பட்டிமன்றம் - 74 "பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார்? சாலமன் பாப்பையாவா...?திண்டுக்கல் லியோனியா...?"

பாசமிகு சகோதரர்களே,அன்புமிகு சகோதரிகளே,உறுதுணையான நட்புகளே காலை வணக்கம்.......(பாப்பையா ஸ்டைலில்)
அட என்னப்பா வணக்கமெல்லாமிருக்கட்டும் விஷயத்துக்கு வருவோமா.......(லியோனி ஸ்டைலில்)

பட்டி துவங்க வேண்டிய நாளாச்சேன்னு நானும் கலந்துக்கலாம்னு எட்டிபார்த்தேன் இன்னும் யாரும் பட்டி துவங்களை அதான் நானே துவங்கிட்டேன் மன்னிக்கவும்..........
தலைப்பு நம் தோழி கார்த்திகாவினுடையது"பட்டிமன்றங்களுக்கு சிறந்த நடுவர் யார் ??? சாலமன் பாப்பையாவா ??? லியோனியா???""
அனைவருக்கும் வித்யாசமாக இருக்குமென நம்புகிறேன்.முடிந்தவரை அனைவரும் கலந்து பட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.நானும் முடிந்தவரை பட்டியை நன்றாக நடத்த முடியும்னு நம்புறேன்.....அனைவரும் வருக,வாதங்களைத் தருக..........

பட்டி விதிமுறைகள் அனைவருக்கும் தெரியும்.
மன்ற விதிகளும் பட்டிக்கு பொருந்தும், நினைவில் வைத்து அனைவரும் பட்டியில் கலந்துகொள்ள வாருங்கள்....

China china santhagangal paguthi 3 eapadi parpathu.

லியோனி அவர்கள் பட்டிமன்றம் என எடுத்துக் கொண்டால் யாரையாவது மைய படுத்தி கிண்டல் அடிப்பது போல சில நேரங்களில் பேசுவார்... அது போன்ற நகைச்சுவைகள் நம்ம ஐயா பாப்பையா பட்டி ல இருக்காது... நகைச்சுவைகள் அனைத்தும் எல்லோரும் ரசிக்கும் படியாக இயல்பானவையாக இருக்கும்..

அது மட்டுமில்லை.. பாப்பையா அணியிலே tom - jerry போல சூப்பர் காம்பினேஷன் நம்ம ராஜா சார் உம், பாரதி பாஸ்கர் மேடம் உம்... எதிர் எதிர் அணியிலே பேசி 2 அணிக்கும் வலு சேர்ப்பாங்க. இது மாதிரி திறமையான அணியினரை கொண்டதே நம்ம பாப்பையா அணி தான்... லியோனி சார் அணியில இது மாதிரி பிரபலங்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.... எதிர் அணி மூச்சு பேச்சு இல்லாம இருப்பதை பார்க்கும் போதே தெரிஞ்சுருக்குமே நடுவர் அவர்களே நாங்க சொல்றது உண்மை தான் னு...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

லியோனி அணிக்கு வாதாட வந்திருக்கீங்க,வாங்க வாங்க...உங்க ஆணித்தரமான வாதங்களை வரிசையா கொடுங்க.......

கார்த்திகா தொடர்ந்து பாப்பையா அணிக்கு வலு சேர்க்கிரீங்க,நல்லது......என்னப்பா லியோனி அணி உங்க நடுவர் பட்டில குறிப்பிட்டு காமெடி பண்ணுவாராமே....அப்படியா???வந்து பதில் கொடுங்கப்பா.........

வாங்கையா..........என்னய்யா சத்தத்தையே காணோம்.....
பட்டிமன்றம்னா கலகலன்னு நடக்கனும் நம்ம வடிவேலு பட மின்னல்மாதிரி இப்பிடின்னு வந்துட்டு அப்பிடி போகக்கூடாது......(லியோனி ஸ்டைலுமா)வாங்க வந்து வாதங்களை கொடுங்க........பட்டி விறுவிறுப்பாகட்டும்......

