மெக்சிகன் சாட்

தேதி: September 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ராஜ்மா - ஒரு கப்
மக்கா சோளம் - அரை கப்
உருளை - 2 (சிறியது)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சீரக பொடி - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - கால் தேக்கரண்டி
கெட்டி தயிர் - கால் கப்
மல்லி சட்னி - கால் கப்
புளி சட்னி - கால் கப்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லி தழை, ஓமப்பொடி - மேலே தூவ


 

தயிரை சாட் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே குளிர வைக்கவும். ராஜ்மாவை 4 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும். சோளம் மற்றும் உருளையையும் வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியில் உள்ள விதையை உபயோகிக்க வேண்டாம்.
இரண்டு வகையான சட்னி, சீரக தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
வேக வைத்த ராஜ்மா, சோளம், உருளை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சேர பிசையவும்.
கலந்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பரிமாறும் போது இந்த சாட் கலவையை முதலில் இட்டு, அதற்கு மேல் குளிர வைத்த தயிரை நன்றாக கலக்கி ஆங்காங்கே ஊற்றவும் அதன் பிறகு சிறிதளவு சாட் மசாலா (தேவையெனில்) மல்லி தழை மற்றும் சேவ் சேர்த்து பரிமாறவும். மாலை நேர சுலபமான சுவையான சத்தான சிற்றுண்டி தயார்.

புரதம் நிறைந்த சாட் ரெடி. இதில் சேவிற்கு பதிலாக பப்படியும் சேர்த்துக் கொள்ளலாம்.
பப்படி செய்ய: <a href="/tamil/node/23445">காபுலி சாட்</a>
மல்லி சட்னி செய்ய : <a href="/tamil/node/17871">கிரீன் சட்னி (சாட்)</a>
புளி சட்னி செய்ய : <a href="/tamil/node/17872">புளி பேரீச்சை சட்னி (சாட்)</a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான சாட் சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Healthy evening snacks... superb decoration:) Taste panna andha last plate kudunga parkalam:) vazhthukkal lavanya...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ம்...ம்.. ஈசி.. ஹெல்தி.. டேஸ்டி.. மெக்ஸிகன் உணவு என்றும் என் விருப்பமான உணவு.வாழ்த்துக்கள்.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சூப்பர் சாட்... நேற்று தான் நினைச்சுட்டே இருந்தேன்... மீண்டும் இந்த லாவி எங்க போனாங்க, ரெசிபி காணோம்னு ;) இன்னைக்கு வந்துட்டுது. குட். நல்ல ஹெல்தி சாட் கொடுத்திருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவி

சூப்பர்
படங்கள் அருமை
வழக்கம் போல ஹெல்தியான நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான சுலபமான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் லாவண்யா,
உங்க குறிப்பு சூப்பர்..அழகா ப்ரசண்ட் பண்ணி இருக்கிங்க...குறிப்ப ஆனியன் ரிங்ஸ்:)
எனக்கு ராஜ்மா எவ்வளவு நேரம் வேக வைக்கணும்னு சொல்லுங்க?

ஹாய் லாவண்யா அக்கா வெரி easy அண்ட் ஈசி சாட் சோ கலர்புல் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

லாவி சூப்பரான சாட் பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவி,

வழக்கம்போலவே சூப்பர் & ஹெல்தி சாட்! ப்ரசண்டேஷன் படம் சூப்பர், லாவி பேரைச் சொல்லுது! :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