சிக்கன் சுக்கா

தேதி: September 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

வேக வைக்க:
சிக்கன் - அரை கிலோ
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கிராம்பு - இரண்டு
பட்டை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - பாதி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - பாதி
பொடி வகைகள்:
மல்லி பொடி, மிளகாய் பொடி - தலா அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியே வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாசனை பொருட்கள், காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வெந்ததும் தனியே வடித்து எடுத்து வாணலியில் மற்ற பொருட்களுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
பொடி வகைகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து கிளறி எடுக்கவும்.
சுவையான, சிக்கன் சுக்கா ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா அக்கா அந்த லாஸ்ட் ப்ளேட் அப்டியே எனக்கு தான் ஹ்ம்ம் சுப்பர் அக்கா I தின்க் இது சப்பாத்தி இலனா, ரைஸ் வித் ரசம் ஓட பெஸ்ட் காம்பினேஷனு நினைக்றேன் ஈசி ஆ இருக்கு அக்கா செய்யுறதும் ஹ்ம் இந்த வீக் எண்டு செஞ்சுடுறேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுவையான சிக்கன் சுக்கா சூப்பர்... வாழ்த்துக்கள்..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சிக்கன் சுக்கா ....சூப்பர் ! சூப்பர் !!சூப்பர் !!!
கடைசி படத்தை பார்த்தாலே சுவைக்கத்தூண்டுகிறது :) வாழ்த்துக்கள்!

சிக்கன் சுக்கா ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்..

சிக்கன் சுக்கா செம சூப்பராயிருக்கு ரம்ஸ்! ;)

படங்கள் அத்தனையும் 'பளிச்'சுனு அருமை! கடைசில‌ ப்ரசண்டேஷன் படம் அட்டகாசமா வ‌ந்திருக்கு! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

நல்லா இருக்கு, சுலபமாவும் இருக்கு. படங்கள்... நான் சொல்ல வேண்டியதை சுஸ்ரீ சொல்லிட்டாங்க :) அதனால் வாழ்த்துக்கள் மட்டும் சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

கனி
ரொம்ப நன்றி தங்கச்சி :)
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க

இந்த்ரா
ரொம்ப நன்றிங்க ;)

vibgy
ரொம்ப நன்றிங்க ;)

ப்ரதன்யா
மிக்க நன்றி :)

சுஜா
ரொம்ப ரொம்ப நன்றி சுஜா :)

வனி
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன் சுக்கா.சூப்பர்;

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Ramya kalakkareenga .Presentation romba arumaiya irukku.Valthukkal.

"Happiness is a habit, cultivate it"