ஏப்பா எதிர் அணியினரே,முச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறோம் ன்னு சொல்லி புட்டீங்க, நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிச்சிட்டு வர வேண்டாமா,

கிண்டல் பண்ணுகிறார் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட குஉடாது எதிர் அணியினரே, இப்போ ஒரு படம் பார்க்கிறோம் ,வர்ற அனைத்து நகைச்சுவைக்கும் சிரிக்கிறோம் ,படம் முடிந்ததும் மறந்து விடுகிறோம். அது போலத்தான் நடுவர் அவர்களே பட்டிமன்றமும் ,சிறுது நேரம் நம்ம கவலை எல்லாம் விட்டு சிரிக்கவும், சிந்திக்கவும்! அனைத்து பட்டிமன்ற நடுவர்களுமே ஒரு கருத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கவும் ,அவர்களுக்கு களைப்பு தட்டாமல் இருக்கவும் ஒரு நிகழ்ச்சியை நடந்ததாக உருவக படுத்தி நகைசுவையாக சுவை பட சொல்லுவார்கள். அது போல் தான், அது லியோனி சார் ஸ்டைல்.சாலமன் பாப்பையா அவர்களும் இது போல் சில உதாரணங்களுக்கு குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சியை சொல்லி இருக்கிறார். இது ஐயா ஸ்டைல்.

நடுவரே, எதிர் கட்சியினர் எப்பவும் பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா தான் சாலமன் பாப்பையா ஐயா பட்டி மன்றத்தில் டோம் அண்ட் ஜெர்ரி மாதிரி, அவர்களை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்கிறார்களே, அவர்கள் மாதிரியே நன்றாக பேச கஊடியவர்களும் அவர் அணியில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் பெயர்களையும் எதிர் அணியினர் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இப்போ suntv இல சாலமன் பாப்பையா ஐயா பட்டிமன்றம் எல்லா பண்டிகைகளுக்கும் போடுகிறார்கள் என்றால், கலைஞர் டிவி இல லியோனி சார் பட்டி மன்றம் தான் போடுகிறார்கள்.அதுவும் வேற வேற டைம் தான் போடுவார்கள். இதெல்லாம் ஏன் நடுவர் அவர்களே, எல்லாம் எல்லாருமே இரண்டு நிகழ்ச்சியையும் பார்ப்பார்கள் என்று தான்.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

வாங்க ஜெயசுதா நானும் அந்த அணி சொன்னதுபோல கப்சிப் ஆகிட்டீங்களோன்னு நினைத்தேன்.......திரி பற்றிக்கொள்ள நேரமெடுக்கனுமே......சரி வந்து பதில் கொடுத்துட்டீங்க,பாப்பையா அணி என்ன சொல்லுகிறார்கள்னு பார்ப்போமா........?வாங்கப்பா இரு அணிகளும் வாதங்களைக் கொடுங்க.......

அன்பு நடுவருக்கும் பாசமான தோழிகளுக்கும் பணிவான வணக்கங்கள். விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை பண்றதுல நம்ப தோழிகள் எல்லாம் பிசி ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்போ கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டாச்சுல்ல சீக்கிரமா அல்லாரும் வாங்க குஸ்தி போடலாம் :)

நடுவரே பட்டிமன்றம்னாலே அது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம்தான். அதுக்கு அப்புறம்தான் மற்றவர்கள் எல்லாம்.

இலக்கிய மன்றக்களிலும் தமிழ் அறிஞர்களிடத்தும் மட்டுமே சுருங்கிக் கிடந்த பட்டிமன்றங்களை சாமானியனும் ரசித்து மகிழும்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை சாலமன் பாப்பையா அவர்களையே சேரும். அது வரை தமிழ்காப்பியங்களை மையமாக நடந்து வந்த பட்டிமன்றங்களிலிருந்து வேறுபட்டு குடும்பங்களுக்குள் இருக்கும் விஷயங்களை தலைப்பாக கொண்டு பட்டிமன்றங்களை நடத்தி அதை மக்களை ரசிக்கும் படி செய்ததில் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மிக அதிகம். அவர் பட்டிமன்றங்கள் மக்களை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் அவரது இயல்பான தமிழ் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கள்.

அவரது பட்டிமன்றங்களில் நகைச்சுவை இருக்கும் ஆனால் ஆபாசமான கருத்துக்களோ இரட்டை அர்த்த பேச்சுக்களோ இருக்காது. லியோனி அவர்களின் பட்டிமன்றங்களில் எல்லோரையும் ஈர்க்கும் அம்சங்கள் இருந்தாலும் தனிமனித தாக்குதல்களும் அரசியல் கலப்பும் இரட்டை அர்த்தவசனங்களும் அவரது பலவீனங்கள். ஒருமுறை லியோனி அவர்களின் பட்டிமன்றத்திற்கு போயிருந்தேன். தலைப்பு இக்கால திரைப்பட பாடல்கள் அக்கால திரைப்பட பாடல்கள். பாடல்களோடு பட்டிமன்றம் சுவையாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கே பாடப்பட்ட பாடல்களும் அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களும் நகைச்சுவை என்பதை மீறி முகம் சுழிக்கத்தக்கவகையில் பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தன. நடுவரும் இடையிடயே விளக்கம் கொடுக்கிறேன் எடுத்துக் கொடுக்கிறேன் என்று காது கூசும் வகையில் பேச்சு இருந்தது. சினிமாப் பாடல்களை சொல்லித்தான் அவர்கள் பேசினார்கள். ஆனால் பொதுமன்றத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இருக்கும் சபையில் அந்த பேச்சு தேவையற்றதாகவும் அருவருக்கத்தக்கதாகவுமே இருந்தது. பாதியிலேயே எழுந்து வந்துவிட்டோம். இதுதான் அவரது பலவீனம்.

