இறால் திக்கிடி

தேதி: September 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

மாவு செய்ய
============
வறுத்த இடியப்ப மாவு - 2 கப்
உப்பு - 3/4 ஸ்பூன்
ஜீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் துருவல் - 3/4 கப்

இறால் மசாலா செய்ய
====================
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
இஞ்சி&பூண்டு விழுது - 1.5 ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
கறிமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தழை நறுக்கியது - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது நறுக்கியது


 

முதலில் மாவு செய்ய சீரகம்,தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து எடுத்து அரிசி மாவில் சேர்க்கவும்
தேவைக்கு உப்பும் கலந்து கொதித்த தண்ணீர் கலந்து இடியப்ப மாவு போல் திரட்டவும்
பின்பு அதனை பிரும்பிய வடிவில் குட்டி குட்டியாக உருட்டி எடுக்கவும்.அதிக நேரம் செலவிட முடியாவிட்டால் நீளமாக மாவை உருட்டி எடுத்து கத்தியால் வெட்டி வெட்டி எடுக்கவும்
பின்பு உருட்டிய மாவுகளை ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
பின்பு மசாலா செய்ய முதலில் பெரிய இறாலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிறிது என்றால் அப்படியே சேர்க்கலாம்
பின்பு எண்ணை காயவைத்து வெங்காயத்தி நன்கு வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் இதர பொடிகள் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உடையும் வரை வதக்கவும்
பின்பு மல்லி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பின்பு இறால்,தேவைக்கு உப்பு மற்றும் உருட்டிய மாவினை சேர்த்து வதக்கவும்
மசாலாவில் தண்ணீர் வற்றியிருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து விடவும்
10 நிமிடம் மூடி வைத்து மசாலா மாவோடு கலந்தபின் தீயை அணைக்கவும்
சுவையான இறால் திக்கிடி ரெடி


விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.சிறிய வகை இறாலில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.கேரளாவில் செம்மீன் பத்திரி,செம்மீன் பிடி என்று பல பெயர்களில் சொல்வார்கள்

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா நல்லா இருக்கீங்களா நல்ல அருமையான குறிப்பு இத சாப்பிட ஆசையா இருக்கு விருப்ப பட்டியலில் சேர்க்க போறேன் முடியும் போது கண்டிப்பா செய்து பாகிறேன் பா

ஹாய் தளிகா உங்க இறால் திக்கிடி செய்தேன் எல்லாருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது

நச்ரீன் கவனிச்சிருக்க மாட்டேன் சைடில் பார்த்ததால் பதிவை படிக்க முடிஞ்சது...ரொம்ப சந்தோஷம் ரொம்ப ஆசையா செய்து பார்த்தீங்க போல.என் கணவருக்கு இது ரொம்ப ரொம்ப இஷ்டம்