திராமிஸு சமையல் குறிப்பு - படங்களுடன் - 23887 | அறுசுவை


திராமிஸு

வழங்கியவர் : Ramya Karthick
தேதி : Sat, 22/09/2012 - 09:46
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
2 votes
Your rating: None

 

  • லேடீஸ் ஃபிங்கர் குக்கீஸ் - ஒரு பாக்கெட்
  • மெஸ்கர்போனி சீஸ் - 250 கிராம்
  • விப் கிரீம் - 250 கிராம்
  • செமி ஸ்வீட் சாக்லேட் - ஒரு துண்டு
  • பவுடர்டு சுகர் - சுவைக்கு ஏற்ப
  • இன்ஸ்டண்ட் காபி பொடி - 2 தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
  • கோகோ பவுடர் - தேவைக்கு

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

அவனில் நீரை கொதிக்க வைத்து காபி பொடியை நன்கு கலந்துக் கொள்ளவும்.

சாக்லேட்டை துருவிக் கொள்ளவும்

குக்கீஸை காபி கலந்த நீரில் நன்கு முக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் அதை அடுக்கி வைக்கவும். ஓரங்கள் மற்றும் ஆங்காங்கே துருவிய சாக்லேட்டை தூவி விடவும்.

ரூம் டெம்பரேச்சரில் வைத்த சீஸில் சர்க்கரை கலந்து அடிக்கவும்.

பின் அதில் விப் க்ரீமை கலந்து நன்கு பேஸ்ட் பதத்தில் கலக்கவும். வெனிலா எசன்ஸை சேர்க்கவும்.

குக்கீஸ் அடுக்கிய பாத்திரத்தில் ஒரு லேயர் போட தேவையான கலவையை அப்ளை செய்யவும். பாதி கலவையை தனியே வைக்கவும்.

பின் மீண்டும் ஒரு குக்கீஸ் லேயர் போடவும்.

சாக்லேட் தூவி பாதி எடுத்து வைத்த கலவையை போடவும்.

பின் கோகோ பவுடரை கொண்டு டஸ்ட் செய்து தேவை எனில் சாக்லேட் சிரப்பை ஆங்காங்கே ஊற்றவும்

அப்படியே மூடி வைத்து குளிர்சாதன பெட்டியில் ஒரு நாள் வைக்கவும்.

அடுத்த நாள் நன்கு செட் ஆகி இருக்கும்.

சிறிது கட் செய்தால் உடையாமல் கேக் போல வர வேண்டும். குக்கீஸ் நன்கு ஊறி இருக்கும்.

மிகவும் சுவையான யம்மி திராமிஸு (Tiramisu) தயார்

இது ஒரு இத்தாலியன் டெசர்ட் ஆகும். பொதுவாக மூன்று லேயர்களை கொண்டு இருக்கும். காபி ஒன்று, மேங்கோ அல்லது பெர்ரி பழங்களில் ஒன்று சாக்லேட் லேயர்களில் ஒன்று என விரும்பியபடி செய்வார்கள். முட்டையின் மஞ்சள் கருக்களை சர்க்கரையுடன், ஒரு பவுலில் போட்டு அந்த பவுலை, கொதிக்கும் தண்ணீர் கொண்ட பாத்திரத்தின் மேல் வைத்து சுமார் 20 நிமிடம் கட்டிப்படாமல் கிளறிக் கொண்டே இருந்தால், அந்த முட்டை வெந்து பேஸ்ட் போல ஆகும். அதையும் மேலே கூறிய கலவையில் கலப்பார்கள். மேலும் அவர்கள் ரம் அல்லது வைன் சேர்த்தும் செய்வார்கள். இது தனித்தனி சிறிய கண்ணாடி பாத்திரங்களிலும் செய்து விற்கப்படும்.

