மனசில்ல... சம்பாத்தியம் அருமைனு.. இதெல்லாம் நீங்க வந்த பிறகாச்சும் கேளுங்க நடுவரே.. ஆமா ;)

//கொழுப்பக்கொடுக்கறது சிவப்புக்கோழி மட்டும் இல்லைங்க பஜ்ஜி சொஜ்ஜியும்தாங்க ஆனா அதக்கூட நான்ஸ்டிக் பணியாரக்கல்லுல ஊத்தி சாப்பிடறது இந்தக்காலத்து சாமார்த்தியம்//

பஜ்ஜி, சொஜ்ஜிக்கு பேர் பலகாரம்ங்க. அது தினப்படி உணவு இல்லை. என்னைக்கோ ஒரு நாள் சாப்பிடுறதால பெருசா கொழுப்பு ஒண்ணும் சேர்ந்துடப்போறதில்ல. பஜ்ஜி, சொஜ்ஜி கொழுப்பு பொண்ணு பார்க்க வந்தவங்களள ஓடி ஆடி கவனிக்கறதுலயே கரைஞ்சு போய்டும். ஆனா, ஆரோக்கியமா சமைக்கறேன்னு வர்றவங்க மனம் வெந்து நொந்து போற மாதிரி ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாம சமைக்கறீங்க பாருங்க.. இது தான் உலகமகா அநியாய சமையல்.. இக்கால பெண்கள் சமையல்..

நடுவரே..இந்த கோழியை தொடந்து விரட்டிட்டே வருவேன்.. :)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//மனித உழைப்பு எப்படியெல்லாம் வீணாகுது பாருங்க நடுவரே;( பெண்கள் ஏன் அந்தக்காலத்தில சமையல் அறையிலேயே முடங்கிகிடந்தாங்க்கன்னு இப்ப தெரியுதுங்களா ம்ஹும்;-(//

நடுவர் அவர்களே, அந்த காலப் பெண்மணிகள் லூசுங்க இல்லைங்க. அவங்க இபப்டியெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்ததால் தான் உடல் ஆரோக்கியமாக இருந்தது. வீட்ல இருந்து பிரசவம் பார்த்தே 10 பிள்ளைகளை பெத்து தள்ளி வளர்த்து ஆளாக்கி, இன்னும் நம்ம குழந்தைங்களையும் வளர்த்துட்டு ஆரோக்கியமா இருக்காங்க. ஆனா இந்த காலத்து பெண்களை பாருங்க.. உடம்பை ஷேக் பண்ணாம வச்சுட்டு, உடம்பில் ஆயிரத்தெட்டு நோய்களை சம்பாதிச்சு லாக்கர்ல வைக்கிறமாதிரி பத்திரமா சேர்த்துட்டே வந்து ஒரு நாள் மொத்தமா டாக்டர்கிட்ட செக் போட்டு தந்துட்டு வர்றாங்க.. இது தான் இன்றைய கால பெண்களின் நிலை.. அந்த காலப் பெண்கள் வீட்டில் வேலைக்காரர்கள் என்று தப்பி தவறி வைத்திருந்தாலும், தாங்கள் காலாட்டி கதை பேசி கொண்டிருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் வேறு வேலையை இழுத்து போட்டு செய்வார்கள். ஆனால் இந்த காலத்தில் இருக்க வேலையை செய்யவே முழி பிதுங்கி நிற்கிறார்கள். என்னத்தை சொல்லி...என்னத்த பண்ண.. என்னமோ போங்க நடுவரே ;)

//காலைல குடிக்கற கிணத்துதண்ணிக்கூட ஆக்குவாகார்ட்ல ஊத்தி ஃபில்டர் பண்ணி ருசியா கேக்கற காலமுங்க இது... அதனால இந்தக்காலம்தாங்க சமையல்ல கில்லாடிங்க.. சரிதானுங்க நடுவரே;-)//

என்னத்தான் இந்த காலத்தில் பில்டர் பண்ணி தண்ணி குடிச்சாலும், நம்ம கிணத்தில் ஊறின தண்ணியை மாசு மருவில்லாம எடுத்து குடித்த தண்ணீரின் சந்தோஷமும், மனதிருப்தியும் கிடைக்குமா? இயற்கையை, தொலைச்சுட்டு செயற்கையில் அதை தேடிக் கொண்டிருக்கிறோம் அது தான் உண்மை.

//நாமளாவது இட்லி மாவையும் சட்னியையும் ஒரு வாரம் வைச்சு சாப்பிடறோம் ஆனா அந்தக்காலத்தவங்க இந்த ஆவடு ஊறுகாய் எழுமிச்சை ஊறுகாய்னு எண்ணெய் சும்மா இஷ்டத்துக்கு ஊத்தி செஞ்சு பானையில ஒரு வருசம் ஊற வைச்சு சாப்பிடறதுனால சுவைமட்டுமா கூடவே ..L.D.L ங்கிற பேட் கொலஸ்ட்ராலையும் இலவசமா உடம்புல சேரரது தெரியாமயே சாப்பிட்டாங்க ஐயோ பாவம்ங்க அவங்க;-( //

ஊறுகாயை தாளிச்சு வச்சு அத்தனை நாள் எண்ணெயில் ஊற வைக்க மாட்டாங்க. ஊறுகாய் கெடாமல் இருக்க உப்பில் ஊற வச்சு, வேண்டும்போது எடுத்து தாளிச்சுப்பாங்க. அதுவும் அந்த உப்பு போக சிறிது தண்ணீரில் ஊறவச்சு அதற்குரிய பக்குவத்தை பண்ணிட்டு தான் தாளிப்பாங்க. இதுல எந்த கொழுப்பு சேர போகுது சொல்லுங்க..

