அவரைக்காய் புளிக்குழம்பு

தேதி: September 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

அவரைக்காய் - 10
கத்தரிக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தக்காளி விழுது (அ) தக்காளி ப்யூரி - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மல்லிதழை, கறிவேப்பிலை - சிறிது
வடகம் - 2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்


 

அவரை, கத்தரி, வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அவரை, கத்தரி, தக்காளி, தக்காளி விழுது, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு, சீரகத் தூள், உப்பு, மல்லிதழை போட்டு கலந்து 10 நிமிடம் வேக விடவும்.
பின் புளிக்கரைசலை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கிய பின் வடகம் சேர்த்து வதக்கவும். சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை அவரை குழம்பில் ஊற்றவும்.
சுவையான அவரைக்காய் புளிக்குழம்பு தயார். இதில் இறால் சேர்த்தால் கூடுதல் ருசி கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்! பார்க்க ஆசையா இருக்கு.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிடட அறுசுவை டீமிர்க்கு நன்றி.
நன்றி இமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு புளிக்குழம்பு என்று சொல்லும் போதே நா....ஊறும், அதிலும் நீங்க அவரைக்காய்லாம் போட்டு சூப்பரா பண்ணி இருக்கீங்க :)
படங்களும் நல்லா வந்திருக்கு . வாழ்த்துக்கள் !

ரொம்ப நன்றி vibgy,vibgy தானே உங்க பெயர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நான் mrs. விப்ஜி (என் பெயர் -ஜெபி )

அவரைக்காய் புளி குழம்பு செமையா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சூப்பர்.
புளிகுழம்பு அருமை.
பார்க்கவே நல்லா இருக்கு.
கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி இந்திரா.
நன்றி ரம்யா,அவசியம் செய்து பாருங்க;

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வித்தியாசமான குறிப்புகளோட அசத்துறீங்க :) டிஃபரண்ட் காம்பினேஷன் இது. அவசியம் செய்துட்டு சொல்றேன். இங்க அவரக்காய் கிடைக்காது, ஊருக்கு போய் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இறால் எப்போது சேர்க்கவேன்டும் தாளிக்கும்போதா குழம்பு கொதிக்கவைக்கும்போதா விவரிக்கவும்

ரொம்ப நன்றி,அறுசுவை குயினின் பாராட்டு என்றால் சும்மாவா?ரொம்ப சந்தோசம்,வனிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தாளிக்கும் போது இரால் சேர்த்தால்,கவுச்சி இருக்காது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.