மஷ்ரூம் ராப்ஸ்

தேதி: September 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

மஷ்ரூம் - 15/20
பெரிய வெங்காயம் - ஒன்று
குடை மிளகாய் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
வெங்காயத்தாள் - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சீஸ் ஸ்லைசஸ்/துருவிய சீஸ்
டார்ட்டிலா/சப்பாத்தி


 

முதலில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளி மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காய‌த்தாளையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற கடாயில், எண்ணெய் விட்டு சூடாக்கவும். இதில் முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது நிறம் மாறும் போது தக்காளி சேர்த்து, கூடவே சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி கரைந்து வரும் போது நறுக்கி வைத்த மஷ்ரூம் துண்டுகளை போட்டு சில நிமிடங்கள் வதக்கி கூடவே குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
பிறகு மீதி உப்பு, மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து வதக்கி விடவும். ஒரு மூடிபோட்டு, அனலை குறைத்து வைத்து வேகவிடவும். தக்காளி, மஷ்ரூமில் கிடைக்கும் தண்ணீரிலேயே காய் முழுவதுமாக வெந்துவிடும். (தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.)
பத்து நிமிடம் கழித்து காய் வெந்துவிட்டதை உறுதி செய்துக் கொண்டு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை தூவிவிட்டு, ஒருமுறை கிளறி இறக்கவும். இப்போது ராப்ஸ் செய்யத் தேவையான ஃபில்லிங் தயார்.
இனி ராப்ஸ் செய்ய தேவையானவைகளை எடுத்து தயாராக வைக்கவும்.
ஒரு டார்ட்டிலாவை/சப்பாத்தியை எடுத்து அதன் நடுவே ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, அதன் மேலே இரண்டு மேசைக்கரண்டி அளவுக்கு மஷ்ரூம் ஃபில்லிங்கை வைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளவாறு மடித்து விடவும்.
துருவிய சீஸ் சேர்க்க இதேபோல் ஃபில்லிங்கை வைத்து அதன்மேலே சீஸ் தூவிவிட்டு பின் ரோல் செய்துக் கொள்ளவும்.
குழந்தைகள் கையில் எடுத்து சாப்பிட ஏதுவாக, அலுமினிய ஃபாயில் சுற்றியும் கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்றதாக‌ இருக்கும் இந்த மஷ்ரூம் ராப்ஸ்!(Wraps).

டார்ட்டிலா : கடையில் கிடைக்கும் ரெடிமேட் வகை அல்லது வீட்டிலேயே செய்த சப்பாத்தி எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வீட்டிலே செய்யும் சப்பாத்தி என்றால் கொஞ்சம் அளவு பெரிதாக தேய்த்து செய்துக் கொண்டால், ஃபில்லிங் வைத்து மடிப்பதற்கு வாட்டமாக இருக்கும். அதே போல ஃபில்லிங் வைத்து மடிப்பதற்கு முன் லேசாக ஒரு சில நொடிகள் டார்ட்டில்லாவை (மைக்ரோவேவில்/தவாவில்) சூடாக்கி செய்தால், மடிப்பதற்கு எளிதாக இருக்கும். சீஸ் எந்த வகை (ஸ்லைசஸ் அல்லது துருவியது), எவ்வளவு என்பதெல்லாம் அவரவர் சுவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்!!! சூப்பர் ராப்ஸ் :) எனக்கு இது போல் வகைகள் ரொம்ப விருப்பம். அதுவும் உங்க ப்ரெசண்டேஷன்... அந்த கடைசி படம்... சூப்பரோ சூப்பர். அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் சத்தான எளிமையான குறிப்பு சூப்பர் ஆஹ இருக்கு பாகவே கட்டாயமாக ட்ரை பனி பாக்குறேன் சுஸ்ரீ அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பார்த்ததுமே சாப்பிட தூண்டுகிறது சுபஸ்ரீ,
நான் இப்பொழுதுதான் முதல்முறையாக பேசுகிறேன்.
வாழ்த்துக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுப்பர், அதிலும் கடைசி படம்... அழகா செட் பண்ணி இருக்கீங்க.