//அடடா! இவ்வளவு ஈசியான்னு எங்க அத்தையே மூக்குல கை வைக்கிற அளவுக்கு நாங்க பால்லேர்ந்து ஸ்ட்ரெய்ட்டா ஆடைய மட்டும் தனியா எடுத்து சேகரிச்சு கொஞ்சம் பாட்டில்ல தயிரோடு சேர்த்து குலுக்கி வெண்ணெய் எடுப்போமில்ல.. //

இந்த அறிவு அத்தனையும் அந்த கால பாட்டி, அம்மாக்களிடம் இருந்து வந்த ஜீன்லருந்து வந்தது தானே. இப்ப ஒத்துக்கறீங்கல.. அந்த கால பெண்கள் தான் டாப்னு ;)

//அந்தக்காலத்தில உழைச்சு ஓடாத்தேய்ஞ்சு பசியோட வர மனுசங்க மொத்து, மொத்தா கல்லு தோசை எண்ணெய் மொதக்க ஊத்திக்கொடுத்தும் ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு தேமேன்னு இருந்தாங்க..அவங்ககிட்ட சமைக்கறவங்க கில்லாடியா??..இல்ல.. இந்தக்காலத்தில டீவில ஐக்கியமாயிருக்கறவங்களுக்கே, இடையில மெல்லிசா எண்ணெய்யே இல்லாம ரோஸ்ட் போட்டுக்கொடுத்தாக்கூட, அந்த தோசைய எடுத்து அது வழியா டிவி பாத்து, இன்னும் மெல்லிசா வந்திருக்கனுமோன்னு வக்கனையா பேசறவங்ககிட்ட சமைக்கறவங்க கில்லாடியா நீங்களே சொல்லுங்க நடுவரே !//

நடுவர் அவர்களே, நல்லா கவனிங்க.. நல்ல உழைச்சு ஓடா தேய்ஞ்சு வர்றவங்களுக்கு மொத்து மொத்துன்னு குண்டு குண்டா சுட்டு போட்டா பசியாறுமா? இல்லைனா டிவி பார்த்துட்டே அதுவும் எண்ணெய் இல்லாம, மெல்லிசா சுட்டு போட்டா பசி ஆறுமா? டிவி பெட்டியையும், தோசை கல்லையும் தூக்கி போட்டு அடிக்க மாட்டாங்க? பாருங்க நடுவரே.. நீங்களே பாருங்க.. அவங்க பேசுறதை.. நீங்க தான் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லனும்...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//விட்டா சிக்கி முக்கி கல்வைச்சு சமைச்சத எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்குவாங்க போலிருக்கே நடுவரே...!//

கண்டிப்பா லிஸ்ட்ல சேர்ப்போம். சேர்க்கனும். ஏன்னா இந்த காலபெண்கள் பலர் சமையல்கட்டு பக்கமே போயிருக்க மாட்டாங்க.சாப்ட்டு கைகழுவ போறதை தவிர. அப்படி இருக்கும் போது அவங்களுக்கு அடுப்பை ஆன் பண்றதே ஒரு கஷ்டமான கலையா தான் இருக்கும். இதில் சிக்கி முக்கி கல்லை பத்தியும், அதில் சமைச்சதை பத்தியும் எப்படி தெரிய போகுது. அடுப்பை பத்த வைக்க அடித்தளமிட்டதே இந்த சிக்கிமுக்கி கல்லு தாங்கறதையும் யாரும் மறக்க முடியாதே.

//நடுவர் அவர்களே மொதல்ல கில்லாடினா என்னன்னு நான் சொல்றேன் கேளுங்க நடுவரே.... எப்பவுமே கிடைக்கிற விறகு அடுப்புல சமைக்கிறது கில்லாடின்னு நீங்க நினைச்சா அது தப்புங்க ...25 நாள்தான் வரும்னு தெரிஞ்ச கேஸ் அடுப்புல 35 நாளுக்குமேல வரமாதிரி பாத்து பாத்து சமைக்கிறதுதாங்க கில்லாடி;).//

சம்பாத்தியத்தோட அருமை தெரியும்னு சொல்லிட்டு இவங்க கேஸ்க்கே பாதி சம்பள பணத்தை போட்டு பணத்தை விரயமாக்கி இருக்காங்க. எங்களோட அந்த கால பெண்கள் சல்லிகாசு செலவில்லாம வீட்டுக்கு பின்னாடி இருந்த சுள்ளிகளை வச்சே ருசியா சமைச்சு குடும்பம் மொத்தத்துக்கும் போட்டிருக்காங்க.. அப்ப பாருங்க யார் கில்லோ கில்லாடிங்கன்னு;))