நேற்று கூட டிவியில் லியோனியின் பட்டிமன்றம் வந்தது. அங்கேயும் தேவையற்ற இடைசெருகல்களாக அரசியல் கலப்பு நிறைந்த பேச்சுக்கள். பொதுவாக பட்டிமன்றம் என்பது தலைப்பை ஒட்டிய வாதமாக இருக்க வேண்டும். இடையிடயே நகைச்சுவை இருக்க வேண்டும். நாட்டுநடப்பை பற்றிய அரசியல் கலப்பற்ற பார்வை இருக்க வேண்டும். ஆனால் தனது சொந்த அரசியல் நோக்கு அங்கே தேவையற்றது. இது அவரது பட்டிமன்றங்களை ரசிக்க வைப்பதற்கு பதிலாக சில நேரங்களில் எரிச்சலடைய வைக்கிறது.

ஆனால் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களில் கேலி கிண்டல் நக்கல் நையாண்டி எல்லாம் இருக்கும். ஆனால் யாரையும் மனம் கோண வைக்காது. இதுதான் அவரது பலம்.

இங்கே அறுசுவை பட்டிமன்றங்களில் கூட பட்டிமன்றங்களை சிறப்பாக நடத்திய நடுவர்களை சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல இருந்ததுன்னு சொல்லிதான் பாராட்டுகிறோம். இதிலிருந்தே தெரிகிறதே மக்கள் மனதில் இடம்பெற்ற மிகச்சிறந்த நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள்தான் என்று!

மீண்டும் வருவோம்ல!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கவிசிவா........வாங்கவாங்க,நிங்களும் சாலமன் பாப்பையா அணியா நல்லதுய்யா.....
நானும் நினைத்தேன் பட்டியில் ஆரவாரமில்லையே தலைப்பு எடுபடலையோன்னு,ஆனால் கொழுக்கட்டை பண்ணிய வேலைன்னு இப்பதானய்யா தெரியுது.....

///இலக்கிய மன்றக்களிலும் தமிழ் அறிஞர்களிடத்தும் மட்டுமே சுருங்கிக் கிடந்த பட்டிமன்றங்களை சாமானியனும் ரசித்து மகிழும்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை சாலமன் பாப்பையா அவர்களையே சேரும். அது வரை தமிழ்காப்பியங்களை மையமாக நடந்து வந்த பட்டிமன்றங்களிலிருந்து வேறுபட்டு குடும்பங்களுக்குள் இருக்கும் விஷயங்களை தலைப்பாக கொண்டு பட்டிமன்றங்களை நடத்தி அதை மக்களை ரசிக்கும் படி செய்ததில் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மிக அதிகம். அவர் பட்டிமன்றங்கள் மக்களை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் அவரது இயல்பான தமிழ் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கள். ///
மறுக்கமுடியுமாய்யா.....உண்மையாச்சே......

உங்கள் அணிக்காக நீங்கள் முன்வைத்திருக்கும் வாதங்களை நடுவர் ஏற்றுக்கொள்கிறார்,உங்கள் எதிரணியினருக்கு மாற்று கருத்து ஏதேனும் இருக்கோன்னு தெரிஞ்சுக்கலாம் இன்னும் சிறிது நேரத்தில்.......
மீண்டும் உங்களின் தரமான வாதங்களை எதிர்பார்த்து நடுவர் காத்திருப்பார்..........வாருங்கள் மீண்டும்........

இரு அணிகளும் இன்னுமா பாய்ண்ட்ஸ் தேடி பிடிக்கரீங்க...?இல்ல கொழுக்கட்டை இன்னும் விழுங்கலையா>(சும்மா காமெடிக்கு..:_))வாங்க வாங்க சீக்கிரம் வாதங்களுடன் வாங்க,இல்ல பட்டி தீர்ப்பு சீக்கிரம் வந்திடும்.....

மேலும் சில பதிவுகள்