தம்மடை

தேதி: September 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

ரவை - ஒரு கிலோ
முட்டை - 10
சீனி - 500 கிராம்
கன்டண்ஸ்ட் மில்க் - 2 டின்
நெய் - 600 கிராம்
மஞ்சள் கலர் - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரி - 15
பாதாம் - அலங்கரிக்க (விரும்பினால்)


 

அனைத்தையும் தயாராக வைக்கவும். பாதாமை வெந்நீரில் போட்டு தோலுரித்து வைக்கவும்.
முட்டைகளை நன்றாக நுரை வரும்படி கலக்கவும்.
கலக்கிய முட்டையுடன் சீனியை சேர்க்கவும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக ரவையை சேர்த்து கலக்கவும்.
நன்றாக கலக்கிய பின் நெய் சேர்க்கவும். கலர் மற்றும் எசன்ஸ் சேர்க்கவும். கலர் போதவில்லையெனில் மேலும் சேர்த்துக் கொள்ளவும். எசன்ஸ் வாசம் வருகிறதா என நுகர்ந்து பார்த்து போதவில்லையெனில் அதுவும் சேர்த்து கொள்ளவும்.
ஒரு கன்டண்ஸ்ட் மில்க் டின்னை மட்டும் இப்போது ஊற்றி கலக்கவும்.
இந்த கலவையை ஒரு கடாயில் வைத்து இதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிண்டவும். சில நிமிடங்களில் கலவை கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
கெட்டியான கலவையை ஒரு ட்ரேயில் ஊற்றி அதில் மீதியுள்ள ஒரு கன்டண்ஸ்ட் மில்க் டின்னை ஊற்றி கலந்து விடவும்.
மேலே பாதாமை வைத்து அலங்கரிக்கவும்.
150C சூட்டில் 20 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். மேலே லேசான பொன்னிறம் வந்தவுடன் அவனிலிருந்து எடுத்து விடவும். சுவையான தம்மடை ரெடி.

பொதுவாக தம்மடைக்கு பால் சேர்த்து செய்வார்கள். இதில் பாலுக்கு பதிலாக கன்டண்ஸ்ட் மில்க் சேர்த்துள்ளேன். அதனால் கலவை கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். அதனால் அடுப்பில் ரொம்ப நேரம் கிண்ட தேவையில்லை. அடுப்பில் ஏற்கனவே கொஞ்சம் வேகவிட்டதால் அவனிலும் வெகு நேரம் இருக்க தேவையில்லை. தம்மடை உள்ளே கொஞ்சம் கொழகொழவென்று இருக்கும் போதே எடுத்து விடவும். அப்போதுதான் நன்றாக இருக்கும். ஆனாலும் உள்ளே மாவாக இல்லாமலும் பார்த்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரசியா அக்கா
தம்மடை செம சூப்பர் அக்கா...மேல் பகுதி எல்லாம் சிவந்து பார்த்தாலே சாப்பிடனும் போல தோணுது......நான் உங்க பால்கோவா செஞ்சு பார்த்து இருக்கேன்..இதுவும் ஒரு நாள் செய்றேன்....ப்ரான்ஸ் வந்தா செஞ்சு தருவீங்களா??

தம்மடை சூப்பரா செஞ்சி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரஸியா தம்மடை அழகா இல்லை படங்கள் அழகா அப்படி இருக்கு குறிப்பு சூப்பர்ர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தம்மடை சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

வலைக்குமுஸ்ஸலாம் ஷமீலா,பாராட்டுக்கு மிக்க நன்றிமா,இதையும் செஞ்சி பாருங்க,கண்டிப்பா செஞ்சி தரேன்,இன்ஷாஅல்லாஹ்

நன்றி இந்திரா,செஞ்சி சாப்பிட்டு விட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

நன்றி ஸ்வர்னா,பார்த்த உங்கள் கண் அழகா இல்லை பாராட்டிய உங்கள் வார்த்தை அழகா?!ஹிஹிஹி!!!

நன்றி முசி.

Eat healthy

வாவ்!!! புது விதமான ரெசிபி. ரொம்ப சூப்பர். ஊருக்கு போய் வந்த பிறகு செய்யறேன்... சூப்பரா இருக்குங்க. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா,எங்க ஊர்ல ரொம்பவே ஃபேமஸ் இது,செய்து பாருங்க.

Eat healthy

super tammadai nenga yantha oru rasia

ரசியா இதை மைக்ரோ ஓவன்ல வைக்கலாமா நானும் இதுமாதிரிதான் செய்வோம் ஊர்ல நெருப்பு வச்சு தம் பன்னுவோம் என்கிட்ட எலக்ட்ரிக் ஒவன் இல்லை

நன்றி ராஃபிகா,நான் ஃப்ரான்ஸில் இருக்கிறேன்,காரைக்கால் எனக்கு.நீங்க நாகப்பட்டினம்,நெருங்கிட்டோம்..

Eat healthy

நான் micro oven இல் வைத்தது இல்லை.சாரி.

Eat healthy