//எப்ப வரும், எப்ப போகும்னு தெரியாத கரண்ட்டுக்குட மல்லுகட்டி சுடுதண்ணி, பால் காய்ச்ச, குக்கர்ல சாதம்னு கரண்ட் செலவும் கைகடிக்காதமாதிரி சமைக்கிற சம்யோஜிதம்தாங்க கில்லாடிங்கறது.//

நவீன வசதிகளில் மூழ்கி போய்ட்டு, அது கிடைக்காத ஒரு சில நாட்களில் அனுபவிக்கும் ஒரு சில கஷ்டங்களை மட்டும் மனதில் வைத்து இவர்கள் செய்யும் சமையலை சமயோசிதம் என்றால்.. கரண்ட் வசதியோ, எலக்ட்ரிக் குக்கர் வசதியோ இன்னபிற மின்சார உபகரண வசதியோ இல்லாத அக்காலத்தில் கையையும், காலையும் கடிக்காம சமைச்சாங்க பாருங்க அவங்க தான் உலகமகா அதி அதி கில்லாடிங்க. இத்தனை வசதிகள் இருந்தும் திடீர்னு விருந்தாளிங்க யாராவது வீட்டுக்கு போய்ட்டாலே முகம் போற போக்கே பார்க்க முடியல. ஆனா, உடலை வருத்தி சமைத்தாலும் எந்த நேரத்தில் விருந்தாளிகள் வந்தாலும் முகத்தில் அந்த மலர்ச்சியும், புன்னகையும் மாறாமல், உடல் அயர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமைத்து விருந்தோம்பிய அந்த கால பெண்களே எந்த காலத்துக்கும் கில்லாடிங்க..

//இதையே இன்றைய இளம்தாய்மார்கள் கார்னீஸ்ங்கற பேர்ல இதே கொத்துமல்லிய அப்படியே அழகா தூவி , கூடவே மிண்ட் ஜூஸுனு ஒரு கிளாஸும் கொடுத்துபாருங்க ஒரே செகண்ட்ல தட்டு பூரா காலியாகும், இது கில்லாடித் தனம் இல்லையா என்ன?//

இந்த மாதிரி கார்னிஷிங் பண்ணி டெய்லி டெய்லி தந்து பாருங்க. பசங்க சாப்பிடுறாங்களான்னு பார்க்கலாம். அவர்கள் விரும்பும் வண்ணம் வதக்கி ருசி சேர்க்கும் விதம் புளியையும் சேர்த்து துவையலா தந்து பாருங்க. காலியாகாத சாப்பாடும் நொடியில் பஞ்சா பறந்துடும்.

//ஒரு குழந்தை பெத்ததும் குண்டான அம்மாக்கள் எல்லாம் அந்தக்காலம் நடுவரே..ஆனா இப்ப, தன்னோட குழந்தைக்கு பத்து வயசானாலும் இன்னும் தன்னை இருபது வயசுமாதிரியே கட்டுகோப்பா வைச்சிக்கறது இந்தக்காலம் அம்மாக்கள் நடுவரே.. அப்ப சமையல்ல யாருங்க கில்லாடி;-) சாட்சாத் இந்தக்காலம்தானுங்க//

நடுவர் அவர்களே, எதிரணி தோழி தட்டை திருப்பி போட்டிருக்காங்க. நீங்க கரெக்டா பழையபடி திருப்பி வச்சு பாருங்க. உண்மை புலப்படும் :) இந்த காலத்தில் கன்சீவ் ஆனா, என்னவோ வரக்கூடாத நோய் வந்த மாதிரி உக்கார்ந்த இடத்தை விட்டு அசையாம ஒரு வேலையும் செய்யாம, சிசேரியன்ல பிள்ளை பெத்துட்டு, அதுக்கும் சேர்த்து ரெஸ்ட் எடுத்து 23 வயசிலயே 43 வயசு தோற்றத்தோட குண்டடிச்சு போய் இருக்காங்க. அந்தக் காலத்தில் எல்லாமே நார்மல் டெலிவரி என்பதால், நீண்ட நாள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயமோ, அவசியமோ இல்லை. பின்பு எப்படி குண்டடித்திருப்பார்கள். நீங்களே சொல்லுங்க நடுவர் அவர்களே.. மூச்சுக்கு மூச்சு சேமிப்பு சிக்கனம்னு சொல்லிட்டு, ஏறி போன உடம்பை இறக்க ஆயிரக்கணக்குல செலவு பண்ணி பழைய தோற்றத்தை கொண்டு வருவாங்க.. ஆனா உண்மையில் சேமிப்பிலும், சிக்கனத்திலும் முன்னோடியாக இருந்ததும் அக்கால பெண்கள் தான். அவர்கள் வீட்டில் செய்யும் அன்றாட வேலைகளிலேயே அவர்களுக்குரிய பாடி பிட்னெஸ் சிங்கிள் பைசா செலவில்லாமல் கிடைத்திருந்தது. அப்ப பாருங்க உண்மையாவே எல்லாவிதத்திலும் யார் கில்லாடிங்கன்னு..

