பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?

அன்பான அறுசுவை நேயர்களே!!
இந்த வார பட்டிமன்றம் ஆரம்பமாயிடிச்சு. புது நடுவரான எனக்கு ஊக்கம் தர்ற மாதிரி எல்லோரும் வந்து வாதாடி பட்டியை கலை கட்ட வைக்கனும்னு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
இந்த வார தலைப்பு நம்ம தோழி கல்பனா சரவணகுமாருடையது. நன்றி கல்பனா!!

தலைப்பு என்னன்னா, சமையலில் கில்லாடிகள் அந்த கால பெண்களா? (அதாவது நம்ம அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி, எள்ளுபாட்டி எல்லாம்). (அல்லது) இந்த கால பெண்களா? (சாட்ஷாத் நாமளேதான்). சரியா விளக்கியிருக்கிறேனு நினைக்கிறேன். சந்தேகம்னா கேளுங்க.

பட்டிமன்ற விதிமுறைகள்:
* யாரும் பெயர் சொல்லி அழைத்து வாதிடக் கூடாது. அவ்வுரிமை நடுவருக்கு மட்டுமே.
* ஜாதி, மதம், அரசியல் கலந்து பேசக்கூடாது.
* தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும், நாகரீகமான பேச்சு அவசியம்.
* மற்றபடி அறுசுவையின் பொதுவிதிமுறைகள் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும்.
அறுசுவை நேயர்கள் அனைவரும் வாங்க!! பட்டிமன்றத்தை அமர்க்களமா, ஆரவாரமான வாதத்தோடு தொடங்குங்க. நன்றி!!

நடுவர் அவர்களுக்கு வணக்கம். சமையலில் எப்போதும் சிறந்தவர்கள் அந்த
காலத்தவர்களே. அந்தக் காலத்தவர்களின் வழி வந்தவர்களே இந்தக் காலத்தவர்கள்.

ஈஸ்வரன்

அன்பு பூர்ணிமா... மன்னிக்கணும், நடுவரேன்னு போட்டு பெர்சனல் கேள்வியை கேட்க முடியல. பிள்ளை உடல் நலம் எப்படி இருக்கு? இத்தனை நாட்களாகியும் ஒன்னும் பதிவில்லையே, அதான் எப்படி இருக்காங்கன்னு கேட்கலாம்னு வந்தேன். நேரம் கிடைக்கும்போது தீர்ப்பு போடுங்க, அதுக்கு முன்னாடி பிள்ளை உடல் நலம் எப்படி இருக்குன்னு அவசியம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ... வனிதா அக்கா வா?? நான் கூட பட்டி தீர்ப்பு வந்துடுச்சோ னு பார்த்தேன்... நடுவரின் குழந்தை உடல் நலம் இன்னும் சரி இல்லையா??? இல்லை பட்டி னு ஒண்ணு நடத்துனதையே மறந்துட்டாங்களா ?? எது எப்படியோ!! ஞாபகம் வரும் போது இல்லை நேரம் கிடைக்கும் போது போட்டுடுங்க பூர்ணிமா ......

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்