பேரீச்சம்பழ ஸ்வீட்

தேதி: September 3, 2006

பரிமாறும் அளவு: பரிமாறும் அளவில்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

விதை நீக்கிய பேரீச்சை - அரை கிலோ
பால் - அரை லீட்டர்
சீனி - கால் கிலோ
கோக்கோ - 4 மேசைக்கரண்டி
நெய் - 4 மேசைக்கரண்டி
உடைத்த கயூ - 100 கிராம்


 

பேரீச்சம்பழத்தை அரை மணி நேரம் பாலில் ஊற வைத்து அரைத்து எடுக்கவும்.
அரைத்து எடுத்த கலவையினுள் கோக்கோவையும் சேர்த்து கலக்கவும்.
சீனியினுள் முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
பாகு கம்பி பதத்தில் வந்தவுடன் அரைத்து வைத்த பேரீச்சம் பழ விழுதையும் உடைத்த கயூவையும் சேர்த்து கிளறவும்.
பின்பு நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் பீஸ் பீஸாக வெட்டி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi, I liked this recipe. Please let me know what is "Kayu"??? you have mentioned here "Vudaitha Kayu"

Hi saravanan
உடைத்த கஜு என்றால் உடைத்த முந்திரி. இலங்கையில் முந்திரியை கஜு என்பார்கள்.
-நர்மதா :)