உப்பு கொழுக்கட்டை - 2

தேதி: September 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

புழுங்கல் அரிசி/ பச்சரிசி - 200
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்
உளுந்து
கடுகு
சிவப்பு மிளகாய் – 2


 

அரிசியை நன்றாக களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போடவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மாவு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து கை விடாமல் நன்றாக கிளறவும்.
உருட்டும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
சூடு ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி சட்டியில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறலாம்.
மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு வகை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான ஈசி குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு. நாங்க உப்பு உருண்டைன்னு சொல்வோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக சுலபமான சுவையான குறிப்பு... வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சாரி... முதல்ல உங்க பேரு தப்பா போட்டுட்டேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகு உருண்டை
கடைசி படம் அமர்க்களம் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அனு எனக்கும் ரொம்ப பிடிச்ச நீர் உருண்டை ;) சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

I tried this kolukattai,very nice,thanks friend.

If you do your work with luv and dedication,success will cum automatically.