//அந்தக்காலத்தில கணவர் சாப்பிட தட்டுலதான் அவங்க மனைவிங்க சாப்பிடுவாங்களாம். அது எதுக்குன்னா தன் கணவர் எதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறாரோ, அதிலெல்லாம் ஏதோ குறை இருக்கும். பின்னர் சமைக்கும்போது அந்த குறைகள் எதுவும் இல்லாம சமைப்பாங்களாம். ஆனா இப்ப இந்த முறை இருக்கான்னு மதிப்பிற்குரிய எதிரணித்தோழிகளிடம் கேளுங்கள் நடுவர் அவர்களே! அப்படிபட்ட எந்தப்பழக்கமும் இப்ப இல்லை அதனால இதிலிருந்து என்னத் தெரியுது இப்பத்திய சமையல்தான் பெஸ்ட்ன்னு தெரியுது.. அதனால கில்லாடிங்கன்னு பாத்தா அது நாமளேதான் ;-) //

இங்கேயும் பாருங்க நடுவர் அவர்களே, தங்கள் கணவரையும், குடும்பத்தாரையும் ஆரோக்கியமும், அன்பும், அக்கறையும் குறையாமல் பார்த்துக் கொண்டது அக்கால பெண்களேன்னு எதிரணி தோழியே சொல்லாம சொல்லிட்டாங்க ;) ஏதோ சமைசோமா, என்னத்தையோ போட்டோமான்னு இல்லாம, கணவர் சாப்ட்ட எச்சில் தட்டில் தானும் சாப்ட்டு கணவருக்கு எது பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு அக்கறையோட கவனிச்சிருக்காங்க. ஆனா, இந்த கால பெண்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்கா? இல்லையென்றால் கணவர் விட்டுட்டு போனதை சாப்பிடத்தான் செய்வாங்களா? கணவர் அந்த தட்டில் போட்ட சாப்பாட்டை அப்படியே வச்சுட்டு எந்திரிச்சாலும், தூக்கி குப்பையில் கொட்டுவாங்களே தவிர ஏன் எதுக்கு ஆராய்ச்சி பண்ணி, அந்த குறையை களைய பார்ப்பாங்களா? முதல்ல இந்த கால பெண்கள் சமையல் மொத்தமாவே மீதி வைக்கிற மாதிரி தான் இருக்கும் ;)) இதில் எங்கேருந்து கணவர் ரசிச்சு சாப்ட்டு மீதி வச்சுட்டு போறது. சொல்லப்போனா ஒரு சிலர் சமைக்கும் போது வாயில் ருசி பார்த்து கூட பண்ண மாட்டாங்க. அவங்க சமையலுக்கு முதல் பலிகடா இந்த கணவன்மார்கள் தான். அப்புறம் எப்படி அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை ருசி பார்க்க தைரியம் வரும் :D

//அதுவே இப்ப பச்சையா தயிர்ல போட்டு சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடாத வாண்டுகளை காட்டுங்க பாப்போம் ...சமையல்ல கில்லாடி யாருன்னு தெரியும் நடுவரே.//

அந்த சைட்டு... இந்த சைட்டுன்னு பார்த்து சமைக்க இறங்கி இந்தம்மாங்க பண்ற ரவுசுக்கு அளவே இல்லாம போச்சு. அவங்க சமைக்கறேன் பேர்வழினு நம்மளை கொல்றதை விட இப்படி பச்சையா சாப்ட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு மனம் வெறுத்து போய் சாப்பிடுறாங்களோ என்னவோ? ;)

//நடுவர் அவர்களே அந்தக்காலத்து சமையல்கில்லாடிங்களால வந்த வினை என்னத்தெரியுமா பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக் கதைதான் நடுவரே! இப்ப நாம வகைவகையா சமைக்கத்தெரிஞ்சும் பேஸ்மெண்ட் வீக் மாதிரி உடல்ல கோளாறோட இருக்கறவங்களுக்கு என்ன செஞ்சு போட முடியும் நடுவரே. ஆனா பாருங்க இன்னும் பத்து இருபது வருசத்தில ஒபிசிட்டி, கொலஸ்ட்ரால்னு எதுவும் இல்லாத ஆரோக்கிய இளைஞர்கள்தான் பிற்காலத்தில வருவாங்க அதுக்கு இன்றைய தாய்மார்கள்தான் காரணம்னு//

என்ன அக்குரமமா சொல்லிட்டு போயிருக்காங்க பாருங்க நடுவர் அவர்களே. அந்த கால பெண்கள் சாப்பிட்ட தானியங்களை இவங்க கண்லயாச்சும் பார்த்திருப்பாங்களா? இவங்க சாப்பிடுறதெல்லாம் வெறும் சக்கையை தான். அப்புறம் எப்படி இவங்க பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க போட முடியும்? இளைய தலைமுறையினருக்கும் அதை தர முடியும். அதனால இவங்க சொல்றதையெல்ல்லாம் நம்பி குழம்பிக்காம மனசு தெளிவாகி ஒரு நல்ல தீர்ப்பை எழுதுங்க நடுவர் அவர்களே..