மெஸ்கர்போனி சீஸ் கிடைப்பது கஷ்டம். அதற்கு பதிலாக அன்சால்டட் கிரீம் சீஸ் பயன்படுத்தலாம். புளிப்பில்லாத தயிராய் ஒரு வெள்ளை துணியில் கட்டிவிட்டு, நீர் வடிந்ததும் கிடைக்கும் கெட்டித் தயிரை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம். இந்த வகை குக்கீஸ் கிடைப்பதும் கஷ்டம். நான் பயன்படுத்திய குக்கீஸ் வெனிலா மற்றும் அடுத்த லேயர் சாக்லேட் குக்கீஸ் ஆகும். சாஃப்ட் ப்ரெட் அல்லது வீட்டிலேயே செய்யப்படும் ஸ்பாஞ் கேக்கும் பயன்படுத்தி லேயர் போடலாம். விப் கிரீம் கிடைக்காதவர்கள் பாலில் சர்க்கரையையும், கஸ்டர்ட் பவுடரையும் கலந்து நன்கு திக்காக கொதிக்க வைத்து, பின் அதை நன்கு விஸ்க் செய்து பயன்படுத்தலாம். இடையில் நட்ஸ் லேயர் போட்டால் அருமையாக இருக்கும். நமக்கு பிடித்தமான முறையில் இதை மாற்றிக் கொள்ளலாம்.ரம்மி

மிகவும் பிடித்த கேக் வகைகளில் இதுவும் ஒன்று. ரம் சேர்த்தது தான் இது வரையில் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன். அதுவும் இல்லாமல் நான் சாப்பிட்டது எல்லாமே ரொம்பவுமே ஜூசியாக இருந்தது. நீங்கள் அருமையாக செய்து காட்டியிருக்கீங்க. குறிப்புகள் சூப்பர். அல்டர்நெடிவ் எல்லாம் அருமை. வாழ்த்துக்கள். ஒரு பீஸ் தான் இருக்கு, மிச்சம் எல்லாம் எங்கே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவி

நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

லாவி
இது எனக்கும் ஃபெவரிட்.சாப்பிட்ட நிறுத்த முடியாது :)
செய்வதும் ரொம்ப ஈசி. ஆல்கஹால் சேர்ப்பதால் வெளியே வாங்குவதை தவிர்த்துவிடுவோம்.
காஸ்ட்கோவில் நான் ஆல்கஹாலிக் திராமிசு கிடைக்கும்.வாங்கி பாருங்க..
ரொம்ப நன்றிங்க.. :) .. ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடனும். நீங்க சாப்பிடும் போது, வெளியேவே கொஞ்சம் வெச்சு இருந்திருப்பாங்க. மிச்சம் எல்லாம் காலி லாவி ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா

பார்க்க நல்லா இருக்கு :) ஆனா இதெல்லாம் நான் ட்ரை பண்ணதான் முடியாது. எனக்கு பதில் லாவி செய்து சாப்பிட்டுவாங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

tiramisu

ரம்யா எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..எப்ப பேக்கரி போனாலும் இதை வாங்கிடுவேன்..ஆமாம் ஆல்டர்னேடிவா என்ன செய்யலாம் என்று சொன்னது உபயோகமா இருக்கு...ரம்யான்னா சும்மாவா

வனி

வனி
மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தளி

தளி
அப்படியா? சேம் பின்ஜ்.
ட்ரை பண்ணனும்னா ஆல்டர்நேட் வெச்சு செய்து பாருங்க. ரொம்ப கஷ்டம் கிடையாது. நீங்க தான் சீஸ் கேக் செமையா செய்யும் ஆளாச்சே ;) .இதெல்லாம் சாதாரணம் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர்

ரொம்ப நல்லா வந்து இருக்கு.இங்க ஃபிரான்ஸ் லேயும் டீராமிசு பிரபலம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு ரம்யா

குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு ....படங்களும் நீட்டா 'பளிச்சினு 'இருக்கு !
மொத்தத்தில் ஆசைய கிளப்பி விட்டுடீங்க :)

ரம்யா

திராமிஸீ பார்க்கவே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு சூப்பர்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.