ஓக்ரா கோடா மசாலா

தேதி: September 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
முந்திரி - ஐந்து
வறுத்து அரைக்க: ( கோடா மசாலா )
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
மல்லி விதை - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
வேர் கடலை - 2 தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
பொடி வகைகள்:
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெண்டைகாயின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கிவிட்டு இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைகாயை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் நன்கு அரைக்கவும். கோடா மசாலா ரெடி.
நன்கு வதங்கிய வெண்டைகாயில் ஒரு தேக்கரண்டி கோடா மசாலாவை சேர்த்து மற்ற பொடி வகைகளையும் சேர்த்து பிரட்டி எடுக்கவும். உப்பை சரி பார்க்கவும்.
மிகவும் சுவையான ஓக்ரா கோடா மசாலா ரெடி. ப்ளைன் பருப்புக்கு நன்றாக இருக்கும்.

இது மஹாராஷ்டிரா மசாலா ஆகும். இந்த மசால், சன்னா, கறிவகை, நான்வெஜ் ஐட்டம் என பல உணவுகளில் பயன்படுத்தபடுகிறது. இதை காலா மசாலா என்றும் கூறுவார்கள். விரும்பிய வெவ்வேறு மசாலா பொருட்களையும் சேர்த்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஓக்ரா கோடா மசாலா பாகவே யம்மியா இருக்கே சாப்டா ஹ்ம்ம் அக்கா நா பர்ஸ்ட் டைம் இந்த மாதிரி வெண்டைக்காய் டிஷ் பாக்குறேன் சூப்பரா இருக்கு அக்கா நிச்சயம் ட்ரை பனுவேன் அக்கா தாங்க்ஸ் பார் ஷோவிங் எ டிப்ப்ரென்ட் டிஷ் அக்கா எனக்கு வெண்டைக்காய் நா ரொம்ப புடிக்கும் அதுக்குதான் இவ்ளோ கமெண்ட்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு ரம்யா.... கலக்கலான ரெசிபி:) வாழ்த்துக்கள் ! படங்கள் கண்களுக்கு விருந்து *****

ரம்யா நல்ல குறிப்பு. ரொம்பனாலா வெண்டைக்காய வேரு விதமா செய்யனும்னு இருந்தேன் ... கன்டிப்பா செய்துபார்க்கிரேன்

அன்புடன்,
லலிதா

இங்கே ஒரு கலியாணத்தில் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருந்தது. அப்போ செய்து பார்க்க நினைத்ததோடு சரி. குறிப்பு கொடுத்ததற்கு நன்றி ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

கனி
ரொம்ப நன்றிங்க..
முடியும் போது அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கோ ;)

Vibgy
உங்க பெயர் தான் என்ன ? :)
எல்லா குறிப்பிலும் உங்க பதிவு இருக்கு. பெயர் தெரிந்துக் கொள்ள ஆசை
நன்றி

லலிதா
ரொம்ப நன்றி.. செய்து பார்த்து சொல்லுங்க ;)

இமா
அப்படியா?
செய்து பார்த்து அந்த டெஸ்ட் இருந்ததான்னு சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கமகம மசாலா ஓக்ரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்யா நல்ல குறிப்பு. கலக்கலான ரெசிபி. வாழ்த்துக்கள்!
படங்கள் சூப்பரா இருக்கு. கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.

ரம்யா,
வெண்டக்காய்ல இவ்வளவு வண்ணமயமான பதார்த்ததை இப்பதான் பார்க்கிறேன். கண்டிப்ப சமைச்சுட்டு சொல்லறேன்.
இந்த குறிப்பு வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

ரம்ஸ் சூப்பர் கண்டிப்பா செய்யனும் :) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ்,

ஓக்ரா கோடா மசாலா சூப்பரா இருக்கு, புதுசா இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நல்லா இருக்கு :) செய்து பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசி
ரொம்ப நன்றிங்க ;)

ப்ரதன்யா
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க ;)
நன்றி

அருட்செல்வி
ரொம்ப நன்றிங்க.
செய்து பார்த்து சொல்லுங்க ;)

ஸ்வரு
செய்து பார்த்து சொல்லுங்க..நன்றிகள் ;)

சுஜா
ரொம்ப நன்றிங்க ;)

வனி
செய்து பார்த்து சொல்லுங்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹலோ ரம்யா ...சாரிங்க ,இப்ப தான் உங்க பதிவை பார்த்தேன் .
நான் mrs.விப்ஜி (பெயர்-ஜெபி )

nan saithu parthan romba supara erunthuchu. en vetla elarum nalaerukunu sonanka. romba thanks.