‍- இமா க்றிஸ்

சுஸ்ரீ சூப்பர் சூப்பர் எனக்கு பிடிச்ச ரெண்டையும் சேர்த்துருக்கீங்க சப்பாத்தி + மஷ்ரூம் :)
கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.கடைசில இருக்க ப்ளேட்டை (ராப்ஸோட)அப்படியே இங்க தள்ளிவிடுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அறுசுவை அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
முதலாய் வந்து தந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! :) (என்னோட நிறைய குறிப்புகளில் உங்க பதிவுதான் முதலில்... ரொம்ப ஹேப்பி! :) :D)
எங்கவீட்டில குட்டீஸின் ஃபேவரைட் வனி இது. இப்படி செய்தால் ஈசியாக காய் சாப்பிடவைக்கமுடிகிறது. ;) ப்ர‌சண்டேஷ‌ன் படம் பிடிச்சிருக்கா?! தேங்க்ஸ் வனி! :) உங்களுக்கு முடியும்போது அவ‌சிய‌ம் செய்துப்பார்த்து சொல்லுங்க‌ வ‌னி!
--

கனிமொழி,
உங்களின் பாராட்டிற்கும், வருகைக்கும் மிக்க நன்றி! அவ‌சிய‌ம் செய்துப்பார்த்து எப்ப‌டி இருந்த‌‌துன்னும் வந்து சொல்லுங்க கனி! :) ந‌ன்றி!
--

அருட்செல்வி,
உங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி! ஆமாம் இப்ப‌தான் முத‌ல்முறை பேச‌றோம். எப்படி இருக்கிங்க? உங்க வ‌ருகைக்கும், பதிவிற்கும் ந‌ன்றி!
--

இமா,
மிக்க‌ ந‌ன்றி இமா! :) ப்ர‌சண்டேஷ‌ன் ப‌ட‌ம் உங்க‌ளுக்கும் பிடிச்சி இருக்கா?, தேங்க்யூ சோ மச்!
--

சுவர்ணா,
பாராட்டிற்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க ந‌ன்றி! முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க. எனக்கும் ஃபேவரைட் காம்போ இது... சேம் பின்ச்! உங்களுக்கு இல்லாததா? :) இதோ, இப்பவே (ராப்ஸுடன்) ப்ளேட்டை தள்ளிவிட்டுட்டேன்... எடுத்துகிட்டிங்கதானே?! ;) மீண்டும் நன்றி சுவர்ணா!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ,
ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க...ஈசி + ஹெல்தி ...ட்ராவலிங் போது எடுத்துட்டு போகலாம்...சாப்பிட வசதியா இருக்கும்னு நான் என் ஹஸ்க்கு சப்பாத்தியோட முட்டைய தான் ரோல் பண்ணி குடுப்பேன்...இனிமே உங்க டிஷ் ட்ரை பண்ணிடறேன் :)
உங்க டிஷ்ல சிலது செஞ்சு பார்தேன்..நல்லா இருக்கு .....வித்தியாசமா பண்றீங்க சுஸ்ரீ...

சுஸ்ரீ .. இதைதான் ... எதிர்பார்த்தேன் ...விருப்ப பட்டியலில் சேர்த்தாயிற்று.... தாங்ஸ்

மஷ்ரூம் ரேப்ஸ் பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு.கண்டிப்பா செஞ்சி பாக்குறேன். வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ராப்ஸ் அருமையா இருக்கு சுஸ்ரீ பசங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் செய்ய போறேன்.
நன்றி சுஸ்ரீ

அருமையா செய்து இருக்கிங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுஸ்ரீ ,உங்க மஷ்ரூம் ராப்ஸ் நேற்று காலைல செஞ்சென்...வீட்டில செம ஹிட் ஆயிடுச்சு பா...நன்றி....

சூப்பரான ஐடியா ...! ( மஷ்ரூம் +சப்பாத்தி) அருமையான ஹெல்தி ஜோடி :)
அட்டகாசமான குறிப்பு ,வாழ்த்துக்கள்!படங்கள் தூள் கிளப்புது ......

சுஸ்ரீ மஷ்ரூம் ராப்ஸ் டேஸ்ட் சூப்பர்.நான் எப்பவுமே கூடவே பன்னீர் சேர்த்து செய்வேன்.இதுவும் நல்லா இருக்குங்க.செய்து நல்லா சாப்பிட்டு தாமதமாக பதிவு போடறேன்,சாரிங்க.நல்ல குறிப்புக்கு நன்றி.

Kalai