டின் மீன் ப்ரை

தேதி: September 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மீன் டின் - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பெரியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

தேவையானவற்றை எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
மீன் டின்னை திறந்து அதிலுள்ள தண்ணீரை கொட்டிவிட்டு, மீனில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு சுத்தம் செய்து உப்பு, மிளகாய் தூள் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
கடாய் சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் மீன் துண்டுகளை போட்டு மூடி வைக்கவும். (மீனில் தண்ணீர் இருப்பதால் வெடிக்கும்). அடுப்பை உயர்தீயில் வைக்கவும்.
மீன் ஒரு பக்கம் பொரிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அரை நொடி அப்படியே விட்டு பின் மீனை மெல்ல திருப்பவும். (அவசரப்பட்டால் மீன் உடைந்துவிடும்)
மீனின் அடுத்த பக்கமும் பொரிந்த பின் வெங்காயத்தை போட்டு குறைந்த தீயில் விட்டு மூடி வைக்கவும்.
2 நிமிடம் விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, மீனோடு வெங்காயத்தை சேர்த்து (மீன் உடையாதவாறு) மெல்ல கிளறி விடவும் (வெங்காயம் பொரியக்கூடாது, வெந்தால் போதும்).
சுவையான, எளிமையான டின் மீன் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹ்ம்ம் அருமையான டின் மீன் பொறியல் அபி அக்கா ரொம்பவே ஈசியா இருக்கு டிஷ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மீன் ப்ரை சூப்பர் ... ஈசியாவும் இருக்கு செய்முறை... கண்டிப்பா ட்ரை பன்னி பாக்குறேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

டின் மீன்... என்ன மீன் இது?? இது போல் சாதாரணமா ஃப்ரெஷ் மீனில் பண்ணலாமா? செய்து பார்க்கிறேன் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ஈசியா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அட்மினுக்கு மிக்க நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு மிக்க நன்றி..

வாழ்க வளமுடன்

முதலாவதா வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி கனி.. ஈசியா மட்டுமில்லை, டேஸ்டியாவும் இருக்கும்..

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றி இந்திரா. செய்து பார்த்திட்டு மறக்காம சொல்லுங்க..

வாழ்க வளமுடன்

உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி வனி.. இது பதப்படுத்தப்பட்ட மீன் வனி. ப்ரெஷ் மீனில் இப்படி வராதுதான் நினைக்கறேன். ஆனா உங்க கை பட்டு வராதது ஏதும் இருக்கா என்ன?? அவசியம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க..

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றிங்க..

வாழ்க வளமுடன்

super