மீண்டும் வருவேன் !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் தோழியரே ! எனக்கு சமையல் கலை மிகவும் பிடிக்கும். என்னை கேட்டால் அந்தகாலப் பெண்களே சமையலில் சிறந்தவர்கள். ஏனென்றால் நான் சமைக்கும் போது ஒவ்வொரு சமையலையும் அம்மா எப்படி செய்தாங்க?, பாட்டி எப்படி செய்தாங்க? என்பதை நினைவு கூறி சமைப்பேன். நான் என்னதான் புது வகையான டிஷ் செய்து கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் என் அம்மா செய்யும் மோர் குழம்பு போல் வராது என்றும் பாட்டி செய்த பாயாசம் போல் இருக்காது என்று கூறுவதுதான் அதிகம். இதில் இருந்தே தெரியவில்லையா அந்தகாலப் பெண்களே சமையலில் சிறந்தவர்கள் என்று.

நன்றி !

thanks

நடுவரே... பிள்ளை உடல் நலம் இப்போது எப்படி இருக்குறது? மன்னிக்கவும், பார்ட்டி பிசியில் வர முடியாமல் இருந்தேன். இழையை மேலே தூக்கிவிடவே இன்று பதிவு.

அந்த காலத்தில் கொத்தமல்லியை அரைச்சு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிட்டாங்க... யாரும் வேணாம்னு ஓடல. எனக்கு நினைவு தெரிஞ்சு நானே வேப்பிலை கசக்கி கொடுத்தா கூட முழுங்கி இருக்கேன். நம்ம இருந்த காலத்தில் பிள்ளைகளை சாப்பிட வைப்பது சிரமமாவே இல்லை. இப்படி கெஞ்சி கெஞ்சி பின்னாடி ஓடவும் தேவை இல்லை. காரணம் உணவு ஆரோக்கியமானதா இருந்தது, சாப்பிட்டா நல்லா ஜீரனமாச்சு, அடுத்த வேளை உணவு தானா உள்ள போச்சு.

இப்போ பிள்ளைகள் பீசா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் என பழகிட்டு தான் இப்போ வீட்டு உணவு சாப்பிட மறுக்கறாங்க... அதனால் தான் இன்னைக்கு நாம எல்லாம் சாப்பிட வைக்க ஆயிரம் வழியை கண்டு பிடிக்க வேண்டி இருக்கு. ஆனா நடுவரே... இன்னைக்கு நாம எல்லாம் பேக் டு ஓட் ஸ்டைல் தானே... எப்படி ஓட்ஸ், கேப்பை, கம்புன்னு உணவில் சேர்க்கலாம், எப்படி கீரை சேர்க்கலாம்னு நம்ம அம்மா, பாட்டி மாதிரி தானே நாம உணவை ஆரோக்கியமானதா மாற்ற முயற்சிக்கிறோம்?? பழைய உணவு முறைக்கு தானே மாற முயற்சிக்கிறோம். ஆக அது தானேங்க பெஸ்ட்.

அன்னைக்கு அவங்க எண்ணெயில் பொரிக்காம அடுப்பு கங்கில் போட்டு சுட்டு செய்தாங்க, அதை தான் நாம இன்னைக்கு பார்பிகியூன்னு பயன்படுத்தறோம். எல்லாமே அங்க இருந்தது தாங்க... நடுவில் கொஞ்சம் திசை மாறினோம்... இப்போ மீண்டும் அவங்க வழியில் போக துவங்கி இருக்கோம். ஏன்னா நமக்கும் தெரியும் அது தான் பெஸ்ட் என்று. அதை அப்படியே ஃபாலோ பண்ண நமக்கு சாமர்த்தியம் போதாது, கடினமானதுன்னும் தெரியும்... அதான் இப்போ இருக்க டெக்னாலஜியை பயன்படுத்தி சுலபமா செய்ய முயற்சிக்கிறோம்.

