மசாலா வெண்டைக்காய்

தேதி: September 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று (பெரியது)
பூண்டு - 6 முதல் 8 பல்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க
கடுகு, சோம்பு - சிறிது


 

வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பாதி வெங்காயத்தை சிறியதாகவும், மீதியை நீளவாக்கிலும் நறுக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு பொரித்து அதை தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயமும், பூண்டும் நன்கு வதங்கி பொன்னிறமானதும் தக்காளியை போட்டு நன்கு குழையும் வரை வதக்கவும். (தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்).
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மசாலா தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கழித்து அதோடு கொத்தமல்லி தழை சேர்த்து தீயை குறைய வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அவை வதங்கும் நேரத்தில் மற்றொரு வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கிய மசாலாவுடன் பொரித்த வெண்டைக்காயை போட்டு கலந்து அதோடு தாளித்தவற்றையும் போட்டு பிரட்டவும். அடுப்பை அணைத்து விட்டு 2 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.
சுவையான மசாலா வெண்டைக்காய் தயார். வெறும் சாதம், சப்பாத்தி இவற்றுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹ்ம்ம் இப்போவே சாப்டனும் போல இருக்கே மசாலா வெண்டைக்காய் சூப்பர் அபி அக்கா நாளைக்கே செஞ்சுட்டு பதிவிடுறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மசாலா வெண்டைக்காய் பார்க்கவே சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹலோ அபி ... மசாலா வெண்டைக்காய் ரொம்ப நல்லா இருக்குங்க :) வாழ்த்துக்கள் !

மசாலா வெண்டைக்காய் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

மசாலா வெண்டைக்காய் சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அபி,

மசாலா வெண்டைக்காய் அருமையா இருக்கு! செய்முறையும் சுலபமா இருக்கு. வெண்டைக்காயை சாய்த்து நறுக்கி இருப்பது அழகா இருக்கு! (வெஜ் புலாவ் , பிரியாணிக்கு நானும் இப்படிதான் பீன்ஸை சாய்த்து கட் செய்வேன். :)) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நல்ல குறிப்பு. நான் இதே போல் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு வகை செய்வேன், கொஞ்சம் செய்முறை வேறு, ரொம்ப நாளாச்சு... உங்க குறிப்பு அதை நினைவுபடுத்தியது. உங்க குறிப்பு இன்னுமே நம்ம ஊர் ஸ்டைலில் சூப்பரா இருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன் உங்க முறையில். ஏன்னா பார்த்ததும் தயிர் சாதம் சாப்பிட ஆசை வந்துடுச்சு, இதை சைட் டிஷா வெச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு மிக்க நன்றி :)

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றி கனி :) நிச்சயமா செய்து பார்த்திட்டு சொல்லனும்.

வாழ்க வளமுடன்

இந்திரா
வாழ்த்திற்கு ரொம்ப நன்றி இந்திரா :)

வாழ்க வளமுடன்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

வாழ்க வளமுடன்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)
(உங்க பெயர் வித்தியாசமா நல்லா இருக்கு)

வாழ்க வளமுடன்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)

வாழ்க வளமுடன்

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி சுஸ்ரீ :)

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றி வனிதா. நிச்சயம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க. காரம் உங்களுக்கு பிடிக்கும்னா இன்னும் சேர்த்துக்கோங்க. தயிர்சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும் :)

வாழ்க வளமுடன்

பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு. மதியம் சமைச்சு பார்த்துட்டு சொல்லறேன்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

அபி இன்று உங்கள் மசாலா வெண்டைக்காய் செய்தேன். சுவையாக இருந்தது.

இதுவும் கடந்து போகும்

Masala powder means garam masala /curry masala or any other? Recipe look good so i wish to try it so clarify my doubt abi.

மசாலா தூள் என்றால் என்ன?சாம்பார் பொடியா?இல்லை தனியா பொடியா?