வெஜ் தால் சூப்

தேதி: September 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கேரட் - 2 தேக்கரண்டி
பீட்ரூட் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - அரை தேக்கரண்டி
சீரகம் - 5
மிளகு - ஒன்று
தேங்காய் எண்ணெய் - ஓரிரு துளி
உப்பு


 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
துவரம் பருப்பை தேங்காய் எண்ணெய் சேர்த்து மலர வேக விடவும்.
வெந்ததும் அதில் காய்கறிகளை சேர்க்கவும்.
நன்கு வெந்ததும் அதில் சீரகம், மிளகு உடைத்து போடவும்.
காய்கறிகளை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்
அதை மீண்டும் வேக வைத்த நீரில் கலந்து உப்பு சேர்த்து வடிகட்டி லேசாக சூடு செய்யவும். பச்சிளம் குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ப்ரியா
சூப், சூப்பர்ங்க :)
கடைசி படம் அருமை.
அவசியம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான ஹெல்தியான ரெசிபி :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைக்கு ரொம்ப சத்தான சூப் நானும் செய்து பார்க்கிரேன்

சுவையாகவும் சுலபமாகவும் இருந்தது. மிக்க நன்றி. :D