நாம அதே முறையில் கஷ்டமில்லாம சமைச்சிருந்தா நாம கில்லாடி... ஆனா நாம டெக்னாலஜி முன்னேரி நமக்கு கொடுத்ததை தான் பயன்படுத்தறோம்... இதில் நம்ம சாமர்த்தியம் ஒன்னுமில்லை... அதனால் யாருடைய சமையலை நாம செய்ய முயற்சிக்கிறோமோ அவங்களே கில்லாடிகள். அந்த கால பெண்களே கில்லாடிகள்னு மீண்டும் சொல்றேன் நடுவரே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் நடுவர் அவர்களே.......... நான் "அந்த கால பெண்களே" என்ற தலைப்பில் எனது க்ருத்துக்களை சொல்கிறேன்... இன்னும் பதிவுகளை பார்க்கவிலை... எனவே கருத்துகள் சொல்லப்பட்டவையாக இருந்தால் விட்டுவிடுங்கள்....
நாம் இக்காலத்தில் என்ன சுவையாக செய்தாலும், வெரைட்டியாக செய்தாலும் அதில் ஆரோக்கியத்தின் பங்கு குறைவாகவே அமைத்து விடுகிறது... நாம் செய்கிற மேகி குழந்தைக்ளுக்கு வேண்டுமானால் மிகவும் பிடிக்கலாம்... ஆனால் ஆர்ரொகியம்? மிக பெரிய கேள்விக்குறி தான்... நேரமின்மையை காரணமாக கொண்டு நாம் செய்யும் அரைகுறை சமையல் நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை கெடுத்து மருத்துவருக்கு என்று தனியாக பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் நிலைமைக்கு கொண்டு விடுகிறது... ஆனால் ஒன்று யோசித்து பாருங்கள்... நமது பாட்டிகளும் சரி அம்மாக்களும் சரி சமையலிலேயே பல நோய்களை குணபடுத்திவிடுவார்கள்... மிளகு ரசம், கோழி குழம்பு எல்லாம் சளிக்கு, வயிற்று போக்கா இட்லி, தயிர் சாதம்... காய்ச்சலா அரிசி கஞ்சி,,.... இன்னும் பல பல......... ஒன்னும் வேண்டாம் அம்மா வறுக்கும் பொரியின் ருசி லேஸ் போன்ற சிப்ஸ் வகைகளுக்கு உண்டா சொல்லுங்கள்... நாம் என்னதான் கான்டினென்ட்டல், ஓரியன்டல், இத்தாலியன், மெக்ஸிகன் என்று சமைத்தாலும் செய்யும் நமக்கே அதை தினமும் சாப்பிட முடியாது... எப்படா சாம்பார் சாதம் சாப்பிடுவோம் என்று இருக்கும்... பிறகு அதை சமைப்பதில் என்ன கில்லாடித்தனம் இருக்கிறது?
இப்பொ மட்டுமா பெண்கள் வேலைக்கு போகிறார்கள் அப்போ போகவில்லையா என்ன்? வயல்வெளிக்கு போகிற பெண்கள் செய்யும் சாதாரண சமையலில் இருக்கும் ஆரோகியம், ருசி, சத்துக்கள் நம் சமையலில் கால் பங்கு கூட வராது.....
குக்கரில் அரிசி சாதம் வைக்கும் நம்மால் கம்பு சாதம் வைக்க முடியாதா என்ன? நாம் செய்வதில்லை காரணம் பிடிக்காது என்பதில்லை பிடிக்கும்படி நமக்கும் செய்யும் பக்குவம் இல்லை......... நாம் இன்று புத்தகங்களில் படித்தும், அறுசுவையில் பார்த்தும் செய்யலாம் ஆனால் அவை இல்லாத காலத்திலேயே இவை சேர்த்தால் இந்த ருசி வருமென்று கணித்து இதை சேர்த்தால் இந்த வகையில் ஆரோக்கியம் தருமென்று அறிந்து பாசத்தை கலந்து செய்யும் பாட்டிகளே கில்லாடிகள் என்பதில் சந்தேகமே வேண்டாம் நடுவர் அவர்களே......

நடுவர் அவர்களே வணக்கம்.,

இந்த தனிக்குடித்தனம் தனிக்குடித்தனம்னு ஒரு முறை எதனால வந்ததுன்னு நீங்க நினிக்கிறீங்க?? தனியா சம்பாரிச்சு அமோகமா வாழலாம்ங்கறதனால இருக்கும்னு நினைச்சிங்கன்னா அது தப்புங்க..நல்லா நாக்குக்கு ருசியா சமைச்சு சாப்பிடலாம்னு நினைச்சதுனால வந்ததுதாங்க. ஆரோக்கியமாவும் வேணும் அலாதியாவும் இருக்கனும்னு நினைச்சதுனால வந்ததுதாங்க..

நடுவர் அவர்களே! இன்றய கால யுவதிகளுக்க்கு சமைக்க தெரியறது இல்லைன்னு., கணவர் சாப்பிடாம வைச்சது குப்பைக்கு போறதாவும்., ஏன் இப்படி சமைச்சேன்னு கணவர்கள் எதிர்த்து பேச முடியாததனாலயும்னு மதிப்பிற்கூரிய எதிரணித் தோழிகள் ஏகத்துக்கு காரணங்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவர் அவர்களே! அவர்களுக்கு எல்லாம் நான் ஒரே ஒரு விசயத்தை நியாபகபடுத்த விரும்புகிறேன்.. இன்றய காலகட்டத்தில் தும்முனா கூட குத்தம்னு நீதிமன்றத்தை நாடி விவகாரத்து பெரும் சூழ்நிலையில், மனிதனின் மிக முக்கிய தேவையான சமையலுக்கு முக்கியத்துவம் இன்று இல்லவே இல்லை என்று சொன்னால் என்னவாகும் நிலை? நடுவர் அவர்களே! இதிலிருந்தே தெரியவில்லையா? இன்று சமையல்ங்கற கலை மிகவும் அமோகமா இருக்கு என்பதே இன்றய யுவதிகளின் கில்லாத்தனத்தால்தான் நடுவர் அவர்களே.

திருமணமான பெண்கள் தன் கணவரைக் மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள முதலில் தன்னை சுத்தமாகவும் பிறகு வீட்டை சுத்தமாகவும் இறுதியாக ஆனால் மிக முக்கியமாக நல்லா சமைக்கத்தெரிஞ்சாலுமே போதும்.

