fried rice

fried rice(or chilli parotta) செய்வது எப்படி?

Ingredients

Basmati rice – 2 cups
vegetables - cabbage,onion,beans,carrot,peas,spring onion,kodamilagai
ajinamoto - pinch
soya sauce – 2 spoons
ginger - garlic paste
green chillies - 3
salt
mustard seeds
clove - 1

PPN

Cook rice – for 2 cup rice add 4 cups of water
On the other side add butter in kadai add mustard, wait until it splutters, add clove, then add onions and fry till golden brown. Then add the ginger - garlic paste, chillies, and vegetables and cook it with salt. Then finally add ajinamoto and soya sauce (1 spoon). Finally mix with rice.

திருமதி. சந்தியா ரவி அவர்களுக்கு,

ஒரு பணிவான வேண்டுகோள். கேள்விகள் ஆங்கிலத்தில் இருப்பதால், நீங்களும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியம் அல்ல. கேள்வி கேட்பவர்கள், தமிழில் டைப் செய்ய இயலாத காரணத்தால் ஆங்கிலத்தில் கேள்விகளைப் பதிவு செய்து விடுகின்றனர். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டாலும், அவர்கள் அனைவருக்கும் தமிழ் நன்கு தெரியும் என்பது உண்மை. எனவே, தமிழில் நன்கு டைப் செய்யக் கூடிய தாங்கள் தமிழிலேயே பதில் அளித்தால், பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது உங்கள் ஒருவருக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. பலரும் இந்த தவற்றை செய்வதைப் பார்க்கின்றேன். இது பெரிய குற்றம் அல்ல. இருப்பினும், தமிழ் இணையத்தளத்தில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை நம்மால் இயன்ற அளவிற்கு குறைக்கப் பார்க்கலாம். தமிழில் இருந்தால் ஆங்கிலம் அறியாதவர்களும் புரிந்து கொள்ளுவதற்கு எளிதாக இருக்கும்.

நன்றி திருமதி. சந்தியா ரவி

பாஸ்மதி அரிசி - 1 கப்
மெலிதாக நீளமாக நறுக்கிய கேரட் - 1/4 கப்
மெலிதாக நீளமாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்
மெலிதாக நீளமாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் - 1/2 கப்
பச்சை பட்டாணி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய ப.மிளகாய் - 1/2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
வெள்ளை மிளகுதூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

1.பாஸ்மதி அரிசியை தண்ணீரில் களைந்து பின் தண்ணீரை முழுவதுமாக வடிகெட்டவும்.
2.பின் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
3.குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அரிசியை போட்டு லேசாக வறுத்து பின் 1 1/2 அல்லது 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
4.சாதம் வெந்த பின் தட்டில் கொட்டி ஆறவிடவும்.
5.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
6.பின் கேரட், பீன்ஸ், குடமிளகாய், பட்டாணி போட்டு வதக்கவும்.
7.காய்கறிகள் நன்கு வதங்கிய பின் வேகவைத்த சாதம், உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

குறிப்பு:
நீளமாக நறுக்கிய கோஸ், பேபிகார்ன், காலிபிளவர் போன்ற காய்கறிகளும் வதக்கும் போது சேர்க்கலாம்.
வெள்ளை மிளகுத்தூளுக்கு பதில் கருப்பு மிளகுத்தூள் சேர்க்கலாம்.

மிக்க நன்றி திருமதி. முத்துலக்ஷ்மி

செய்து பாருங்கள். மிகவும் சுலபமானது. நீங்கள் பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.

நீங்கள் பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி விஜய்

Hi, I tried U'r recipe it came out very well. t
Thanks for the post.

noodles eppadi seivathu

இந்தத் தொடர்பின் கீழ் பாருங்கள் கிருத்திகா.
http://www.arusuvai.com/tamil/recipes/268

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்