அரேபியன் முர்தபா

தேதி: September 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

மாவு தயாரிக்க:
மைதா - 2 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு சிட்டிகை
தண்ணீர் - பிசைய
ஃபில்லிங் செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மட்டன் கைமா - 50 கிராம்
முட்டை - 3
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

மைதாவில் வெண்ணெயை உருக்கி ஊற்றி, பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, இஞ்சி பூண்டு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் தனித்தனியே சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, கைமா கலவையில் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி கலக்கி வைக்கவும்.
மாவை உருண்டை போட்டு சமதளத்தில் வைத்து வளர்த்து, நடுவில் ஃபில்லிங் வைக்கவும்.
இருபுறமும் படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.
மடித்த முர்தபாவில் இருபுறமும் முட்டை தடவி, ஒரு தவாவில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுடவும்.
அரேபியன் முர்தபா ரெடி. முர்தபாவிற்கு ஃபில்லிங் இறால், சிக்கன், உருளைக்கிழங்கிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்ல டிஷ். நல்லா செய்து காட்டி இருக்கீங்க... வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முர்தபா சூப்பர்....
உங்க குறிப்பு எல்லாமே நல்லா இருக்கு...நீங்க எந்த ஊரு?

முர்தபா பாத்தாலே சூப்பரா இருக்கு... ரொம்ப வித்தியாச வித்தியாசமா குறிப்பு குடுக்குறீங்க வாழ்த்துக்கள். நீங்க சௌதியா? நான் சௌதில தான் இருக்கேன். அரேபியப் டிஷ் எல்லாம் குடுக்குறீங்களே அதான் கேட்டேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

முசி முர்தபா சூப்பர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமிர்க்கு நன்றி.
மிக்க நன்றி வனிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி சமீலா,நான் நாகூர் பக்கம் ஒரு கிராமம்.
நன்றி இந்திரா,நான் பிரான்ஸில் வசிக்கிரேன்.எங்க ஊர்ல இந்த அரபி முர்தபா பேமஸ்.
நன்றி சுவார்னா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நானும் france தாங்க. நீங்க எங்க இருக்கீங்க.

நான் garges les gonesse.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நான் rosny sous bois 93

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா முர்தபா அருமை.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி halila,என் பெயரை கரெக்டா எழுதியதர்க்கும் நன்றி,..கடைசி படம் அனுப்புவதில் ஒரு தவறு நடந்துவிட்டது.serving plate டுடன் கூடிய கடைசி படமும் வந்துஇருந்தால் இன்னும் நல்லா இருந்துஇருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Senju parthen sema taste. Thank u all

ரொம்ப நன்றி ஃப்ரியா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முர்தபா நல்லா இருக்குபா,நானும் என் குறிப்பில் இதை செய்து ஏற்கனவே அனுப்பியுள்ளேன்,முடிந்தால் போய் பாருங்கள்,ஒரு வித்தியாசம் மட்டும்தான்,நான் முட்டையை ஸ்டஃபிங்கின் மேல் ஊற்றுவேன்,நீங்கள் வெளியில் ஊற்றுகிறீர்கள்,நானும் ஃப்ரான்ஸில்தான் இருக்கிறேன்,நான் எவ்ரில இருக்கேன்பா.

Eat healthy

musi நீங்க நாகூர் பக்கம் என்ன ஊர் நானும் அங்குதான் அதான் கேட்டேன்

சாரி ரஸியா,உங்க பதிவை இப்பொ தான் நான் பார்த்தேன்.உங்க முர்தபா குறிப்பையும் பார்த்தேன்,எங்க பக்கமும் இப்படி தான் வெந்த பின்பு தடவுவார்கள்.முட்டை தவியே சுட்டால் நல்லா சாப்ட்டா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நிஷா,ஒரு கிராமம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

musi காரைக்காலுக்கும் நாகூரும் இடையில் பட்டினமா நிரவியா நானும் நல்லம்பல்தான் எனக்கு அம்மா ஊர் அதான் கேட்டேன் விருப்பமிருந்தால் சொல்லுங்கள்

தங்களின் முர்தபா செய்தேன் நன்றாக வந்தது... சுவையும் நன்றாக இருந்நது

தங்களின் முர்தபா செய்தேன் நன்றாக வந்தது... சுவையும் நன்றாக இருந்நது

thanks