கூட்டுக்குடும்பத்தில் புது மனைவியின் கைவண்ணத்தை கணவர்மார்கள் தெரிஞ்சு வைச்சிருப்பாங்களா? கண்டிப்பா இல்லைங்க நடுவரே. ஏன்னா அங்க அத்தைங்கற அந்தக்காலத்து பெண்மணியோட இன்ஸ்ட்ரக்‌ஷன் படிதான் கடுகு தாளிக்கறதுல இருந்து பருப்பு கடையற வரைக்கும் இருக்கும். அதுல இந்தப் புது பெண்மணியின் கைவண்ணம் எங்கே தெரியவரும் நடுவர் அவர்களே?? அன்றய கூட்டுக்குடும்பக் காலகட்டத்தில இளையதலைமுறையினரின் தலைமைப்பண்பும், சாதுர்யமும், திறமைகளும் வெளிவராமலே முடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அதாவது அத்தைக்கு உடம்பு முடியாத போதோ அல்லது வெளியூர் விசேசத்துக்கு சென்றபோதோ புதுப்பெண்ணின் திறமையை கண்டுணர்ந்திருக்கலாம் கணவர்மார்கள்., அந்த ருசி வாழ்நாள் முழுமைக்கும் வேண்டுமென்பதினாலெயே தனிக்குடித்தனம் என்ற ஒன்று உருவாயிருக்கலாம் நடுவர் அவர்களே. இல்லைனா தன் தாயுடைய சமையல் ருசி பெரிதுன்னு நினைச்சிருந்தா தனிக்குடித்தனம் போயிருப்பாங்களா நடுவர் அவர்களே யோசிங்க...வேற காரணங்களை எதிரணி சொல்ல நினைத்தாலும் நடுவர் அவர்களே மோகம் முப்பது நாள்தான் , ஆசை அறுபது நாள்தான் ஆனால் சமையல் ருசி அப்படியில்லை.

OLD IS GOLD , OLD IS GOLD ம் ஆமாங்க அப்போ PRESENT IS PLATINUMங்கறதையும் ஒத்துக்கோங்க;-)

குக்கர் களி வேணும்னா நேரடியா கேளுங்க ஆதாரம் இல்லாம பட்டியில பேசவருவோமா? இதை நீங்களும் நானும் மட்டும் படிக்கலையே.. ஏராளமானவர்கள் படிக்கறதுனால வாய்க்கு வந்ததை சொல்லமாட்டோம் இல்லையா;-) ஈசி களி ந்னு குறிப்பு அறுசுவையில இருக்கும் என்னுடைய குறிப்புதான் தேடுக தட்டி பயன்பெறுங்கள் தோழியே;-)

நடுவர் அவர்களே!

ஈசியா குக்கர்ல செய்யமுடியும்ங்கும்போது ஏங்க கிளறியேதான் சாப்பிடனும்னு வீம்பு புடிக்கறீங்க..மண்பாத்திர உணவுதான் சுவையத்தருதுன்னா குக்கர்ங்கற புது முறை ஃபெயிலர் ஆயிருக்குமுங்க அது இன்னிக்கு மண்பானையே செய்யத்தேவையில்லாத மாதிரி ஆக்கியிருக்காதுங்க நடுவரே.

அன்றய கால மக்களுக்கு நோய்னா என்னன்னெ தெரியாதாம், கொலஸ்ட்ரால் சுகர் எல்லாம் இன்றய கால மக்கள் கொண்டுவந்ததானாம். நடுவர் அவர்களே சித்த மருத்துவம் இன்றைக்கும் கொண்டாடபடுதுனா அதுல எயிட்ஸ் முதல் கொண்டு மருந்து குறிப்புகள் இருக்கறதுனாலதாங்க. அன்னிக்கு இருந்த மக்களுக்கு நோய்க்கான பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம் அதுக்காக நோய் என்பதே இல்லைன்னு எல்லாம் சொல்லக்கூடாது நடுவரே.

”ரொம்ப நல்லாதான் இருந்தாரு திடீர்னு நெஞ்சப்பிடிச்சு மயங்கி விழுந்து இறந்துட்டாரு” ந்னு சொல்லுவாங்க. பாவம் , அவங்களுக்கு அது மாரடைப்புன்னு கூட தெரியாது நடுவரே. சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் ஏதோ பணக்காரவியாதின்னு வேற சொல்லுவாங்க. அதயெல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க வசதியில்லாமலும், அதிக பணம் கொடுக்க வேண்டியிருந்ததாலும் முக்கியமா உடம்புக்கு எதாவதுன்னா மருத்துவரைப் பாத்து என்ன நோய்ன்னு தெரிஞ்சுக்கனும்ங்கற அறிவு (knowledge) இல்லாததுமேதான் காரணமோ தவிர நோயே இல்லைன்னு சொல்றது நம்பப்படும் விசயமா இல்லை நடுவரே.

திடீர் விருந்தினர்கள் வந்தால் அந்தக்காலத்தில் பயங்கரமா விருந்து கொடுத்து விசாரிப்பாங்களாம். நடுவர் அவர்களே அந்தக்காலத்தில பெரிய பானையில அளவே இல்லாம சமைச்சு வைச்சிருப்பாங்க. எதிரணித்தோழிகள் சொன்னமாதிரியே அன்றைக்கு கடிதமோ, தொலைப்பேசியோ இல்லாதக் காரணம்கூட முக்கியமா இருக்கலாம் அதனால நித்தமும் விருந்தினர்களின் வருகைன்னு பாத்துட்டு இருந்தவங்க அப்படி சமைச்சு வைச்சிருக்கலாம். ஆனால் இப்பவெல்லாம் அப்படி இல்லைங்க நடுவரே, வரதா இருந்தா முன்கூட்டியே தெரிவிக்க வசதி இருக்கறதுனால அவங்க வரும்போது மட்டும் அவர்களுக்கும் சேர்த்து சமைச்சுக்கலாம். அப்படியே நம்ம எதிரணித்தோழிகள் மாதிரி திடீர் விருந்தினர்கள் வந்தாலும் முதல்லேயே சொல்லிட்டு வந்தா தடபுடலா விருந்து சமைச்சிருப்போமேன்னு அங்கலாய்ப்பில் சொல்றதுதான் “சொல்லிட்டு வந்திருக்கலாமே” ங்கறது நடுவரே.

நடுவர் அவர்களே உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? அந்தக்காலத்தில சமைச்ச உணவு மீதியானா தான் வளர்க்கும் நாய்க்கும், பசு மாட்டுக்கும் போடுவாங்க. திடீர் விருந்தாளியா நம்ம எதிரணித்தோழிகள் போனா அவங்களுக்கும் போடுவாங்க ( மக்களே ஜாலியா எடுத்துக்கோங்கபா_()_ ). ஆனா இப்போ அதிகமா சமைச்சத பிச்சைக்காரங்களுக்கே போட முடியாது நடுவரே. ராப்பிச்சைன்னு ஒன்னு இப்போ இல்லைங்கறதே இதுக்கு சான்று;-) அதுக்கூட அந்தக்காலத்திலதான் அதிகமா இருந்தது.

//சிசேரியன்ல பிள்ளை பெத்துட்டு, அதுக்கும் சேர்த்து ரெஸ்ட் எடுத்து 23 வயசிலயே 43 வயசு தோற்றத்தோட குண்டடிச்சு போய் இருக்காங்க.//
பயங்கர காமடியா இருக்கே நடுவரே! சிசேரியன்னா வேலையே செய்யமுடியாதுன்னு பயமுறுத்தி குண்டாக்கி வைச்சது அந்தக்காலம்தான் நடுவரே. ஆனால் இந்தக்காலத்துப்பெண்கள் அப்படி இல்லைன்னு தெரிஞ்சு நல்லா ஷேப்பாதான் இருக்காங்க இந்த உண்மை நம்ம எதிரணித்தோழிகளுக்கும் நல்லா தெரியும்;-)

//அந்த கால பெண்கள் சாப்பிட்ட தானியங்களை இவங்க கண்லயாச்சும் பார்த்திருப்பாங்களா? இவங்க சாப்பிடுறதெல்லாம் வெறும் சக்கையை தான். அப்புறம் எப்படி இவங்க பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க போட முடியும்?//

கண்ல என்ன மூட்டை மூட்டையா பார்சலும் வாங்கி வைச்சிருக்கோம் நடுவரே;) ஆனால் பாவம் அந்தக்காலத்து பெண்களின் வீட்டில்தான் இதோட பேரெல்லாம் நினைவில்கூட வைச்சிக்காம இருக்காங்க. ஊருக்கு போய் பாருங்க உங்களுக்கே விசயம் தெரியும்;-) மல்டிபிள்கிரைண்ட் சப்பாத்தி மாவை இன்னும் எதிரணித்தோழி தெரிஞ்சு வைச்சுக்கலையோ என்னவோ?;-).

அந்தக்காலத்திலதான் அரைச்ச மாவையும் ஜல்லடையில ஜலிச்சு சமைப்பாங்க. உடம்புக்கு தேவையான உமியெல்லாம் மாட்டுக்கு போட்டு சர்க்கரைய சேர்த்து வைக்க வசதியா சக்கைய சாப்பிட பழக்கினாங்க.

நடுவர் அவர்களே! இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு பாக்கும்போது அங்கலாப்பாதான் இருக்கும். ஆனா போய் பாத்தாதான் தெரியும்..எவ்வளோ அருமையான பழத்தோட்டத்த தவிர விட்டு வெறும் புல்வெளிக்கு வந்திருக்கோம்னு. இன்னும் புரியாதவங்களுக்காக அக்கரை பச்சைங்கறது அந்தக்காலம்., பழத்தோட்டம்ங்கறது இந்தக்காலம்னு சொல்லி பல துறைகளிலும் மகுடம் சூட்டும் பெண்கள் சமையல்ங்கற கலையில் மட்டும் தோத்துபோவாளா என்ன? அதிலும் சிறப்பாகவும் திறமையாகவும் முக்கியமா கில்லாடியாகவும் திகழ்வது இந்தக்காலமே இந்தக்காலமே ந்னு சொல்லி இந்த உரையை முடிக்கிறேன் நடுவரே நன்றி;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்